- சீ.முத்துசாமி சிறுகதைகள் : மற்றவர்களால் உருவான நரகம்! 06-Aug-2017
70களில் உருவான குறிப்பிடத்தக்க நவீன படைப்பாளிகளாக அரு.சு.ஜீவானந்தன், சீ.முத்துசாமி, அமரர் எம்.ஏ.இளஞ்செல்வன், மா.சண்முகசிவா, சை.பீர்முகம்மது ஆகியோரை பட்டியலிடலாம். இப்படி ஒரு தலைமுறை உருவாக அப்போதைய ஆனந்த விகடன், குமுதம், அதன் வழி ஜெயகாந்தன் இருந்ததை ஒப்புக்கொண்டே திட்டவட்டமான மலேசிய நவீனத் தமிழ் இலக்கியத்தை கணிக்க வேண்டியுள்ளது நவீன் எழுதிய விமர்சனக் கட்டுரை =============================================== சீ.முத்துசாமிக்கு விஷ்ணுபுரம் விருது ————————————————————————————————— சீ.முத்துசாமியின் இருளில் அலையும் குரல்கள் –சிவானந்தம் நீலகண்டன் சீ. முத்துசாமியின் ‘இருளில் அலையும்
- விஷ்ணுபுரம் விழா – சந்திப்புகள் 21-Oct-2017
வரும் விஷ்ணுபுரம் விருது விழா வரும் டிசம்பர் 16,17 ஆம் தேதிகளில் கோவையில் நிகழ்கிறது. அதில் ஒருங்கு செய்யப்பட்டுள்ள இருநாள் கருத்தரங்கை ஒட்டிய நிகழ்ச்சிகளை முன்னரே வகுத்துள்ளோம். சந்திப்பில் கலந்துகொள்ளும் எழுத்தாளர்களின் ஆக்கங்களை வாசகர்கள் முன்னரே வாசித்துவிட்டு வந்து அவர்களுடன் விவாதிக்கும்பொருட்டு இந்த ஏற்பாடு. இம்முறை மலேசிய எழுத்தாளர் சீ.முத்துசாமி அவர்கள் விருதுபெறுகிறார்கள். அவருடனான சந்திப்பும் கலந்துரையாடலும் நிகழும். அவருடைய நூல்களை கிழக்கு பதிப்பகத்தில் இருந்தும் உடுமலை தளத்தில் இருந்தும் பெற்றுக்கொள்ளலாம் மேகாலய எழுத்தாளரான ஜனிஸ் பரியத்
- இணையத்தில் நூல்கள் 24-Oct-2017
அன்புள்ள ஜெயமோகன், சீ.முத்துசாமியின் புத்தகத்தை விற்பனைக்கு ஆன்லைனில் ஏற்றி இருக்கிறோம். இதை தங்கள் வலைத்தளத்தில் வெளியிடவும். அன்புடன் பிரசன்னா ஆன்லைனில் வாங்க: http://www.nhm.in/shop/1000000026225.html போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234 / 9445979797 ( Paytm Available ) அமேசான் ஆன்லைனில் வாங்க : https://www.amazon.in/dp/B076P58PZ6?_encoding=UTF8&%2AVersion%2A=1&%2Aentries%2A=0&portal-device-attributes=desktop ஹரன் பிரசன்னா அன்புள்ள ஜெ, வணக்கம். கீழுள்ளது, என் வலைத்தள முகவரி. “விஷ்ணுபுரம் விழா – சந்திப்புகள்” பதிவுக்கு கீழே, நீங்கள் பின்னிணைப்பில் கொடுத்துள்ள இரு கதைகள் மட்டும் இல்லாமல் எனது வேறு கதைகளையும் இதில்
