- பூமணிக்கு விஷ்ணுபுரம் விருது 21-Oct-2011
2011 ஆம் வருடத்துக்கான ’விஷ்ணுபுரம்’ விருது மூத்த எழுத்தாளர் பூமணிக்கு வழங்கப்படுகிறது. பூ.மாணிக்கவாசகம் என்ற இயற்பெயர் கொண்ட பூமணி முப்பதாண்டுகளாக எழுதிவருகிறார். அவரது பிறகு, வெக்கை, நைவேத்யம், வாய்க்கால், வரப்புகள் போன்ற நாவல்கள் தமிழ்ச்சூழலில் பெரிதும் பேசப்பட்டவை. பிறகு தமிழின் இயல்புவாத எழுத்தில் ஒரு முன்னுதாரணப் படைப்பு என்று விமர்சகர்களால் கொண்டாடப்பட்டது. அழகிரிப்பகடை தமிழிலக்கியத்தின் முக்கியமான கதாபாத்திரங்களில் ஒன்று. பூமணியின் ஐந்துநாவல்களும் ஒரே தொகுதியாக பொன்னி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளன 1985ல் கிரியா ராஜேந்திர சோழனின் எட்டு கதைகள்,
- விஷ்ணுபுரம் விருது விழா 2011 -டிச 18-கோவையில் 06-Dec-2011
அன்புள்ள நண்பர்களுக்கு , இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உங்களை அன்புடன் அழைக்கிறோம் , இந்த அழைப்பிதழை உங்கள் தளத்தில் வெளியிடவும் , நண்பர்களிடம் பகிரவும் வேண்டுகிறோம். விஷ்ணுபுரம் விருது 2011 தமிழ் இலக்கிய ஆளுமைக்கான வாழ்நாள் விருது மூத்த எழுத்தாளர் பூமணி அவர்களுக்கு ஜெயமோகன் எழுதிய பூமணி படைப்புகளின் விமர்சன நூல் பூக்கும் கருவேலம் நூல் வெளியீடு டிசம்பர் 18 ஞாயிறு மாலை 6 மணி- கீதா ஹால்,ரயில்நிலையம் எதிரில் , கோவை கலந்துகொள்ளும்
- கரிசலின் ருசி – பூமணியின் படைப்புலகுக்கு ஒரு நுழைவாயில் 08-Dec-2011ருசி என்று நம்மால் கூறப்படுவது உண்மையில் என்ன? நான் கனடாவில் பயணம் செய்தபோது மாறி மாறிப் புதிய உணவுகளையும் பழக்கமான உணவுகளையும் உண்டு வந்தேன். புதிய உணவுகள் எனக்கு ஆர்வத்தையும் கிளர்ச்சியையும் உண்ணும்போது ஓர் அதிர்ச்சியையும், அன்னியத்தன்மையையும், பிற்பாடு ஒருவிதமான அடைதல் உணர்வையும் அளித்தன. பழைய உணவுகள் நிறைவுணர்வைத் தந்தன. உண்மையில் இவை இரண்டும் ஒன்றோடொன்று கலந்ததே சுவையனுபவமாக இருந்தது. நான் விரும்பிய புது உணவுகளில் பழைய, பழகிய உணவுகளின் சுவைச்சாயல் இருந்தது. பழகிய உணவுகளில் சற்று ...
