- விஷ்ணுபுரம் விருது 2012 04-Dec-2012
இவ்வருடத்திற்கான விஷ்ணுபுரம் விருதைக் கவிஞர் தேவதேவனுக்கு அளிப்பதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஓர் இலையைக்கொண்டு ஒரு கானகத்தை உருவாக்குகிறேன் என்று தேவதேவன் ஒருமுறை சொன்னார். அவரது மொத்த கவியுலகமும் ஓர் இலை. மானுடனை ஒரு துளிச்சிதறலாக உணரச்செய்யும் பெரும்கானகமொன்றை சுட்டிநிற்கின்றது அது தேவதேவனுக்கு இவ்விருதை அளிப்பதில் பெருமைகொள்கிறோம். இது விஷ்ணுபுரம் அமைப்பின் மூன்றாவது விருது. முதல் விருது 2010இல் எழுத்தாளர் ஆ.மாதவனுக்கு வழங்கப்பட்டது. இரண்டாவது விருது 2011இல் எழுத்தாளர் பூமணிக்கு வழங்கப்பட்டது. மூத்த எழுத்தாளர்களை கௌரவிக்கும் முகமாக அடுத்த தலைமுறையினர் அளிக்கும்
- தேவதேவன் ஒரு பேட்டி 08-Dec-2012தேவதேவன் நவீன தமிழ்க் கலைஞர்களில் தனித்துவம் மிக்கவர் தேவதேவன். தனது கவிதைகள் மற்றும் கவிதை சார்ந்த உரையாடல்கள் மூலம் நீண்ட பாரம்பரியம் கொண்ட தமிழ்க் கவிதைக்கு வளம் சேர்த்திருப்பவர். இயற்கையின் மீது அபரிமிதமான காதல் கொண்ட தேவதேவன், குழு சார்ந்தும் சர்ச்சைகள் மூலமும் தங்கள் பெயரைத் தக்க வைத்துக்கொள்ள முயலும் தற்காலப் படைப்பாளிகளுக்கு மத்தியில், தொடர்ச்சியான தனது செயல்பாடு மற்றும் கவிதைகள் மூலம் மட்டுமே தனக்கான இடத்தை நிறுவியிருப்பவர். இதுவரை தேவதேவன் கவிதைகள் 12 தொகுதிகளாக வந்துள்ளன. தேவதேவன் கவிதைத் தொகுதிகள்; ...
- தேவதேவனின் பரிணாமம் 12-Dec-2012தேவதேவனின் அசல்பெயர் பிச்சுமணி கைவல்யம். அவருக்கு இப்பெயரை வைத்தவர் ஈ.வெ.ராமசாமி நாயக்கர். தேவதேவனின் தந்தை பிச்சுமணி படிப்பறிவில்லாத கூலித் தொழிலாளி. தாய் பாப்பாத்தியம்மாவிற்கும் படிப்பு இல்லை. ஈ.வெ.ரா. மீது பிச்சைமணி கொண்ட ஈடுபாடு ஒருவகையில் அறிவின் மீதான ஈடுபாடாக இருக்கலாம். தேவதேவன் பள்ளியிறுதி வரை மட்டுமே படித்தார். வேலைக்கான தேடலுக்குப் பிறகு ஆசிரியர் பயிற்சி முடித்தார். ஆயினும் வேலை கிடைக்கவில்லை. சிறிது காலம் அச்சகம் வைத்திருந்தார். கேரளத்தில் சிறுவேலை ஒன்றில் சிலகாலம் இருந்தார். உடலுழைப்பு வேலைகளில் ஈடுபட்டார். ...
- தேவதேவனின் படிமங்கள் 16-Dec-2012எந்த ஒரு கவிஞனையும் அவனுடைய முக்கியமான படிமங்களின் அடிப்படையிலேயே பொதுவாக வாசகர்கள் அணுகுவார்கள், ஞாபகம் வைத்திருப்பார்கள். பலசமயம் அதுபற்றிய உணர்வு அவர்களுக்கு இருக்காது எனினும் கூட. பிரமிள் கவிதைகளில் தீ (கருகாத தவிப்புகள் கூடி நாவின் திரிபிளந்து அணையாது எரியும் ஒரு பெயர் நீ), பசுவய்யா கவிதைகளில் கடல் (கடலோரம் காலடிச்சுவடு), நகுலன் கவிதைகளில் மழை (வெளியே மழை பெய்து கொண்டிருந்தது. நான் வீட்டுக்குள் இருந்தேன். ஒரு சொரூப நிலை) ஆகியவை உடனடியாக ஞாபகம் வருபவை. பல்வேறு அந்தரங்கக் ...