- தூயன் சிறுகதைகள் 04-Dec-2017
அன்புள்ள ஜெயமோகனுக்கு, விஷ்ணுபுரம் விழா சந்திப்பில் பங்கெடுக்கும் நண்பர்கள் வாசிப்பதற்காக தொகுப்பிலுள்ள சிறுகதைகள் சிலவற்றை என்னுடைய வலைத்தளத்தில் பதிவேற்றியிருக்கிறேன். தூயன் சிறுகதைகள் அன்புடன் தூயன்
- விஷ்ணுபுரம் விழா – ஓர் ஐயம் 09-Dec-2017
அன்புள்ள ஜெ, ஒரு சிறிய தெளிவுக்காக இக்கேள்வி. நான் இப்போதுதான் ஒரு வேலையில் நுழைந்திருக்கிறேன். மிகவும் சவாலான வேலை. காலையில் 7 மணிக்குக் கிளம்பினால் இரவு 10 மணிக்குத்தான் திரும்பி வருவேன். ஆகவே நீங்கள் கொடுத்துள்ள எந்த எழுத்தாளரையும் வாசிக்கமுடியவில்லை. சீ.முத்துசாமியையாவது வாசிக்கலாமென நினைத்தேன். நேரம் அமையவில்லை. வாசிக்காமல் எழுத்தாளர்களைச் சந்திக்கக்கூடாதென்று நீங்கள் ஒருமுறை சொல்லியிருந்தீர்கள். ஆகவே விஷ்ணுபுரம் நிகழ்ச்சிக்கு வரலாமா என்று சந்தேகம். உங்கள் எதிர்வினையை எதிர்பார்க்கிறேன். எஸ் அன்புள்ள எஸ், நான் சொன்னது தனிப்பட்ட
- எதிரொலித்த சொற்கள் 09-Dec-2017
2017 விஷ்ணுபுரம் விருதுவிழாவுக்கு வருகைதரும் மேகாலய எழுத்தாளர் ஜனிஸ் பரியத் எழுதிய கதை இது. நற்றிணை வெளியீடாக வரவிருக்கும் நிலம்மீது படகுகள் என்னும் தொகுதியில் இருந்து. விஷ்ணுபுரம் நண்பர்களால் மொழியாக்கம் செய்யப்பட்டது இத்தொகுதி ஜெ ஜெனிஸ் பரியத் விக்கிப்பக்கம் எதிரொலித்த சொற்கள் பலநேரங்களில் பேருந்து பயணிகளை இறக்கிவிடுவதை என் மளிகை கடை வாசலிலிருந்து பார்க்கும் போதெல்லாம் நான் அந்த பிரெஞ்சு பெண்ணையும், அவள் ஒரு சாதாரண மதியவேளையில் திடீரென ஷில்லாங்கிற்கு வந்ததையும் நினைத்துக் கொள்வேன். இடுப்புக்கு மேலிருந்து
- நிலம் மீது படகுகள் -ஜெனிஸ் பரியத் 11-Dec-2017
2017 விஷ்ணுபுரம் விருதுவிழாவுக்கு வருகைதரும் மேகாலய எழுத்தாளர் ஜெனிஸ் பரியத் எழுதிய கதை இது. நற்றிணை வெளியீடாக வரவிருக்கும் நிலம்மீது படகுகள் என்னும் தொகுதியில் இருந்து. விஷ்ணுபுரம் நண்பர்களால் மொழியாக்கம் செய்யப்பட்டது இத்தொகுதி ஜெ ஜெனிஸ் பரியத் விக்கிப்பக்கம் எதிரொலித்த சொற்கள் ஜெனிஸ் பரியத் நிலம் மீது படகுகள் நாம் எத்தனை முறை அந்த நதிக்கு சென்றோமோ அந்த எண்ணிக்கையை வைத்து நாம் இணைந்திருந்த நாட்களின் எண்ணிக்கையை என்னால் அளந்துவிட முடியும். பதினான்கு நாட்களில் பத்து முறை.