- பூமணி சந்திப்பு – செந்தில்குமார் தேவன் 08-Dec-2011
கடந்தவாரம் அரங்கசாமி அழைத்து கோவில்பட்டியில் யாராவது இருக்கிறார்களா? அவசரமாக பூமணி அவர்களின் புகைப்படம் தேவைப்படுகிறது எனக் கேட்டிருந்தார். வாரக்கடைசியில் நான் விருதுநகர் செல்வதாக இருந்ததால் ஞாயிறு காலை 10 மணி அளவில் கோவில்பட்டி- பாரதி நகரிலுள்ள பூமணி அவர்கள் வீட்டுக்குச் சென்றிருந்தேன். பூமணி அவர்களின் மனைவி தொலைபேசியில் சொன்ன குறிப்புகளின் படி வீட்டைக் கண்டுபிடிப்பது எளிதாகவே இருந்தது. அவரும், அவர் மனைவியும் 1 வயதிருக்கும் பேரனும் இருந்தார்கள். பூமணி புன்னைகையுடன் வரவேற்றார். ஜெ சொல்லியிருந்தது போல பூமணி
- பூமணியின் நிலம் 10-Dec-2011பூமணியும் அவருக்கு முன் கி.ராஜநாராயணனும் எழுதி உருவாக்கிய கரிசல் நிலத்தை நான் முதன்முதலாகப் பார்த்தது ஒன்பதாம் வகுப்பு மாணவனாக எட்டயபுரத்தில் பாரதி விழாவுக்குச் செல்லும்போதுதான். பாரதியார் பற்றிய பேச்சுப் போட்டியில் பரிசு பெற்றிருந்தேன். அதுவரை நான் தமிழ்மைய நிலத்திற்குள் வந்ததில்லை. நான் பார்த்திருந்த இரு பெரு நகரங்கள்’ திருவனந்தபுரமும் நாகர்கோயிலும்தான். அதாவது நான் அறிந்ததெல்லாம் நீர்வளம் மிக்க நிலம் மட்டுமே. ஆரல்வாய் மொழி தாண்டிப் பணகுடியை அடைந்தபோது நான் ஆழமானதோர் மன எழுச்சிக்கு ஆளானேன். நிலம் எப்படிப்பட்டதாக இருந்தாலும், ...
- பூமணியின் அழகியல் 13-Dec-2011பூமணியின் எழுத்து இன்றைய வாசகனுக்கு என்ன உணர்வை உடனடியாக உருவாக்குகிறது? அவர் பிரபலமான இதழ்களில் எழுதியவரல்ல. நெடுங்காலமாகவே அவரது எழுத்து சிற்றிதழ்வட்டத்து வாசகர்களுக்காகவே பிரசுரிக்கப்பட்டது. அவர்கள் ஏற்கனவே இலக்கியங்களை வாசிக்கும் பயிற்சி பெற்றவர்கள். இயல்புவாத எழுத்தின் அலைகளற்ற நேரடித்தன்மையை அவர்களால் எளிதில் உள்வாங்கமுடியும். மேலும் உலகளாவிய தளத்தில் இயல்புவாதம் ஓர் அழகியல்முறைமையாகப் பெரிதும் பின்னகர்ந்துவிட்டது என்றே நினைக்கிறேன். இயல்புவாத எழுத்துக்களை மையப் போக்காகக் கொண்டிருந்த சீன எழுத்துக்களிலேயே இன்று அந்த அழகியல் இல்லை. ஆகவே நவீன உலக ...
- பூமணியின் சிறுகதைகள் 15-Dec-2011‘பூச்சன் அப்புராணி மனுஷன்.தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பான். இருந்த இடம் தெரியாது. வாயலுங்க பேச மாட்டான். வேலைத்தனத்தில் மாடு பத்தும்போதுகூட மூக்கு முனக்கம்தான். யாராவது பேச்சுக்கொடுத்தால் நாலு வார்த்தைக்கு ஒண்ணு கிணற்றுக்குள்ளிருந்து வரும். பேசினவனுக்கு கடுப்பு தாங்காது…’ என்று ஆரம்பிக்கிறது பூமணியின் கதையான நாக்கு. ஊருக்குள் பூச்சனைப்பற்றி எப்போதும் பேச்சு அடிபடும். ஊரில் ரெண்டு பேருக்கு வார்த்தை தடித்துவிட்டால் அவன் பேர்தான் வரும் ‘ஆமா, பெரிய யோக்கியன். பேசவந்துட்டான். பூச்சனுக்கு தம்பிய போல’ அப்படிப்பட்ட பூச்சன் ஒருநாள் பருத்திக்கொட்டை ...
