- காந்தளூர்ச்சாலையின் கலைஞன் 09-Nov-2010
ராஜராஜசோழனின் மெய்கீர்த்திகளில் முக்கியமானது ‘காந்தளூர்ச்சாலை கலமறுத்தளி’ என்ற புகழ்மொழி. ராஜராஜன் பதவி ஏற்ற நான்காவது ஆட்சி ஆண்டிலிருந்து (கி.பி. 988) இந்த அடைமொழி இராஜராஜனின் கல்வெட்டுகளில் காணப்படுகிறது. ’காந்தளூர்சாலை கலமறுத்தளிய கோராஜகேசரி வன்மரான ஸ்ரீ ராஜராஜ தேவன்” “காந்தளூர்ச் சாலை கலமறுத்தருளிய ஸ்ரீ ராஜராஜ தேவன்” என்று அவர் குறிப்பிடப்படுகிறார். இந்த காந்தளூர்ச்சாலை என்பது என்ன என்பதைப்பற்றி சோழவரலாற்றாசிரியர்கள் நடுவே தொடர்ச்சியான விவாதம் நடந்து வந்துள்ளது. அத்தனை முக்கியமான ஒரு வெற்றியாக அது குறிப்பிடப்படுவதனால் அது சேரநாட்டில்
- தெருவெனும் ஆட்டம் 13-Nov-2010
ஒரு தெருவை எப்படி வர்ணிப்பது? தமிழிலக்கியத்தின் பிரபலமான வர்ணனைகளை நினவுகூரலாம். புதுமைப்பித்தன் ஒற்றையடிப்பாதை இட்டுச்செல்லும் திருநெல்வேலி சிற்றூர்களை வர்ணித்திருக்கிறார். தி.ஜானகிராமன் காவேரிக்கரையை காட்டியிருக்கிறார். சுந்தர ராமசாமி புளியமரத்து சந்திப்பை விவரித்திருக்கிறார். கி.ராஜநாராயணன் கரிசல்காட்டை பிரியமாக சித்தரித்திருக்கிறார் இந்த சித்தரிப்புகளுக்கு உள்ள பொது அம்சம் என்னவென்றால் இவையெல்லாமே அபூர்வமானவை என்பதே. அல்லது இக்கலைஞர்கள் அந்த யதார்த்ததில் இருந்து ஓர் அபூர்வத்தன்மையைக் கண்டடைந்தது அதை முன்வைத்து அந்தச் சித்திரத்தை நம் மனதில் அழியாமல் உருவாக்குகிறார்கள். இலக்கிய விவரிப்பின் நுட்பமே அதுதான்.
- தெரு மனிதர்கள் 14-Nov-2010
ஆ.மாதவனின் தெருமனிதர்கள் பெரும்பாலும் அடித்தள மக்கள். மிகக்குறைவாக வணிகர்கள். அதைவிடக்குறைவாக அவர்களின் குடும்ப உறுப்பினர்கள். இந்த மக்களின் வாழ்க்கையை சித்தரிப்பதன் வழியாக அவர் உத்தேசிப்பதென்ன? ஒரு நல்ல கலைஞன் ஒருபோதும் ஒரு பகுதி வாழ்க்கையை ஒரு துண்டு வாழ்க்கையைச் சொல்ல முற்பட மாட்டான். அவன் சொல்ல விழைவது வாழ்க்கையை. அதற்கான முகாந்திரமாக, அதற்கான உதாரணமாகவே அவன் அந்த வெட்டிஎடுக்கப்பட்ட வாழ்க்கையை கையாள்கிறான். கடைத்தெருவைச் சித்தரிப்பதல்ல ஆ.மாதவனின் இலக்கு. கடைத்தெரு மேல் அவருக்கு எந்தவகையான சமூகவியல் சார்ந்த ஆர்வமும்
- விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா -2010 கோவையில் 18-Nov-2010
டிசம்பர் 19 2010 அன்று மாலை 5 மணிக்கு கோவை பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரி கலையரங்கில் நிகழும்.