- தேவதேவனின் கவித்தரிசனம் 18-Dec-2012தரிசனம் என்பது ஒரு கண்ணோட்டம் உலகப் பொதுவாக விரிக்கப்படுதல். வாழ்வின் பல்வேறு தருணங்களில் நாம் அறியும் உண்மைகள் அந்தந்தத் தருணங்களுக்கு மட்டும் கட்டுப்பட்டவை. இவ்வுண்மைகளை நாம் தொடர்ந்து சாராம்சப்படுத்துகிறோம். விளைவாக இவற்றை இணைக்கும்போது உண்மை ஒன்றை உருவாக்குகிறோம். பலசமயம் முன்பே நாமறிந்த ஓர் உண்மையை உறுதிசெய்து கொள்கிறோம். பூமிமீது வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் அத்தகைய வாழ்க்கைத் தரிசனம் உள்ளது. உண்மைகளைத் தொகுப்பதன் மூலம் அல்லது நிராகரிப்பதன் மூலம் ‘தரிசனம்’ அடையப்படுகிறது. நம் வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் நாம் ...
- கோவைக்கு வருக! 18-Dec-2012
விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் வழங்கும் 2012ம் ஆண்டிற்கான ”விஷ்ணுபுரம் விருது” கவிஞர் தேவதேவனுக்கு வழங்கப்படுகிறது , விருது வழங்கும் நிகழ்ச்சி டிசம்பர் 22 2012 சனிக்கிழமை மாலை 6 மணிக்குக் கோவையில் ஆர்.எஸ். புரம் மாநகராட்சி கலையங்கில் நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் எழுத்தாளர் நாஞ்சில்நாடன் ஜா.ராஜகோபாலன் விமர்சகர் மோகனரங்கன் இயக்குனர் சுகா கல்பற்றா நாராயணன் (மலையாளமொழிக் கவிஞர்) இசைஞானி இளையராஜா எழுத்தாளர் ஜெயமோகன் கவிஞர் தேவதேவன் ஆகியோர் பங்கேற்கின்றனர்,நண்பர்கள் அனைவரையும் விழாவிற்கு அன்புடன் அழைக்கிறோம் . விஷ்ணுபுரம் விருது 2012 அழைப்பிதழ்
- கோவையில் இளையராஜா தேவதேவன் 20-Dec-2012
விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் வழங்கும் 2012ம் ஆண்டிற்கான ”விஷ்ணுபுரம் விருது” கவிஞர் தேவதேவனுக்கு வழங்கப்படுகிறது விருது வழங்கும் நிகழ்ச்சி டிசம்பர் 22 2012 சனிக்கிழமை , மாலை 6 மணிக்குக் கோவையில் ஆர்.எஸ். புரம் மாநகராட்சி கலையரங்கில் நடைபெறுகிறது. நிகழ்ச்சி தொகுப்புரை செல்வேந்திரன் தலைமை எழுத்தாளர் நாஞ்சில்நாடன் வரவேற்புரை கே.வி.அரங்கசாமி * பரிசளித்து கௌரவிப்பவர் இசைஞானி இளையராஜா நூல் வெளியிடுபவர் கல்பற்றாநாராயணன் (மலையாளக் கவிஞர்) பெற்றுக்கொள்பவர் கோபி ராமமூர்த்தி * வாழ்த்துரைகள் ராஜகோபாலன் விமர்சகர் மோகனரங்கன் இயக்குனர்
- தேவதேவனின் கவிதைகளை ரசிப்பது பற்றி… 20-Dec-2012கவிதை ரசனை அந்தரங்கமானது. சொல்லுக்கும் வாசகனின் அகமனதிற்கும் இடையேயான மர்மமான, முடிவற்ற உறவின் மூலம் இயங்குவது. அதைக் கற்றுக் கொடுக்க முடியாது. ஓர் எல்லைவரை பகிர்வதும் சாத்தியமில்லை. அதே சமயம் ஒருவன் ஒரு கவிதையை ரசிக்கும் முறையைத் தன்னுடைய ரசனைமுறையைத் தானாக கண்டடைய முடியும். ஒவ்வொரு ஆழ்மனமும் தனித்தன்மை உடையது. எனினும் ஒருவகையில் அனைத்தும் ஒன்றுதான். ஒரு கவிதைக்கு நான் என்ன அர்த்தத்தைத் தருகிறேன் என்பது இன்னொருவருக்குச் சற்றும் முக்கியமில்லை. ஆனால் அந்த அர்த்தத்தை நான் எப்படி ...
