- யுவன் வாசிப்பரங்கு 12-Oct-2011
கன்னியாகுமரி அருகே கல்லுவிளையில் அமைந்துள்ள விவேகானந்தா கேந்திரத்தில் அக்டோபர் 7,8,9 ஆம் தேதிகளில் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சார்பில் கவிஞர் யுவன் சந்திரசேகர் கவிதைகள் மீதான வாசிப்பரங்கு நடைபெற்றது. பொதுவாக நவீன கவிதை பற்றிய அரங்குகள் எல்லாமே கவிதை எழுதுபவர்கள் மட்டுமே பங்குகொள்பவையாகவே நடப்பது வழக்கம். கவிதைவாசகர்களைக் கவிஞர்கள் சந்திப்பது அபூர்வம். இது அத்தகைய தருணங்களில் ஒன்றாக இருந்தது. நவீன தமிழ்க்கவிதை கவிஞர்களாலான சிறியவட்டத்துக்குள் தனக்குமட்டுமே என ஒரு சொற்களனை உருவாக்கிக்கொண்டிருக்கிறது. அங்கேகவிதைகளுக்குப் பின்புலமாக ஒரு அறிவுத்தளம் உள்ளது.