- பூமணியை ருசித்தல்-கடிதம் 16-Dec-2011அன்புள்ள ஜெ பூமணியின் புனைவுலகத்தைப்பற்றிய உங்களுடைய கட்டுரைகளை விரும்பி வாசித்தேன். உண்மையைச் சொல்லப்போனால் நான் பொதுவாக இலக்கிய விமர்சனக்கட்டுரைகளைத் தவிர்த்துவிடுவேன். அதற்குக்காரணம் நம்முடைய அமைப்பியல் பிதாமகர் ஒருவர் எழுதிய சில கட்டுரைகளை வாசிக்க நேர்ந்ததுதான். ‘உனக்கெல்லாம் எதுக்குடா இலக்கியம்’ என்று கத்தியபடி பஸ்ஸிலேயே புத்தகத்தை தூக்கி வீசியிருக்கிறேன். என்னைக்கேட்டால் கதை எழுதாதவர்கள் எழுதிய ஒரு விமர்சனத்துக்கும் வாசகனிடம் எந்த மதிப்பும் இல்லை. இதில் வெங்கட் சாமிநாதன் தமிழவன் எல்லாரும் ஒரே கணக்குதான். இவர்களை வாசிக்காமலிருப்பதே மேல். இவர்களுடைய தரமற்ற உரைநடையை ...
- பூமணியின் நாவல்கள் 17-Dec-2011பூமணியின் படைப்புகளைத் தமிழின் இயல்பு வாதப் படைப்பின் முன்னுதாரணங்களாகக் கொள்வது முதல் கட்டமென்றால் அவரது தனித் தன்மைகள் மூலம், அவர் அவ்வழகியலின் இலக்கணத்திலிருந்து விலகும் இடங்களை ஒவ்வொன்றாக அடையாளம் கண்டு அவரை அதிலிருந்து வேறுபடுத்திக் காண்பது அடுத்த கட்டமாகும். இந்த இரு கோணத்திலும் வாசித்தால் மட்டுமே அவரது முக்கியமான நாவல்களை நாம் முழுமையாக உணர முடியும். ஏனென்றால் எந்த முதன்மைப் படைப்பாளியும் ஒரு குறிப்பிட்ட அழகியலடையாளத்துடன் முழுமையாகப் பொருந்திப் போக மாட்டான். காரணம் அழகியல் இயக்கங்கள் கால ...
- பூக்கும் கருவேலம் – பூமணியின் படைப்புலகம் 18-Dec-2011விளக்கு அமைப்பின் இலக்கியப் பரிசை இலக்கியத்துக்கு பெருமை சேர்த்த படைப்பாளிகளுள் முக்கியமானவர். அவரது ‘பிறகு’, ‘வெக்கை’ ஆகிய இரு நாவல்களும் ‘ ரீதி ‘ என்ற சிறுகதைத் தொகுப்பும் முக்கியமானவை என்று கூறலாம். இன்றைய தலித் இலக்கியங்கள் பலவற்றிலும் உள்ள ஓங்கிய பிரச்சாரக் குரலோ, பிரச்சினைகளை எளிமைப் படுத்தும் போக்கோ இல்லாத சமநிலை கொண்ட கலைப் படைப்புகள் அவை. ...
- விஷ்ணுபுரம் விருது விழாவில் பூமணி உரை 19-Dec-2011அன்பார்ந்த நண்பர்களே, வணக்கம் அலங்கார மேடையேறி அறிவார்ந்த கருத்துக்களைச் செறிவுடன் எடுத்துரைக்கும் கலை எனக்குத் தெரியாது. அந்த ஆற்றலும் கிடையாது. அன்னியப்பட்டுக் காட்சிப் பொருளாவதில் எப்போதுமே கூச்சந்தான். கூச்சத்திலேயே என் காலமும் ஓடியடைந்துவிட்டது. எனக்குத் தொழில் எழுத்து. தெரிந்ததெல்லாம் எழுத்து. அது போதும். கற்பனை வானில் கண்டமானிக்கிப் பறந்து திரிந்த வெள்ளித் திரையை இழுத்துப் பிடித்து வசக்கிக் கால் பொசுக்கும் எதார்த்த மண்ணில் விரித்துப் பாமர மக்களின் வாழ்க்கையைக் காட்சிகளாக வரைந்த அசல் கலைஞனுக்கும் இலக்கியத்தை சுவாசிக்கும் படைப்புக் கலைஞர்களுக்கும் தரமான படைப்புகளைத் ...
