- வாசகர் சந்திப்பு 27-Jul-2010
இந்தமுறை பருவமழைப்பயணத்துக்காக பெரியாறு வனத்தில் இரவு அறையில் பேசிக்கொண்டிருந்தபோது நண்பர் அரங்கசாமி ஓர் எண்ணத்தை சொன்னார். ஏதாவது ஒரு இடத்தில் நண்பர்கள் சந்தித்து தொடர்ச்சியாக உரையாடும் ஒரு மூன்றுநாள் சந்திப்பை நிகழ்த்தலாம் என்று. அது கடிதம் மூலம் பரஸ்பர அறிமுகம் கொண்ட என் நண்பர்கள் ஒருவரை ஒருவர் அறிவதற்காக மட்டுமல்லாமல் ஆழமான ஓர் உரையாடல் நிகழ்ச்சியாகவும் இருக்கவேண்டும். ஏனென்றால் வாசிப்பு என்ற அனுபவம் போலவே நேர்ச்சந்திப்பும் உரையாடலும் ஆழமான புரிதல்களை உருவாக்கக் கூடியது.
பலவருடங்களாக நான் தமிழ்-மலையாளக் கவிதை ...
- ஊட்டி காவிய முகாம் – சந்திப்பு குறித்து 04-Aug-2010
ஊட்டிசந்திப்பு பற்றி நிறைய சந்தேகங்கள் வந்தன. ஆகவே ஒரு பொது விளக்கம்.
ஊட்டி சந்திப்பு குறித்த அறிவிப்பு வந்தபின் ஐம்பது பேருக்குமேல் இதுவரை வருவதாகச் சொல்லியிருக்கிறார்கள். வரலாமா என்று மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி மூலம் கோரியவர்களை பரிசீலித்தபின் அவர்களை அழைத்திருக்கிறோம். ஐம்பது என்ற எண்ணிக்கையே எங்களுடைய அதிக பட்சம். ஆகவே மேற்கொண்டு எவரும் வருகையை தெரிவிக்க வேண்டாம் என்று கோருகிறோம். இடவசதி உணவு ஏற்பாடு வசதி முதலியவற்றைக் கருத்தில்கொண்டே இந்த முடிவு என்பதை புரிந்துகொள்ளும்படி கோருகிறோம்.
வருவதாக்ச் சொன்னவர்கள் தங்கள் ...
- ஊட்டி காவிய முகாம் – சந்திப்பு அலைகள்… 01-Sep-2010

ஊட்டி சந்திப்புக்குக் கிளம்புவதற்கு முன்னர் மலையாள இயக்குநரும் எழுத்தாளருமான மதுபாலிடம் பேசினேன். ‘எதற்காக இந்த கூட்டத்தை நடத்துகிறீர்கள்?’ என்று கேட்டார். ‘வழக்கமாக அமைப்புகள்தான் இம்மாதிரி சந்திப்புகளை நிகழ்த்தும். தனிஎழுத்தாளர்கள் நடத்துவதில்லை’’
நான் சொன்னேன், ‘ஆம். அது உண்மை. ஆனால் தமிழ்நாட்டில் எனக்குமுன்னர் பலர் ஏற்பாடுசெய்திருக்கிறார்கள். சுந்தர ராமசாமி பல அரங்குகளை ஒருங்கிணைத்திருக்கிறார். கலாப்ரியா நிகழ்த்தியிருக்கிறார். க.நா.சு சில அரங்குகளை ஒருங்கிணைத்திருக்கிறார். மிகச்சிறந்த முன்னுதாரணம் என்றால் மலையாள சிந்தனையாளர் எம்.கோவிந்தன். அவர் மிகவெற்றிகரமான பல கூடுகைகளையும் மிகப்பெரிய மாநாடுகளையும் தன் ...
- ஊட்டி காவிய முகாம் – பதிவு-1 02-Sep-2010
ஊட்டி சந்திப்பில் பங்கு கொள்வதற்காக மலேசியாவில் இருந்து விமர்சகர் யுவராஜன் 24 ஆம் தேதியே திருவனந்தபுரம் வழியாக எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார். அவருக்கும் சேர்த்து பேருந்தில் பயணச்சீட்டு பதிவுசெய்திருந்தேன். அருண்மொழியும் சைதன்யாவும் கூடவந்தார்கள். மாலை ஆறரை மணிக்கு பேருந்து. மிகச்சோம்பலாக ஊர்ந்து, நடுவே உல்லாசமாக பல இடங்களில் நின்று, மறுநாள் எட்டரை மணிக்கு ஊட்டிக்குக் கொண்டு சேர்த்தது.
ஊட்டியில் நல்ல காலநிலை என்று நிர்மால்யா சொல்லியிருந்தார். முந்தையநாள் இரவில் மழைபெய்திருந்த எச்சங்கள் தெருவில் இருக்க இளம் குளிர். ஆட்டோ பிடித்து ...
- ஊட்டி காவிய முகாம் – பதிவு -2 04-Sep-2010
ஊட்டிக்குளிர் நெடுநேரம் ஊக்கமுடன் விவாதிக்கவும் சிந்திக்கவும் ஏற்றது. சட்டென்று நம்மை களைப்புறச் செய்வதில்லை. ஆகவே பொதுவாக ஊட்டி கருத்தரங்கு நிகழ்ச்சிகளை இரவு பத்து மணி வரைக்கும் நீட்டிப்பது வழக்கம். ஒருநாளில் சராசரியாக மூன்று அரங்குகளிலாக பத்து மணிநேரம் விவாதம் என்பதே வழக்கம். நம் தீவிரமான கருத்தரங்குகளில்கூட இத்தனை நீண்ட அரங்குகள் இருப்பதில்லை.
பலருக்கு அவர்களின் கல்விக்காலம் தாண்டியபின்னர் இத்தகைய அரங்குகள் பழக்கமும் இருப்பதில்லை. பொதுவாக சாதாரணமாக ஒருவரால் அதிகபட்சம் இரண்டு மணிநேரம் மட்டுமே எதையும் கவனிக்க முடியும். ஒருநாளில் ...
- ஊட்டி காவிய முகாம் – பதிவு -3 05-Sep-2010
சங்கப்பாடல் அரங்கில் கவிஞரும் விமர்சகருமான க.மோகனரங்கன் மூன்று சங்கப்பாடல்களை வாசித்தார். அவரது கவிதைகள் போலவே இறுக்கம், மிதமான மறைமுக உணர்ச்சி வெளிப்பாடு ஆகியவை கொண்ட கவிதைகளாக அமைந்தன அவை.
காலே பரிதப்பினவே கண்ணே
நோக்கி நோக்கி வாளிழந்தனவே
அகலிரு விசும்பின் மீனினும் பலரே
மன்ற இவ்வுலகத்து பிறரே!
வெள்ளிவீதியார் எழுதிய இந்த குறுந்தொகைக் கவிதை பிரிவை தீவிரமாக வெளிப்படுத்திய ஆக்கம். இங்கே தலைவி தன் காதலனுடன் உடன்போகிறாள். அவள் பிரிவை எண்ணி துயருற்று தேடிச்செல்லும் செவிலித்தாய் பாடியதுபோல அமைந்த பாடல் இது. ‘கால்கள் ...