- தேவதேவனின் பித்து.. 21-Dec-2012நவீன கவிதை அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தாக வேண்டிய நிலை இன்று உருவாகியுள்ளது. தமிழ் நவீன கவிதையின் அழகியலை உருவாக்கிய நவீனத்துவ மதிப்பீடுகள் பல பற்பலவிதமாக மறுக்கப்பட்டு வருகின்றன. தனிமனிதனின் தருக்கப் பிரக்ஞை என்ற மையம் அசைக்க முடியாத உறுதியுடன் நவீனத்துவ கவிதையின் மையக் கோட்பாடாக உள்ளது. பிரபஞ்சமும், காலமும், சமூகமும், சகமனிதனும் அதன் மூலமே அளவிடப்பட்டன. மதிப்பிடப்பட்டன. அந்த மையம் சந்தர்ப்பம் சார்ந்த ஒரு புனைவு மட்டுமே என்ற இன்றைய சிந்தனை கவிஞனுக்குக் கூறுகிறது. அது நமது ...
- தேவதேவனின் கவிமொழி -கடிதங்கள் 22-Dec-2012மனித அகம் ஒரு பொருளில் மோதித் திகைத்து அதை அடையாளப்படுத்துதல் என்னும் தத்துவத்திலிருந்து, அந்த அடையாளப்படுத்தும் சொல்லின் புறவய-நிலைத்த தன்மை மற்றும் அனைவருள்ளும் ஏற்கனவே இருக்கும் அந்தரங்கமான மொழி என்ற நுண்மையான இருநிலைகளை மொழியியல் வழியாக விளக்கி, இந்தப் பொதுமொழி படிமங்களை உருவாக்கி கையாளுவதன் மூலமாக எப்படி கவிமொழி ஆகிறது என்பதைச் சொல்லி, மறுபடியும் கவிமொழி எப்படி மானுடப் பொதுத்தன்மை பெறுகிறது என்பதை -‘மானுட உடல் சார்ந்து அறியப்படும் பிரபஞ்சம், எனவே அவ்வுடலே மொழியையும் மானுடப்பொதுமையாக ஆக்குகிறது’ ...
- இன்று விஷ்ணுபுரம் விருது விழா கோவையில் 22-Dec-2012
விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் வழங்கும் 2012ம் ஆண்டிற்கான ”விஷ்ணுபுரம் விருது” இன்று கவிஞர் தேவதேவனுக்கு வழங்கப்படுகிறது விருது வழங்கும் நிகழ்ச்சி டிசம்பர் 22 2012 சனிக்கிழமை , மாலை 6 மணிக்குக் கோவையில் ஆர்.எஸ். புரம் மாநகராட்சி கலையரங்கில் நடைபெறுகிறது. நிகழ்ச்சி தொகுப்புரை செல்வேந்திரன் தலைமை எழுத்தாளர் நாஞ்சில்நாடன் வரவேற்புரை கே.வி.அரங்கசாமி * பரிசளித்து கௌரவிப்பவர் இசைஞானி இளையராஜா நூல் வெளியிடுபவர் கல்பற்றாநாராயணன் (மலையாளக் கவிஞர்) பெற்றுக்கொள்பவர் கோபி ராமமூர்த்தி * வாழ்த்துரைகள் ராஜகோபாலன் விமர்சகர் மோகனரங்கன்
- விஷ்ணுபுரம் விருது 2012 – நிகழ்வுகள் 23-Dec-2012
2012 ஆம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருது மூத்த படைப்பாளி கவிஞர் தேவ தேவன் அவர்களுக்கு 22.12.2012 அன்று கோவை ஆர். எஸ். புரம் கலையரங்கில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது. விழாவில் இசைஞானி இளையராஜா, மலையாளக்கவிஞர் கல்பற்றா நாராயணன் ,விமர்சகன் மோகனரங்கன், விமர்சகர்கள் மோகனரங்கன், ராஜகோபாலன் ,திரைப்பட இயக்குநர் சுகா ,எழுத்தாளர்கள் நாஞ்சில்நாடன்,ஜெயமோகன் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்தனர். செல்வி வானதிஸ்ரீ,செல்வி வித்யாலட்சுமி ஆகியோரின் கடவுள் வாழ்த்துடன் விழா இனிதே ஆரம்பித்தது. விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட அமைப்பாளார்
- தேவதேவன் கடிதம் 26-Dec-2012மனித அகம் ஒரு பொருளில் மோதி திகைத்து அதை அடையாளப்படுத்துதல் என்னும் தத்துவத்திலிருந்து, அந்த அடையாளப்படுத்தும் சொல்லின் புறவய-நிலைத்த தன்மை மற்றும் அனைவருள்ளும் ஏற்கனவே இருக்கும் அந்தரங்கமான மொழி என்ற நுண்மையான இருநிலைகளை மொழியியல் வழியாக விளக்கி, இந்தப் பொதுமொழி படிமங்களை உருவாக்கிக் கையாளுவதன் மூலமாக எப்படி கவிமொழி ஆகிறது என்பதைச் சொல்லி, மறுபடியும் கவிமொழி எப்படி மானுடப் பொதுத்தன்மை பெறுகிறது என்பதை -‘மானுட உடல் சார்ந்து அறியப்படும் பிரபஞ்சம், எனவே அவ்வுடலே மொழியையும் மானுடப்பொதுமையாக ஆக்குகிறது’ ...