தலைமை: கோவை ஞானி – விமர்சகர்.
வரவேற்புரை : பேராசிரியை எம்.ஏ.சுசீலா.
விருது வழங்குபவர் :டாக்டர் புனத்தில் குஞ்ஞப்துல்லா
நூல் வெளியீடு: மணிரத்தினம் – இயக்குநர்.
வாழ்த்துரை : நாஞ்சில்நாடன்,வேதசகாயகுமார்- ஜெயமோகன்
அழைப்பிதழ் : http://goo.gl/WawZu - விஷ்ணுபுரம் விருது, விழா 20-Nov-2010
மதிப்பிற்குரிய திரு. ஜெயமோகன் அவர்களுக்கு ! விஷ்ணு புரம் இலக்கிய விருது விழா பற்றிய விபரங்களையும் அழைப்பிதழையும் கண்ணுற்றேன். போற்றத்தக்கதொரு விஷயத்தை முன்கைஎடுத்து நடத்திச் செல்கிறீர்கள். நல்லதொரு முயற்சி என்று சாதாரணமாக பாராட்டிவிட்டு போவது மிக அபத்தமான செயலென்று அறிவேன். இதன் பின்னணியில் உள்ள உங்களின் தீவிரமான உழைப்பை என்னால் ஊகிக்க முடிகின்றது.இந்த சந்தர்ப்பத்தில் என்னால் என்ன ஆகக்கூடும் என்ற எண்ணம் எழுகின்றது. உங்கள் ஒவ்வொரு முயற்சியும் வெற்றி பெற பிரார்த்திப்பது அல்லாது வேறு என்ன செய்ய?
- விஷ்ணுபுரம் விருது, விழா 20-Nov-2010

- திராவிட இயக்கத்தில் இருந்து நவீனத்துவம் வரை…ஆ.மாதவன் பேட்டி 27-Nov-2010
உங்கள் குடும்பப் பின்புலம் என்ன? அம்மா அப்பாவின் சொந்தஊர், பூர்வீகம்? ஏனென்றால் நீங்கள் திருவனந்தபுரத்தைப்பற்றி மட்டுமே எழுதும் எழுத்தாளர்… என் அப்பா ஆவுடைநாயகம் பிள்ளை. செங்கோட்டைக்காரர். அவரது அப்பா சோமசுந்தரம் பிள்ளை காலத்திலேயே திருவனந்தபுரம் வந்துவிட்டார்கள். சோமசுந்தரம்பிள்ளை கலால் காண்டிராக்டராக நிறைய சம்பாத்தியமெல்லாம் பண்ணி தோட்டம் துரவுகளோடு இங்கே ஜகதி என்ற இடத்தில் பெருந்தனக்காரராக வாழ்ந்தவராம். அவருக்கும் அந்தக்கால மரபுப் படி இரண்டு மனைவியர். மூத்ததாரத்தின் மூத்தமகன் ஆவுடை நாயகம். இளைய தாரத்திலும், இரண்டோ மூன்றோ சந்ததிகள்.