- எழுச்சியின்மையின் கலை – சீ.முத்துசாமியின் புனைவுலகு 16-Dec-2017
ஒருவேளை , கனவுகளும் நினைவுகளுமே வாழ்வின் மிகச்சுவையான பாகமாக இருக்குமோ? எல்லோரும் தூங்கும் நேரத்தில்,எழுந்து உட்கார்ந்து,ஓசைபடாமல் அழும்போது,ரொம்பவும் மெதுவாய்,நெஞ்சின் கரைகளிலெல்லாம் முட்டி நின்ற வெள்ளங்கள் வடியும்போது தோன்றுவது சுகம் தவிர வேறென்னவாய் இருக்க முடியும்? –இருளுள் அலையும் குரல்கள் குறுநாவலில் இருந்து எழுபதுகளில் அசோகமித்திரன் அமெரிக்காவின் அயோவா சிடியில் ஆறுமாதங்கள் தொடர்ந்து நடைபெற்ற உலகின் பல்வேறு மொழிகளின் எழுத்தாளர்கள் பங்கேற்ற மாநாட்டில் கலந்து கொள்கிறார். அவர் அங்கு சந்தித்த அனுபவங்களை அத்தியாயங்களாகப் பிரித்து ஒற்றன்
- விஷ்ணுபுரம் விருது 2017 புகைப்படங்கள் 18-Dec-2017
விஷ்ணுபுரம் விருது 2017 நாள் ஒன்று புகைப்படத் தொகுப்பு புகைப்படங்கள் இங்கு விஷ்ணுபுரம் விருது 2017 நாள் ஒன்று புகைப்படங்கள் கணேஷ் பெரியசாமி விருது 2017 நாள் 2 விருது விழா இரண்டாம்நாள் புகைப்படங்கள் இங்கே
- விஷ்ணுபுரம்விருது 2017 கடிதங்கள் -1 20-Dec-2017
விஷ்ணுபுரம் விருது விழா 2017 காணொளிகள் விஷ்ணுபுர இலக்கிய சந்திப்பு – சில குறிப்புகள் முதல் நாள் காலை முதலே நண்பர்கள் வர ஆரம்பித்து விட்டார்கள் சென்றமுறை சந்தித்தித்த நிறைய நண்பர்கள் கலந்துகொண்டாலும் புதியவர்கள் நிறைய பேர் வந்திருந்தார்கள். இந்த வருடம் புதியவர்களுக்கான ஒரு களமாக இருந்தது. முதலில் துயனும் அசோக்கும் அமர்வில் கலந்து கொண்டார்கள். இருவருமே தங்களின் எழுத்துக்கள் அகத்துக்கும் புறத்துக்கும் ஆன ஊடாட்டம் என்று சொன்னார்கள். குறிப்பாக இருவருமே தனிமை அழுத்தத்தை
- விஷ்ணுபுரம்விருது -2017 கடிதங்கள் 2 20-Dec-2017
- விஷ்ணுபுரம்விருது -2017 கடிதங்கள் 7 23-Dec-2017
விஷ்ணுபுரம் விருது விழா 2017 காணொளிகள் அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, கடந்த வருடம் விஷ்ணுபுரம் விருது விழாவில் முதன்முறையாக கலந்து கொண்டபின் என் எண்ணங்களை மின்னஞ்சலாக அனுப்ப முயன்றேன். ஆனால் விழாவைத் தொடர்ந்து தளத்தில் வெளியான கடிதங்களை பார்த்தபின் அந்த ஆவலை அடக்கிக்கொண்டுவிட்டேன். இம்முறையும் அதேபோல் ஆகிவிடக்கூடாது என்று எண்ணியிருந்தும் சற்று பிந்திவிட்டேன் என்பதை இன்று வெளியான விழா கடிதங்களை பார்த்து உணர்ந்து கொண்டேன். . வினாடிவினா நிகழ்ச்சி, நான் நாஞ்சில்நாடன், பி.ஏ.கிருஷ்ணன் கையெழுத்திட்டு அளிக்கிறோம் அலுவலக
- விஷ்ணுபுரம்விருது -2017 கடிதங்கள் 9 24-Dec-2017
அன்புள்ள ஜெயமோகன் அண்ணா, திங்கட்கிழமை இரவு 8 மணிக்கு வீட்டிற்கு வந்தேன். எத்தனை விரைவாய் தீவிரமுடன் ஓசையுடன் கடந்து போனது மூன்று நாட்கள் என்று ஒரு வியப்பு. ஓர் இனிய உணர்வு நிரம்பி இருந்தது. இத்தனை தீவிரமுடன் இருந்தால் தான் அது விழா. விழைவு கொண்டவர் வரவும் பெருவிழைவு கொண்டவரால் விழாது உயர்த்தி நிலை நிறுத்தப்படுவதும் தானே விழா? விழா மனநிலை கொண்டவர்க்குத் தானே விழா? தீவிரம் இல்லாவிட்டால் இலக்கியம் இல்லை. தீவிரம் இல்லாவிட்டால் எக்கலையும்
