குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது 2018
மறைந்த கவிஞர் குமரகுருபரன் நினைவாக அளிக்கப்படும் குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது குமரகுருபரன் பிறந்தநாளான ஜூன் 10 அன்று சென்னையில் வழங்கப்படவுள்ளது. தமிழ் புதுக்கவிதைத்தளத்தில் செயல்படும் இத்தலைமுறைக் கவிஞர்களில் முக்கியமானவரான கண்டராதித்தன் அவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தைச் சேர்ந்த கண்டராதித்தனின் இயற்பெயர் இளங்கோ. இதழியலாளர்.
- கண்டராதித்தன் கவிதைகள் (2002)
- சீதமண்டலம் (2009)
- திருச்சாழல் (2015
என மூன்று தொகுதிகள் வெளியாகியிருக்கின்றன.

ஐம்பதாயிரம் ரூபாய் பரிசும் நினைவுச்சின்னமும் அடங்கியது இவ்விருது. இவ்வருடம் மூத்த கவிஞர் கலாப்ரியாவும் மலையாளக் கவிஞர் டி.பி.ராஜீவனும் இணைந்து விருதை வழங்கிச் சிறப்பிக்கிறார்கள். விழாவில் எழுத்தாளரும், திரைக்கதை ஆசிரியருமான அஜயன்பாலா வாழ்த்துரை வழங்குகிறார். காளிப்பிரசாத், ஜெயமோகன் ஆகியோர் பேசுகிறார்கள். கண்டராதித்தன் ஏற்புரை வழங்குகிறார்




நாள்: 10 – ஜூன் – 2018
இடம்: ஏ.பி.ஆர். ஹால், எண் 9 துரைசாமி சாலை, வடபழனி, [தபால் அலுவலகம் எதிரில்]
பொழுது மாலை 6.00
நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்
தொடர்புக்கு
சௌந்தர் 9952965505 , 7904027280
email soundar_rajang@yahoo.com
ராஜகோபாலன் 9940235558
email rjgpal20@gmail.com
==================================================
APR HALL
9, DURAISAMY ROAD
VADAPALANI
OPPOSITE TO POST OFFICE
————————————————————————————-
விழா அன்றே மாலை 3.00 மணி முதல் 5.30 வரை நவீனநாவல் குறித்த ஓர் விவாத அரங்கு நிகழும். எழுத்தாளர் விஷால்ராஜா பேசுகிறார்
அவருடைய பேச்சின்மீது எழுத்தாளர் சுனீல்கிருஷ்ணன், விமர்சகர் சிவமணியன் ஆகியோர் எதிர்வினையாற்றுகிறார்கள். விழாவிலும் விவாதத்திலும் பங்குகொள்ள அனைவரையும் அழைக்கிறோம்