- திராவிட இயக்கத்தில் இருந்து நவீனத்துவம் வரை…ஆ.மாதவன் பேட்டி 2 28-Nov-2010
திராவிட இயக்கத்தின் அறிவுப்புலத்தில் உருவானவர் நீங்கள்…அந்த தாக்கம் உங்கள் எழுத்தில் எந்தவகையில் நீடிக்கிறது? நான் எழுதும் நடை என்பது முதலில் திராவிட இயக்கத்தில் இருந்து ஊக்கம் பெற்றுக்கொண்டதே. அந்த இயக்கத்தின் மொழிநடையின் சிறந்த அம்சங்களை மட்டுமே நான் எடுத்துக்கொண்டேன். திராவிட இயக்க அழகுத் தமிழ் வீச்சும், லா.ச.ராமமிருதம், தி. ஜானகிராமன், புதுமைப்பித்தன் போன்றவர்களது இலக்கிய நடையழகும்சேர்ந்ததொரு தத்துவமயக்க எழுத்து நடை எனது ஆரம்பகாலக் கதைகளில் பாலில் தண்ணீர் கலப்பு போல வந்தமைந்திருந்தது. உதாரணத்திற்கு, ‘பாம்பு உறங்கும் பாற்கடல்’,
- திராவிட இயக்கத்தில் இருந்து நவீனத்துவம் வரை…ஆ.மாதவன் பேட்டி 3 29-Nov-2010
திருவனந்த புரம் தமிழ்ச்சங்கம் இன்று ஒரு முக்கியமான அமைப்பு. அதன் பணிகளில் நீங்கள் முக்கியப்பங்கு ஆற்றியிருக்கிறீர்கள் இல்லையா? தமிழ் இலக்கிய வாழ்வில், நான் பெற்ற பயன் திருவனந்தபுரம் தமிழ்ச்சங்க தொடர்பு. 1963ஆம் ஆண்டில் ஒரு சிமிண்டு கிட்டங்கியின் மாடியறையில் ஆரம்பித்து இன்றைக்கெல்லாம் நாற்பத்திநான்கு ஆண்டு கடந்து விட்ட நிலையில் மூன்று மாடி உயர்கட்டிடமாக வளர்ந்துநிற்கிறது. பதினாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் நூற்களைக் கொண்டு நகரின் பெரியதோர் நூலகமாகவும் கலாச்சார அரங்கமாகவும் சிறந்து விளங்குகிறது. சங்கவெளியீடாக 1978ல் “கேரளத்தமிழ்” தொடங்கப்பட்ட
- விஷ்ணுபுரம் விழா பதிவுகள் 09-Dec-2010
திருவனந்தபுரம் நகரின் சாலைத் தெருவில் கடை நடத்தி வரும் திரு மாதவன், அந்தத் தெருவைப் பின்புலமாகக் கொண்டே தனது பெரும்பான்மையான கதைகளை அமைத்திருப்பதால் ’கடைத்தெருவின் கதைசொல்லி’யாக விமரிசகர்களால் சுட்டிக் காட்டப்படுபவர். http://www.masusila.com/2010/12/blog-post_07.html மனதிற்குள் புகுந்து மாயம் பண்ணுகிற மகத்தான கதைசொல்லி ஆ.மாதவன். சிறுகதைகளாலும், நாவல்களாலும் இம்மொழிக்கு அழகு செய்த மூத்த படைப்பாளி. இவருக்கு சொல்லிக்கொள்ளும்படியான அங்கீகாரம் எதுவும் இதுவரை கிடைக்கப்பெற்றதில்லை. விருது லாபிக்களில் விருப்பம் கொள்ளாத ஆத்மா. இத்தகைய புறக்கணிப்புகள் எது குறித்தும் அலட்டிக்கொள்ளாத ஆ.மாதவனுக்கு இந்த
- விஷ்ணுபுரம் இலக்கிய விருது கடிதங்கள் 12-Dec-2010