- தினமணி செய்தி 26-Dec-2012
மனதை அமைதிப்படுத்தும் தேவதேவனின் கவிதைகள் இசையமைப்பாளர் இளையராஜா கோவை, டிச. 22: பாடலில் மனது ஒருமைப்படுவது போன்ற அமைதி தேவதேவனின் கவிதைகளில் உள்ளது என்று இசையமைப்பாளர் இளையராஜா கூறினார். கோவை விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமைப்பு, தமிழின் மூத்த படைப்பாளுமைகளைக் கெüரவிக்கும் விதமாக, சிறந்த எழுத்தாளர்கள், கவிஞர்களைத் தேர்ந்தெடுத்து, கடந்த 2010ஆம் ஆண்டு முதல் விஷ்ணுபுரம் விருதுகள் என்ற பெயரில் விருதுகள் வழங்கி வருகிறது. அவ்வகையில் கடந்த 2010ஆம் ஆண்டு எழுத்தாளர் ஆ.மாதவனுக்கும், 2011ஆம் ஆண்டு எழுத்தாளர்
- மோகனரங்கன் உரை 27-Dec-2012
தமிழ்க் கவிதை உலகில், கடந்த 35 வருடங்களுக்கும் மேலாக இடையறாத உத்வேகத்துடனும், இயல்பான வெளிப்பாட்டுத் தன்மையுடனும் தொடர்ந்து இயங்கி வருபவர் தேவதேவன். பதினைந்துக்கும் மேற்பட்ட தொகுப்புகளுடன், ஆயிரத்துக்கும் அதிகமான பக்கங்களுடன் விரிந்து கிடப்பது இவருடைய கவிதை உலகம். தமிழில் இவ்வளவு கூடுதல் எண்ணிக்கையில் எழுதியவர்கள் யாருமில்லை. படைப்புகளின் எண்ணிக்கை கூடும் போது அவற்றின் தன்மை நீர்த்துப் போகும் என்பதே பொதுவான நம்பிக்கை. ஆனால் ஏராளமாக எழுதிக் குவித்த போதும் மலினமடைந்துவிடாத ஒரு தரமும், தன்மையும் தேவதேவனின் படைப்புகளில்
- விஷ்ணுபுரம் விழா- நினைவுகள், அதிர்வுகள், 27-Dec-2012
இந்தமுறை விஷ்ணுபுரம் விருது தேவதேவனுக்கு என கடைசியில்தான் முடிவெடுத்தோம். தேவதேவனுக்கு விருது அளிப்பதென்பது என்பது எங்களுக்குப்பெரிய கௌரவம் என்றாலும் அவர் எங்கள் நண்பர் குழுமத்துக்கு மிகநெருக்கமானவர் என்பதனால் அந்தத் தயக்கம். ஏற்கனவே அவரது படைப்புகளைப்பற்றிக் கருத்தரங்கு நடத்தியிருக்கிறோம். அவர் எங்களுடைய எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டிருக்கிறார். அவருக்கு விருதளிப்பது சொந்த அண்ணனுக்கு விருதளிப்பதுபோல. ஆனாலும் தமிழில் கௌரவிக்கப்படாத பெரும்படைப்பாளிகளில் ஒருவர் அவர் என்பதனால் அவருக்கே அளிப்பதாக முடிவெடுத்தோம் பரிசை அளிப்பதற்கு இளையராஜாவை அணுகுவதற்கு தேவதேவன்தான் காரணம். நான் இருவரையும்
- விருதுவிழா உரை – ராஜகோபாலன் 28-Dec-2012
