விஷ்ணுபுரம் விருது 2020 சுரேஷ்குமார இந்திரஜித்துக்கு

2020-ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித் அவர்களுக்கு வழங்கப்படும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. சுரேஷ்குமார இந்திரஜித் நாற்பதாண்டுகளாக எழுதிவரும் தமிழின் முதன்மையான படைப்பாளிகளில் ஒருவர். மாநில அரசுப்பணியில் இருந்து ஓய்வுபெற்றவர். மதுரையில் வசிக்கிறார். சுரேஷ்குமார இந்திரஜித்தின் ‘அலையும் சிறகுகள்’ 1982-இல் வெளிவந்தது. அந்தச் சிறிய சிறுகதைத் தொகுதி தமிழிலக்கியச் சூழலில் அவருக்கு ஓர் இடத்தை உருவாக்கி அளித்தது. சுரேஷ்குமார இந்திரஜித் 8 சிறுகதைத் தொகுதிகளும் கடலும் வண்ணத்துப்பூச்சிகளும் என்னும் நாவலும் எழுதியிருக்கிறார் கொரோனாச்சூழல் ஆதலால் விழா குறித்து...

Scroll to top