அன்பிற்குரிய ஜெயமோகன், வணக்கம். பெருமாள்முருகன். சமீபகாலமாக இணையத்தைக் கொஞ்சமாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளேன். விஷ்ணுபுரம் விருது ஆ.மாதவன் அவர்களுக்கு வழங்க உள்ள செய்தி கண்டேன். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆ.மாதவனின் எழுத்துக்களில் எனக்கும் ஈடுபாடு உண்டு. இத்தகைய விருது ஒன்றை உருவாக்கியமைக்கும் முதலில் ஆ.மாதவன் அவர்களைத் தேர்வு செய்தமைக்கும் பாராட்டுக்கள். உங்கள் செயல்பாடு பேருவகை தருகிறது. அன்புடன் பெருமாள்முருகன், www.perumalmurugan.blogspot.com நாமக்கல் ‘கூடு’ அன்புள்ள பெருமாள் முருகன், உங்கள் கடிதம் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. வெறும் ஒரு நண்பர்

- மாதவம் 12-Dec-2010
ஆ.மாதவனை நான் 1985 டிசம்பரில் முதன்முதலாகச் சந்தித்தேன். சுந்தர ராமசாமியைச் சந்தித்து கிட்டத்தட்ட ஏழுமாதங்கள் கழித்து. சுந்தர ராமசாமிதான் எனக்கு மாதவனின் படைப்புகளை அறிமுகம்செய்தார். ‘மாதவனை நீங்க சந்திக்கலாம்…அதுக்கு முன்னாடி அவரோட ரைட்டிங்ஸை படிச்சிடணும். படிக்காம ஒரு ரைட்டரைச் சந்திக்கிறது தப்பு’ என்றார். நான் சுந்தர ராமசாமியிடமிருந்து கிருஷ்ணப்பருந்து நாவலையும் ஆ.மாதவன் கதைகள், கடைத்தெருக்கதைகள் என இரு தொகுதிகளையும் வாங்கிச்சென்றேன். ஆ.மாதவன் கதைகளுக்கு சுந்தர ராமசாமி முன்னுரை எழுதியிருந்தார். கதைகள் கலைகள் சிறுகதைகள் என்ற அந்த முன்னுரை
- மாதவம் 2 13-Dec-2010
‘முன்னாடி ஒரு ராஜா டாக்ஸ் போடுறதுக்கு நேரா அவரே கடைத்தெருவுக்கு போனாராம். ஒவ்வொரு கடையா ஏறி என்ன லாபம் வருதுன்னு கேட்டிருக்கார். ஒருத்தன் பத்து பர்செண்டுன்னு சொன்னான். அவனுக்கு இருபத்தஞ்சு பர்செண்ட் டாக்ஸ். இன்னொருத்தன் அஞ்சு பர்செண்டுன்னான். அவனுக்கு இருபது பர்செண்ட் டாக்ஸ்…கடைசியா ஒரு வியாபாரி சொன்னான். ’து என்ன ராஜா செத்த வியாபாரம். ஏதோ தம்பிடிக்குத் தம்பிடி லாபம் வந்திட்டிருக்கு, பொழைப்பு ஓடுது’ ராஜா ‘சேச்சே பிச்சைக்காசு வியாபாரம்’னு விட்டுட்டு போய்ட்டாராம்’ சுந்தர ராமசாமி சிரித்தார்.
- ஆ.மாதவனுக்கு விருது: அ முத்துலிங்கம் 13-Dec-2010
ஆ.மாதவனுக்கு விஷ்ணுபுரம் இலக்கிய விருது வழங்கும் விழா கோவையில் வரும் 19 அன்று மாலை ஐந்து மணிக்கு நடைபெறுகிறது. அதைப்பற்றி என் பெருமதிப்புக்குரிய அ.முத்துலிங்கம் அவர்கள் எழுதிய குறிப்பு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது ஆ.மாதவனின் படைப்புகளில் நான் முதலில் படித்தது ‘கிருஷ்ணப் பருந்து’ நாவலைத்தான். அது இருபது வருடங்களுக்கு முன் என நினைக்கிறேன். நான் அப்பொழுது பாகிஸ்தானின் பெஷவார் நகரத்தில் வேலையாக இருந்தேன். இந்தியாவில் இருந்து ஒரு நண்பர் நான் கேட்டதன் பேரில் இந்த நாவலை