- பூமணியின் வழியில் 20-Dec-2011இந்தியமொழிகளில் நவீனத்துவம் ஆரம்பத்திலேயே உருவானது தமிழில் என்று தோன்றுகிறது. 1930களிலேயே தமிழில் நவீனத்துவம் புதுமைப்பித்தனுடன் பிறந்துவிட்டது. கச்சிதமான வடிவம் குறித்த நவீனத்துவத்தின் பிரக்ஞை அங்கிருந்து பரவி எல்லா வகை அழகியல் தளங்களிலும் வளர்ந்தது. பொதுவாக இந்திய மொழிகளைப் பார்த்தால் விமரிசன யதார்த்தவாதம் என்ற அழகியல் வடிவம் மிதமிஞ்சிய வடிவப் பிசிறுகளுடன்தான் அமைந்துள்ளது. உதாரணமாக மகா ஸ்வேதா தேவியின் கதைகளையோ தகழி சிவசங்கரப் பிள்ளையின் சிறுகதைகளையோ சுட்டிக்காட்டலாம். பிற இந்திய மொழிகளில் தமிழ்ச்சிறுகதைக்கு உள்ள கச்சிதமான வடிவத்தை அபூர்வமாகவே காணமுடிகிறது. ...
- விஷ்ணுபுரம் விழா- வடகரை வேலன் 20-Dec-2011
என் ப்ரியத்திற்குரிய செல்வேந்திரன் தொகுத்து வழங்க, அழைப்பிதழில் குறித்திருந்தது போலவே விழா சரியாக 6.00 மணிக்குத் துவங்கியது. முதல் நிகழ்வாக இறைவணக்கம் பாடி இனிமை சேர்த்தவர் இலக்கிய வட்டத்தைச் சேர்ந்த சகோதரர் சுரேஷின் மகள் சு.வானதி. விஷ்ணுபுரம் விழா பற்றி வடகரை வேலன் எழுதிய பதிவு படங்கள் சிறில் படங்கள் ஆனந்த்
- விழா 20-Dec-2011
விஷ்ணுபுரம் விருது விழாவுக்கு நான் ஒரு வகையில் தாமதமாகவே சென்றேன். இப்போது இந்த விழா பழங்காலக் கூட்டுக்குடும்பக் கல்யாணங்களைப்போல மூன்றுநாள் கொண்டாட்டமாக ஆகிவிட்டது. 17 ஆம் தேதி காலையிலேயே இருபதுபேர் வரை கோவைக்கு வந்துவிட்டார்கள். ஈரோடு திருப்பூர் கரூர் பகுதிகளில் இருந்து மட்டுமல்லாமல் பெங்களூர் ஹைதராபாத் என வெளியூர்களில் இருந்தும் நிறைய நண்பர்கள். எஸ்.ராமகிருஷ்ணன் ஈரோடுக்கு வந்து அங்கிருந்து நண்பர்களுடன் கோவைக்கு 17 ஆம்தேதி காலை பத்துமணிக்கே வந்திருந்தார். அவரைச்சுற்றி ஒரு கும்பல் அமர்ந்து அவரது படைப்புகளையும்
- விழா-கடிதங்கள் 21-Dec-2011
ஒரு எழுத்தாளன் தன் உழைப்பிற்கு பதிலாக இந்த உலகோடு கோருவது ஒன்றை மட்டும் தான். அவன் படைப்புகள் வாசிக்கப்பட வேண்டும். ஒரு எழுத்தாளனின் படைப்பில் ஒரு நல்ல வாசகன் தொட்டுக் காட்டும் ஒரு சிறிய நுண்மை, எத்தனை கோடி இன்பங்களை அந்தப் படைப்பாளியின் மனத்தில் விதைக்க முடியும் என்பதைப் பூமணியோடு நம் வாசகர் வட்ட நண்பர்கள் நிகழ்த்திய உரையாடலைக் கண்ட போது நேரடியாகக் கண்டுகொள்ள முடிந்தது. மகிழ்ச்சியாக இருந்த சமயத்தில் குற்ற உணர்வும் கவ்விக்கொண்டது உண்மை. நான்