- விஷ்ணுபுரம்விருது -2017 கடிதங்கள் 12 25-Dec-2017
விஷ்ணுபுரம் விருது விழா 2017 காணொளிகள் அன்புள்ள ஜெ, விஷ்ணுபுரம் விருது விழாவிற்கு சனிகிழமை காலை 10மணிக்கு வந்து சேர்ந்தேன்.நான் கலந்து கொள்ளும் முதல் இலக்கிய விழா இது தான் அதனால் ஒரு மெல்லிய பதட்டமும் பயமும் இருந்தது. உங்களை தேடி கூட்டத்தில் கண்டுகொண்டேன்.அமர்வு முடிந்ததும் இடைவேளையில் உங்களை பார்க்க வாய்ப்பு அமையும் என்று காத்து நின்றேன். விழாவிற்காக நான் என்னை சிறிது தயார்படுத்தியும் வந்தேன் தூயன், போகன்,நாஞ்சில் நாடான்,முத்துசாமி ,ஜெனிஷ் ,வண்ணதாசன்
- விஷ்ணுபுரம்விருது -2017 கடிதங்கள் 13 26-Dec-2017
அன்புள்ள ஜெ அவர்களுக்கு, மிக கச்சிதமான எப்போதும் போன்ற விழாவாக இருக்கப் போகிறது என்கிற எண்ணம் இருந்தாலும் திருவிழாவை காணப்போகும் சிறுவனைப் போன்ற மனநிலையில் தான் இருந்தேன். 15 அன்று இரவு நன்றாக நினைவிருக்கிறது. சாலையில் இறங்கி ரயிலடிக்குள் செல்ல ஆரம்பித்ததுமே வீட்டுக் கவலைகள், பிரச்சனைகள், செய்ய நினைத்திருந்த வேலைகள் எல்லாம் காணாமல் போயின. நண்பர்களும், இலக்கியமும் அது தரும் சுகமும் என நினைப்பு முழுவதும் இவைகளே என ஆயிப்போயின. ரயிலினுள் கூட்டமில்லாமல் எந்த பிரச்சனையும் இன்றி அமைதியாக இருந்தது. அதனால் தான் என்னவோ தூக்கமே இல்லை. வெவ்வேறு யோசனைகள். போன
- விஷ்ணுபுரம்விருது -2017 கடிதங்கள் 14 27-Dec-2017
விஷ்ணுபுரம் விருது விழா 2017 காணொளிகள் அன்புமிக்க திரு ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். விஷ்ணுபுரம் விருது விழா- 2017 நிகழ்வுகளைக் கட்டுரைகளாகவும், புகைப்படங்களாகவும், காணொளிக் காட்சிகளாகவும் உங்கள் வலைத்தளத்தில் கண்டு மகிழ்ந்தேன். ஆண்டுக்காண்டு விழா மென்மேலும் சிறப்பாக நடைபெறுகிறது. தமிழ்நாட்டின் தலைசிறந்த எழுத்தாளர்கள் பலரையும், அவர்களின் உற்சாகமான வாசகர் வட்டத்தின் ஒரு பகுதியையும் சந்தித்து உறவாடி, உரையாடும் நற்பேரினை நீங்கள் முன்வந்து எனக்கு அளித்த போதிலும், ‘வலிய வந்த ஸ்ரீதேவியை’ப் புறக்கணித்ததின் வலியோடு இதை
- விஷ்ணுபுரம்விருது -2017 கடிதங்கள் 15 27-Dec-2017
விஷ்ணுபுரம் விருது விழா 2017 காணொளிகள் அன்புள்ள ஆசிரியருக்கு, மிக மேலோட்டமாக வாசிக்கிறேன் என்பதை உணர்ந்து கடந்த சில மாதங்களாகவே ஒரு விதமான பதட்டம் இருந்து கொண்டே இருக்கிறது. இது போன்ற இலக்கிய சந்திப்புகள் நம்முடைய வாசிப்பை புரிதலை மேம்படுத்தக் கூடியவை. அவ்வாறாகவே கடந்த முறை புதிய வாசகராக சென்ற கொண்டாட்ட மனநிலை இல்லையென்றாலும் இந்த முறை என்னை மேலும் கூர்மைப் படுத்திக்கொள்ளும் வாய்ப்பாக விழாவிற்கு வந்தேன். திருநெல்வேலியில் இருந்து
- விஷ்ணுபுரம்விருது -2017 கடிதங்கள் 16 28-Dec-2017
இனிய ஜெயம் , இம்முறை விழாவுக்கு ஒருநாள் முன்னதாகவே வந்து, விழா பணிகளில் மீனாம்பிகையுடன் இணைந்து கொள்வது என முடிவெடுத்து இருந்தேன் .