- விஷ்ணுபுரம் இலக்கிய விருது இந்து செய்தி 14-Dec-2010
அன்புள்ள ஜெ , ‘இந்து ‘ ஆங்கில நாளிதழ் ஆ.மாதவனுக்கு விஷ்ணுபுரம் விருது கிடைத்திருப்பதைப்பற்றி வெளியிட்ட செய்தியை இணைத்துள்ளேன், அரங்கசாமி Writer selected for award – The Hindu CHENNAI: Tamil writer A. Madhavan, who was inspired by the ideals of the Dravidian movement and the style of its writers, and combined it with naturalistic writing, has been selected for the first
- ஆ.மாதவன், தி ஹிண்டு சென்னை 15-Dec-2010
விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் வழங்கும் விஷ்ணுபுரம் இலக்கிய விருது ஆ.மாதவன் அவர்களுக்கு அளிக்கப்பட்டிருப்பதைப்பற்றி விரிவான செய்தி தி ஹிண்டு சென்னை பதிப்பில் வெளியாகியிருக்கிறது A. Madhavan selected for Vishnupuram Literary Award ஆ.மாதவனுக்கு விருது: அ முத்துலிங்கம் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் – இணையதளம்

- விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா 2010 17-Dec-2010
ஆ. மாதவன் அனேகமாக தினமும் ஃபோனில் கூப்பிட்டு ‘நான் சபரி எக்ஸ்பிரஸிலே கோயம்புத்தூருக்கு வாரேன் கேட்டேளா?’ என்று சொல்லிக்கொண்டிருந்தார். செல்லில் அவர் பெயரை பார்த்ததுமே ‘ஆ.மாதவன் தாத்தா சபரி எக்ஸிபிரஸிலே வாரதா சொல்றதுக்காக கூப்பிடுறார்’ என்று சைதன்யா கத்துமளவுக்கு. அவர் அதிகமாகப் பயணம் செய்வதில்லை. இப்போது வயோதிகம் வேறு. பதினாறாம்தேதி காலையில் தமிழ்மகன்
- ஆ.மாதவன் கடிதங்கள் 18-Dec-2010
அன்புள்ள ஜெ ஆ.மாதவனைப்பற்றிய உங்கள் நீண்ட கட்டுரையும் அவரது மனம்திறந்த பேட்டியும் மிக முக்கியமானவை. ஆ.மாதவனைப்பற்றிய விரிவான அறிமுகத்தை அவை அளித்தன. ஒரு படைப்பாளிக்கு விருதளிக்கும்போது அதை ஒரு சந்தர்ப்பமாகக் கொண்டு அவரை விரிவாக அறிமுகம் செய்யவும் ஆராயவும் நீங்கள் முயற்சி எடுத்துக்கொள்வது ஆரோக்கியமானது. விருதுகள் இப்படித்தான் அமையவேண்டும். ஆ.மாதவன் பேட்டியிலே நீங்கள் கேட்க மறந்த ஒரு கேள்வி. அவர் மலையாளம் படித்து கேரளத்திலே வாழ்பவர். நீங்கள் தமிழகத்தில் இருப்பதைப்போல. அவர் ஏன் மலையாளத்திலே எழுதாமல் தமிழிலே
- கடைத் தெருவின் கலைஞன், முன்னுரை 19-Dec-2010