- விழா:கோபி ராமமூர்த்தி 21-Dec-2011
இது போன்ற விழாக்கள் வாசகனுக்குப் பல புதிய வாசல்களைத் திறக்கின்றன. ஏற்கனவே வாசித்த புத்தகங்களில் தவறவிட்ட இடங்களை அடையாளங் காட்டுகின்றன. இன்னும் தீவிரமாக வாசிக்க வேண்டும் என்ற உத்வேகத்தைத் தருகின்றன. இவையனைத்தையும் சாத்தியமாக்கும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட அன்பர்களுக்கும், உங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். கோபி ராமமூர்த்தி பதிவு
- விழா: இளங்கோ 22-Dec-2011
கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏர் கி.ரா என்றால், பின்னத்தி ஏர் பூமணி என்று விழாவில் பேசிய அனைவரும் சொன்னார்கள். அது போலவே எந்த வம்புக்கும் போகாத, தன் எழுத்தையே யாராவது ‘இப்படி எழுதி இருக்கலாம்’ என்றால், அவர் இப்படி பதில் சொல்வாராம் ‘அப்படிங்களா, அடுத்த தடவ பார்க்கலாம்’. இவ்வளவுதான் அவர் பேசுவது என்று மேடையில் குறிப்பிட்டார்கள். இளங்கோ பதிவு
- விழா- கடிதங்கள் 23-Dec-2011
அதிக இலக்கியப் பரிச்சயம் இல்லாத நண்பர்களிடம் பேசும்போது பொதுவாக ஒன்று கவனித்திருக்கிறேன். பெரும்பாலும் அவர்களுக்குப் படிக்க உள்ளுர ஆர்வம் இருக்கிறது. ஆனால் ஆரம்பிக்க ஏதோ ஒரு தடை. வாழ்கை நேரமின்மையில் சென்று முடியுமோ ? பணியில் செயல்திறன் குன்றுமோ ? குடும்பத்தைக் கவனிக்க முடியாமல் போகுமோ என்றெல்லாம் கேட்டிருக்கிறார்கள். இதை ஒத்த ஒரு தயக்கம் இலக்கியக் கூட்டங்களுக்கு வரும் சில அன்பர்களுக்கும் உண்டு. நெடுந்தொலைவிலிருந்து வருவார்கள்; ஆனால் அரங்கத்தின் வாசல் வரை வந்ததும் அங்கேயே நின்று விடுவார்கள்.
- பூமணி- உறவுகள் 25-Dec-2011பூமணி அவரது அம்மாவிடம் எட்டுவயதுவரை பால்குடித்தவர். தமிழ் எழுத்தாளர்களில் இந்த தனித்தன்மை வேறு எவருக்காவது இருக்கிறதா என்பது சந்தேகம்தான். ஒரு நல்வாய்ப்புதான் அது . ‘அம்மா பாடும் தாலாட்டுகளை கேட்டுக்கொண்டிருப்பேன். அவற்றின் பொருள் முழுக்க புரிகிற வயது வந்தபிறகும்கூட அம்மா என்னை தொட்டிலில் போட்டு ஆட்டி தாலாட்டு பாடுவதுண்டு’ என்று பூமணி சொன்னார். நடந்து திரியும் வயதில் அவர் அம்மாவிடம் பால்குடித்தார். பூமணி மேலூர் பள்ளிக்கூடத்தில் படிக்கும் காலத்தில்கூட அம்மாவிடம் பால்குடிப்பார். அம்மாவை உறிஞ்சி உரித்தெடுப்பார். பள்ளிக்கூடம் ...
