விஷ்ணுபுரம் விருது 2020 சுரேஷ்குமார இந்திரஜித்துக்கு

2020-ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித் அவர்களுக்கு வழங்கப்படும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

சுரேஷ்குமார இந்திரஜித் நாற்பதாண்டுகளாக எழுதிவரும் தமிழின் முதன்மையான படைப்பாளிகளில் ஒருவர். மாநில அரசுப்பணியில் இருந்து ஓய்வுபெற்றவர். மதுரையில் வசிக்கிறார்.

சுரேஷ்குமார இந்திரஜித்தின் ‘அலையும் சிறகுகள்’ 1982-இல் வெளிவந்தது. அந்தச் சிறிய சிறுகதைத் தொகுதி தமிழிலக்கியச் சூழலில் அவருக்கு ஓர் இடத்தை உருவாக்கி அளித்தது. சுரேஷ்குமார இந்திரஜித் 8 சிறுகதைத் தொகுதிகளும் கடலும் வண்ணத்துப்பூச்சிகளும் என்னும் நாவலும் எழுதியிருக்கிறார்

கொரோனாச்சூழல் ஆதலால் விழா குறித்து இப்போது முடிவெடுக்கவில்லை. சூழல் ஒத்துழைக்கவில்லை என்றால் டிசம்பரில் இணையத்திலேயே விழா நடத்தப்படும். சூழல் மேம்பட்டபின் இன்னொரு நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்படும்.

விஷ்ணுபுரம் விருது என்பது ஒரு படைப்பாளியை முழுமையாக அணுகியறிவதற்கான ஒரு காலகட்டத்தை உருவாக்குதலை முதன்மைநோக்கமாகக் கொண்டது. வரும் மாதங்களில் சுரேஷ்குமார இந்திரஜித் மீது வாசகர்களின் கவனம் குவியவேண்டும் என கோருகிறோம்

விஷ்ணுபுரம் நண்பர்கள்

சுரேஷ்குமார இந்திரஜித் நூல்கள்

லகளந்தோனை அளக்கும் கரப்பான்- சுரேஷ்குமார இந்திரஜித்தின் படைப்புலகம்- சுனில் கிருஷ்ணன்

சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ்- பதாகை

சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ்: அறிமுக கட்டுரை- நரோபா

சுரேஷ்குமார இந்திரஜித் பற்றி

சுரேஷ்குமார இந்திரஜித் பேட்டி

சுரேஷ்குமார இந்திரஜித் கதைகள் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to top