ஆ.மாதவன் நவீனத் தமிழிலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர். நம்முடைய இயல்புவாத எழுத்தின் சாதனைகளில் ஒன்று அவரது புனைவுலகம். கண்முன் நிகழும் அன்றாட யதார்த்தத்தை ‘அப்பட்டமாக’ சொல்லும் பாவனை கொண்ட இவ்வெழுத்து நம் சமூகப்பிரக்ஞைகளை ஓங்கி அறைந்து அதிரச்செய்திருக்கிறது. அடிப்படை வினாக்களை நோக்கி நம்மை செலுத்தியிருக்கிறது. ஆ.மாதவன் திருவனந்தபுரம் சாலைத்தெருவை களமாகக் கொண்டு எழுதியவர். சாலைத்தெரு அவரது எழுத்தில் காமகுரோதமோகங்களின் கொந்தளிப்பு நிகழும் வாழ்க்கைவெளியாகவே ஆகிவிட்டிருக்கிறது. ஆ.மாதவன் தமிழின் தேர்ந்த இலக்கியவாசகர் நடுவே எப்போதும் முக்கியமான படைப்பாளியாகவே கருதப்பட்டிருக்கிறார். ந.பிச்சமூர்த்தி
- விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா பதிவுகள் 21-Dec-2010
விஷ்ணுபுரம் விழா குறித்த பல்வேறு பதிவுகள், எனக்கு அனுப்பப்பட்டவை. விஷ்ணுபுரம் விருது விழா டைம்ஸ் ஆஃப் இண்டியா செய்தி விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட விருது விஷ்ணுபுரம் விருது விழா தினமணி செய்தி பிக்காஸா புகைப்படங்கள்
- விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா கடிதம் 23-Dec-2010
அன்புள்ள ஜெ நான் விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழாவுக்கு வந்திருந்தேன். அதற்கு முன்னர் உங்கள் அறைக்கும் வந்திருந்தேன். நான் எதுவுமே பேசவில்லை. சும்மா வேடிக்கைதான் பார்த்துக்கொண்டிருந்தேன். காரணம், நான் அதிகமாக நூல்களை வாசித்தவனல்ல. சமீபகாலம்வரை நான் பாலகுமாரன் நூல்களைத்தான் வாசித்துக்கொண்டிருந்தேன். நான் வாசித்த முக்கியமான நூல் நாஞ்சில்நாடன் எழுதிய எட்டுத்திக்கும் மதயானை. என்னை மிகவும் கவர்ந்த நாவல் அது. உங்களுடைய ஏழாமுலகம் கன்னியாகுமாரி ஆகிய நாவல்களை வாசித்திருக்கிறேன் அன்றையதினம் இலக்கிய ஜாம்பவான்கள் எல்லாரும் சேர்ந்து அமர்ந்து சிரிப்பும்
- விஷ்ணுபுரம் விருது விழா 26-Dec-2010
அன்புமிக்க ஜெயமோகன் மிகுந்த மகிழ்ச்சியுடன் இந்த முதல் கடிதம் எழுதுகிறேன். முதல் காரணம் விஷ்ணுபுரம் விருது விழாவில் முதல் முறை தங்களுடன் கைகுலுக்கி என்னை உங்கள் வாசகன் என்று பெருமையுடன் அறிமுகம் செய்துகொண்டது. இரண்டாவது காரணம் எப்படி மிகப்பெரிய சுந்தரராமசாமி தங்களுக்கு ஆ.மாதவனை அறிமுகம் செய்து வைத்தாரோ அதுபோல எங்களுடைய மிகப்பெரிய ஜெயமோகன் அதே ஆ.மாதவனை இவ்வளவு பக்கத்தில் பார்த்துப்பேச ஏற்பாடு செய்தது. உங்களுடைய கட்டுரைகள் வழியாகவே மாதவனைப் பற்றி மிகப்பெரிய பிம்பம் மனதில் விழுந்துவிட்டது. அதன்
- விஷ்ணுபுரம் இலக்கிய விருது கடிதங்கள் 29-Dec-2010
