விஷ்ணுபுரம் விருது

எழுத்தாளர் ஜெயமோகனால் இலக்கியத்தின் பால் ஈர்க்கப்பட்ட நண்பர்கள் ஒன்று கூடுவதன் மூலமாக உருவானது விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் , முதல் நிகழ்வாக ஜெயமோகனுடன் வாசகர்கள் சந்திப்பு நிகழ்வு கோவையில் நடத்தப்பட்டது , அடுத்ததாக கலாப்பிரியாவின் 60 அகவை நிறைவை முன்னிட்டு கலாப்பிரியா படைப்புக்களம் நிகழ்ச்சியும் கோவையில் நடத்தப்பட்டது , உதகையில் ஒரு கூடுகை நடத்த ஜெயமோகன் எண்ணிய போது ஒருங்கிணைக்க நண்பர்கள் உற்சாகமாக முன்வந்தனர்.

மிக நீண்ட விவாதங்களின் வழியாக இலக்கிய விருதுகள் கவுரவிக்க தவறிய தமிழ் இலக்கிய முன்னோடிகள் குறித்தும் , அவர்களின் பங்களிப்பு குறித்தும் ஜெயமோகன் தன் வருத்தங்களைத் தொடர்ந்து பேசி வருகிறார்.

இதுவரை நடத்திய நிகழ்சிகள் தந்த உற்சாகத்தில், நண்பர்கள் இணைந்து ஒரு விருதை ஏற்படுத்த முனைந்தோம் , நீண்ட ஆலோசனைகளுக்கும் விவாதங்களுக்கும் பிறகு அதற்க்கு ஜெயமோகனின் ஒப்புதல் கிடைத்தது.

1. விருது “விஷ்ணுபுரம் விருது” என்ற பெயரால் வழங்கப்படும்

2. வருடம் ஒரு இலக்கிய படைப்பாளிக்கு படைப்புக்காக அல்லது வாழ்நாள் பங்களிப்புக்காக வழங்கப்படும்

3. தற்பொழுது விருதுடன் ரூபாய் ஐம்பதாயிரம் வழங்கப்பட உள்ளது , நண்பர்களின் பங்களிப்பை பொறுத்து தொகை உயரக்க்கூடும்

4.  விருதுக்குரியவரின் தேர்வு ஜெயமோகன் அவர்களால் மட்டுமே செய்யப்படும்

5. விருது வழங்கும் விழா ஜெயமோகனின் பங்களிப்போடு ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதத்தில் தமிழகத்தின் முக்கிய நகரம் ஒன்றில் நடத்தப்படும்.

6. விருது விழாவின் போது விருதுக்குரியவரை பற்றிய புத்தகம் ஒன்றும் வெளியிடப்படும்.

தொடர்புக்கு : vishnupuram.vattam@gmail.com +91 94421 10123

Scroll to top