- பூமணி- எழுத்தறிதல் 27-Dec-2011வறண்ட கரிசலில் வாழ்க்கையே பெரும் போராட்டமாகிப் போன சூழலில் பிறந்த பூமணி கல்வி கற்றது ஓர் ஆச்சரியம். இலக்கியக் கல்வி கற்றது இன்னும் பெரிய ஆச்சரியம். இரண்டுமே தற்செயல்கள் அல்ல என்றார் பூமணி. அவர் கல்வி கற்கச் சென்றது அம்மாவின் தளராத பிடிவாதம் காரணமாகத்தான். அவர் கல்விக்குள் செல்வது அம்மாவின் கனவாக இருந்தது. அவரைப் பட்டப்படிப்பு வரை கொண்டு வருவதற்காக அம்மா காடுகளில் ரத்தமும் வியர்வையும் சிந்தியிருக்கிறார். இலக்கிய அறிவு பெற்றதற்கும் அம்மாவே காரணம். பூமணியின் தொட்டில் ...
- பூமணி-கடிதங்கள் 29-Dec-2011அன்பிற்குரிய ஜெயமோகன், விஷ்ணுபுரம் விருது இவ்வாண்டு பூமணிக்குக் கொடுத்திருப்பது குறித்து மிகவும் மகிழ்கிறேன். பெருமைப்படுத்த வேண்டிய ஆளுமைகளை நீங்கள் தேர்ந்தெடுக்கிறீர்கள். அத்துடன் அவர்களின் படைப்புகளைக் குறித்து நூலும் எழுதுகிறீர்கள். உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். அன்புடன், பெருமாள்முருகன் www.perumalmurugan.com அன்புள்ள பெருமாள்முருகன், நன்றி. இது ஒரு அவசியமான விஷயம். இதைச் செய்யவேண்டுமெனப் பிறரிடம் பல ஆண்டுகளாகச் சொல்லி வந்திருக்கிறேன். சரி என்று நானே ஆரம்பித்துவிட்டேன். ஆனால் இந்த விருதுகளில் ஒரு சின்ன குறை உள்ளது. ஆ.மாதவன் அதைச் சொன்னார் ‘நீ எனக்கு விருது கொடுத்தது என் ...
- பூமணி- சொல்லின் தனிமை 30-Dec-2011பூமணி, தமிழக அரசின் கூட்டுறவுத்துறையில் தணிக்கையாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தணிக்கையாளராக, அதுவும் ஊழலுக்கு உருவமாகச் சுட்டிக்காட்டப்படும் தணிக்கைத் துறையில் செயல்படுவதென்பது மிகமிக அபாயகரமான ஒன்று – நேர்மையைத் தன்னுடைய அடையாளமாகக் கொண்ட ஒருவருக்கு. ‘என்னோட சர்விஸில் ஆரம்பம் முதல் கடைசி வரை நான் நேர்மையில் எந்த சமரசமும் இல்லாதவனாக இருந்தேன். என்னோட வாழ்க்கை இந்த அளவுக்குக் கொந்தளிப்போடு இருந்ததுக்கு அதுதான் காரணம். இந்தமாதிரி ஒரு வேலையில் இந்தமாதிரி ஒரு உறுதியோட நான் இல்லாம இருந்திருந்தா ஒருவேளை ...
- பூமணி – கடிதம் 13-Jan-2012அன்புள்ள சார், இன்று பூமணியின் தகனம் கதை வாசித்தேன்ங்க. நான் இலக்கியத்தில் வாழும் வயதானவர்களில் ஒரு கனிவான தந்தையைக் கண்டு கொண்டேன். அதில் வெள்ளத்தாயின்னு ஒரு பொண்ணு வருவா சார், வீட்டில் வேலை செய்தவரின் மகள், ஒரு உறவும் இல்லாவிட்டாலும் தன் மகள் போல அவளை நேசிக்கிறார் ஏட்டையா. கதையின் முடிவில் அந்தப்பெண் சாதிக் கலவரத்தால் இறந்து விடுவாள். இந்தக் கதை சாதிக்கலவரத்தின் தீங்கினைப் பற்றி. ஆனா ஒரு இடத்திலும் எங்கும் வெறுப்பு இல்லை. இந்த மாதிரி நபர்கள்தான் சமூகக் ...