முகப்பு & செய்திகள்

விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் – அறிமுகம்

எழுத்தாளர் ஜெயமோகனால் இலக்கியத்தின் பால் ஈர்க்கப்பட்ட நண்பர்கள் ஒன்று கூடுவதன் மூலமாக 2009 இல் உருவானது விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் , உலகெங்குமுள்ள , பெரும்பாலும் இணையத்தால் இணைந்த நண்பர்கள் ஒன்று கூடியபோது பொதுவான ஆர்வம் ஜெயமோகனின் எழுத்துக்களாக இருக்கக் கண்டோம் ,

முதல் முயற்சியாக கோவையில் ஜெயமோகன் வாசகர் சந்திப்பு ஒன்றினை நிகழ்த்தினோம். நண்பர்களிடத்திலும், வாசகர்களிடத்திலும் கிடைத்த வரவேற்பு தொடர்ந்து இலக்கியக் கூட்டங்களை நடத்தும் உத்வேகம் தந்தது.

கவனம் பெறாத மூத்த எழுத்தாளர்களை கவுரவிக்கும் பொருட்டு விஷ்ணுபுரம் விருது வழங்கும் திட்டம் உருவானது.

இலக்கியக்கூட்டங்கள் நடத்துவது, கருத்தரங்குகள் நடத்துவது, வருடம்தோறும் இலக்கியவிருது வழங்குவது ஆகியவை இதன் செயல்பாடுகள்.

K.V. அரங்கசாமி பொறுப்பேற்று நடத்துகிறார்.

Scroll to top