அனைவருக்கும் வணக்கம்! விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் 2012 ஆம் ஆண்டிற்கான விருதினைப் பெறும் கவிஞர் தேவதேவன் அவர்களுக்கு இலக்கிய வட்ட நண்பர்கள் சார்பில் பேரன்பையும், நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். நண்பர்களே! எனது பள்ளி வயதில் நான் கிராமத்தில் வளர்ந்த நாட்களில் நான் கண்ட முதல் நிகழ்த்து கலை வில்லுப் பாட்டுதான். அதைப் பாடும் பெண்மணி என் தாயாரின் தோழி. ஓய்வு வேளைகளில் என் தாயாருடன் வீட்டுப் பணிகளில் ஏதேனும் உதவி செய்வார். அப்போதெல்லாம் அவரிடமிருந்து ஏதேனும் பாடல் வந்தவண்ணம்
- விழா கடிதங்கள் 09-Jan-2013
அன்புள்ள ஜெயமோகன் மற்றும் ராஜகோபாலன், உங்கள் இருவரின் பேச்சின் கட்டுரை வடிவம் கண்டேன். அதை பற்றி நிறைய சொல்ல முடியும் என்றாலும் அதன் வடிவம் சார்ந்த ஒன்றை மட்டும் சொல்லியே ஆகவேண்டும். இவை இரண்டுமே கண கட்சிதமாக ஆக்கப்பட்ட ஒரு உரை. இதில், நம் பேச்சாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று உள்ளது. உங்கள் உரைகளில் மேடையில் இருப்பவர்கள் பற்றி ஒவ்வொருவராக புகழ்ந்து, அவர்களின் பராக்கிரமங்களை மணிகணக்காக சொல்லிகொண்டிருக்கவில்லை (அவர்கள் எல்லோரும் அதற்க்கு முழுதும் உரியவர்கள் எனும் போதிலும்).
- விழா-மேலும் கடிதங்கள் 12-Jan-2013
அன்பின் ஜெ.. விழா மிக அழகான. பொருத்தமான இறை வணக்கத்துடன் துவங்கியது. நாஞ்சிலின் உரை – நன்றாக இருந்தது. விழா நாயகனை விட, முக்கிய விருந்தினரை விட மிக அதிகம் பேசியிருந்தாலும், அது தேவதேவனை ஒரு தளத்தில் பொது மக்கள் மனத்தில் இருத்தும் ஒரு setting ஐ அமைத்தது என்று சொல்லலாம். சங்கக் கவிதையை நோக்கிச் செல்லும் கவிதை என்று அவர் எடுத்துச் சொன்ன ஒரு புள்ளியைக் கொஞ்சம் பெரிதாக்கி, பின் வருபவர்கள் பேசியிருந்தால், அது பொது
- விழா மேலும் கடிதங்கள் 13-Jan-2013
அன்புள்ள ஜெ , விழா நிமித்தம் உங்களையும் நண்பர்களையும் சந்திக்க முடிந்தது மிக்க மகிழ்வளிக்கிறது.மகிழ்ச்சி என்பதைவிட இது மனதை நிறைக்கும் ஒரு அனுபவம் என்றே சொல்ல வேண்டும், ஒரு விதமான பூரிப்பு. எழுத்தாளர்களை நேரில் சந்திப்பது ஏமாற்றமாகவே முடியும் என்ற பொதுவான அபிப்பிராயத்தைதைத் தகர்த்தது தங்களை சந்தித்த அனுபவம்.எனக்குத் தங்களைப் பற்றி மனதில் இருந்த பிம்பத்திற்கும் நேரில் கண்ட ஆளுமைக்கும் வித்தியாசமே இல்லை , நேற்று எழுத்தில் விட்டதை இன்று நேரில்தொடர்வது போல தான் இருந்தது .
- தேவதேவனைப்பற்றி… 18-Jan-2013தேவதேவன் பற்றி மலேசிய எழுத்தாளர் சு.யுவராஜன் எழுதிய குறிப்பு அவரது இணையதளத்தில் மரத்தடியில் துயிலும் கவிஞர்