- விஷ்ணுபுரம்விருது -2017 கடிதங்கள் 17 28-Dec-2017
2017ம் ஆண்டு துவக்கம் முதலே எனது அன்றாட அலுவல்களுக்கும் வாசிப்பிற்குமான நேரமொதுக்குதல் என்பது பிறழ்ந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். இந்தச் சோம்பலுக்கான முறிமருந்தாக இலக்கியம்சார் நிகழ்ச்சிகளில் பங்கேற்றல், ஓரளவு எனை மீட்டுக்கொடுத்துவிடும் என நம்பியிருந்தேன். ஊட்டி காவிய முகாம் சென்று வந்து போதினும் சரிப்படவில்லை. வெண்முரசுடன் மட்டும் ஏதோ ஓடிவந்து கொண்டிருக்கிறேன். எனவே போதிய வாசிப்பின்மையாலும், அவையஞ்சி மெய்விதிர்ப்பார் வாசிப்பும் – வாசிக்காதார் அவையஞ்சா ஆகுலச் சொல்லும் பூத்தலின் பூவாமை நன்று என்னுஞ்சொல்லிற்கேற்பவும் இவ்வாண்டின்
- விஷ்ணுபுரம்விருது -2017 கடிதங்கள் 18 29-Dec-2017
ஜெ விஷ்ணுபுரம் விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. எனக்கு மிகப்பெரிய சந்தோஷம் என்னவென்றால் உங்கள் தளத்தில் கடிதம் எழுதும் பலரை சந்திக்கமுடிந்ததுதான். பலர் புகைப்படம் வழியாகத் தெரிந்தவர்கள். பலர் பெயர் மட்டும் தெரிந்தவர்கள். பலரை ஃபேக் ஐடி என இணையத்தில் வசைபாடுவதை கேட்டிருக்கிறேன். சரவணனிடமும் செந்திலிடமும் அதைச் சொன்னேன். பெரும்பாலும் எல்லா வாசகர்களையும் நீங்கள் தனிப்பட்ட முறையில் அறிந்திருக்கிறீர்கள், பெரும்பாலானவர்களைப்பற்றி ஏதேனும் ஒரு கிண்டலைச் சொல்லமுடிகிறது என்பது ஆச்சரியமாக இருந்தது. கிருஷ்ணனை நீங்கள் கிண்டல்செய்துகொண்டே இருப்பது
- விஷ்ணுபுரம் விருதுவிழா – நிறைவு 30-Dec-2017
அன்புள்ள ஜெ, விஷ்ணுபுரம் விருதுவழங்கும் விழா இன்று ஓர் இலக்கியக் கொண்டாட்டமாக ஆகிவிட்டிருக்கிறது. விழாவுக்கு வந்து ஒரு நிறைவையும் அதன்பிறகு அன்றாடத்தில் கலக்கும் சோர்வையும் அடைந்தேன். ஒரு பெரிய கேள்வி எழுந்துவந்தது. இந்த விழாவை ஏன் நடத்துகிறீர்கள்? இதனால் உண்மையில் என்ன நிகழுமென எதிர்பார்க்கிறீர்கள்? அது நிகழ்கிறதா? நாங்கள் உங்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறோமா? செந்தில்குமார் அன்புள்ள செந்தில், செந்தில்களுக்கு இனிமேல் எண்களை வைப்பதாக உத்தேசம். விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் அமைப்பை
- பி.எம்.மூர்த்தி – விதிசமைப்பவர் 01-Jan-2018
விஷ்ணுபுரம் விருதுவிழா விவாத அரங்கில் மலேசியாவின் கல்விநிலை குறித்த ஒரு பேச்சு உருவானது. அங்கே ஆரம்பக்கல்வி தமிழில் அளிக்கப்படுகிறது, புனைவிலக்கியம் கல்விநிலைகளில் கற்பிக்கப்படுகிறது என்னும் இருசெய்திகளை வரவேற்று பாவண்ணன். பேசினார். அவர் கடிதத்திலும் அதைக் குறிப்பிட்டிருந்தார் விஷ்ணுபுரம்விருது -2017 கடிதங்கள் 11 அதன் முழுமையான பின்னணியை நவீன் அவருடைய இக்குறிப்பில் விளக்குகிறார் ஜெ மலேசியத் தமிழ்க்கல்வி சூழல்; பி.எம்.மூர்த்தி மற்றும் விதிசமைப்பவர்கள் அன்பான ஜெ, எழுத்தாளர் பாவண்ணன் கடிதத்தை வாசித்தேன். மலேசியத் தமிழ்க்கல்வி சூழல் குறித்த அவரது எண்ணம்,
- விஷ்ணுபுரம் விருதுவிழா 2017 உரைகள் 22-Dec-2019
2017 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது மலேசியப்படைப்பாளியான சீ முத்துசாமி அவர்களுக்கு வழங்கப்பட்டது. விருதுவிழாவில் ஆற்றப்பட்ட உரைகள்