அன்புள்ள ஜெமோ, //’ரொம்ப நிறைவா இருக்கு. இவ்ளவு கூட்டம் இவ்ளவு அருமையாக் கவனிக்கிற கூட்டம் பாத்து ரொம்ப நாளாச்சு’ என்றார். ‘விருது எல்லாத்தையும் விட இலக்கியம் வாசிக்க இவ்வளவு இளைஞர்கள் வந்து உக்காந்து நாளெல்லாம் பேசிட்டிருக்கிறதப் பாக்கப் பாக்க மகிழ்ச்சியா இருந்தது… அந்தக் காலத்திலே கல்யாணக் கச்சேரின்னு சொல்லுவாங்க. கல்யாணத்துக்கு வந்தவங்க அம்பதுபேரு நூறுபேரு ஹாலிலே உக்காந்து அரட்டை அடிப்பாங்க. ஒரே சிரிப்பும் கும்மாளமுமா இருக்கும். இப்ப அப்டி கல்யாணம் இல்லை… ஒரு கல்யாணக் கச்சேரியிலே இலக்கியவாதிகள்

- கடிதங்கள் 12-Jan-2011
அன்புள்ள ஜெயமோகன், அண்மையில் தஞ்சைப் பயணம் சென்றிருந்தேன். உங்கள் தஞ்சைப் பயணம் குறித்த கட்டுரைகளால் உந்தப்பட்டது ஒரு முக்கிய காரணம். நீங்கள் சென்ற இடங்கள் அனைத்திற்கும் செல்ல இயலவில்லை எனினும், நாங்கள் சென்றவை அனைத்தும் நீங்கள் சுட்டிக்காட்டியவை. குடுமியான்மலை, தாராசுரம், கொடும்பாளூர் ஆகிய அற்புதமான இடங்களுக்குச் செல்ல ஆர்வமூட்டியதற்கு என் நன்றிகள். மூன்று ஆண்டுகளாய் உங்கள் பதிவுகளைத் தொடர்வதன் விளைவாய், இந்த வருடம் நான் வாங்கிப் படித்துக்கொண்டிருக்கிற பல புத்தகங்களும், நீங்கள் அடையாளம் காட்டியவை…நாஞ்சில் நாடன், ஆ.மாதவன்,
- ஆ.மாதவன் விஷ்ணுபுரம் விருது 2010- நினைவுகள் 17-Dec-2015
வெறும் ஐந்தாண்டுகள்தான் ஆகின்றன. நினைவுகளில் அவை எங்கோ உள்ளன. காரணம் சென்ற ஐந்தாண்டுகளாக தொடர்ச்சியாகச் செய்துவரும் பணிகள். பரந்துபட்ட தளங்களில் அல்ல, இலக்கியம் என்னும் ஒரே புள்ளியில் குவிந்து செயல்பட்டிருக்கிறோம். வருடம் ஒரு இலக்கியப்பெருவிழா கோவையில். விஷ்ணுபுரம்விருதுவிழா இன்று தமிழகத்தின் மிகப்பெரிய இலக்கிய கொண்டாட்டம். வருடத்திற்கு ஒரு இலக்கியக்கூடல், ஊட்டியில். தமிழகத்தில் இன்று நிகழும் மிகப்பெரிய கூட்டங்களில் ஒன்று. சற்றும் தொய்வுறாமல். இருபதாண்டுகளாக நிகழ்கிறது குருநித்யா இலக்கியச் சந்திப்பு. இதைத்தவிர பாராட்டுவிழாக்கள், வாழ்த்துக்கூட்டங்கள். பல்வேறு பயணங்கள், சிறிய
- கடைத்தெருவை கதையாக்குதல்… 29-Oct-2018
1962 நான் பிறந்த அதேவருடம் மலையாள எழுத்தாளர் எஸ்.கெ.பொற்றேகாட் ஒருநாவல் எழுதிவெளியிட்டார். ’ஒரு தெருவின் கதை’. கோழிக்கோடு நகரத்தின் முக்கியமான கடைவீதியான மிட்டாய்த்தெருவின் கதை அது. உண்மையில் தெருவின் கதை அல்ல, தெருவாழ் மக்களின் கதை. தெருவில் வாழும் பிச்சைக்காரர்கள், தினக்கூலிகள், அனாதைப்பையன்கள், வேசிகள் ஆகியோரின் கதை. கூடவே கடைவணிகர்களின் கதை. அவர்கள் எழுச்சிகளின் வீழ்ச்சிகளின் சரித்திரம். கேரள சாகித்ய அக்காதமி விருது பெற்ற அந்நாவல் இன்றும் மலையாள இலக்கியத்தில் ஒரு பெரிய வெற்றியாகக் கருதப்பட்டு