- ராஜ் கௌதமனின் சிலுவைராஜ் சரித்திரம் 12-Jul-2018
தன்வரலாறு எப்படி இலக்கியமாகிறது, ஆசிரியன் அந்தத் தானிலிருந்து கொள்ளும் தொலைவால்தான். இரண்டு வழிகளில் அந்தத் தொலைவு நிகழ்கிறது இலக்கியத்தில். ஒன்று, ,மாபெரும் தத்துவ, வரலாற்றுத் தரிசனத்தால் அதுவரையிலான தன்னை குறுக்கிச் சிறிதாக்கி ஆசிரியன் எழுந்து பேருருக்கொள்கையில். போரிஸ் பாஸ்டர்நாக்கின் டாக்டர் ஷிவாகோ அதற்கான உதாரணம் அதைவிட எளிய ,இனிய வழி ஒன்றுண்டு. தன்வரலாற்றின் கதைத்தலைவனை அதை எழுதும் ஆசிரியன் தோழன் எனக்கொண்டு தோளில் கையிட்டு வேடிக்கையும் சிரிப்புமாக உரையாடிச்செல்வது. இரண்டாவது வகைக்குச் சிறந்த உதாரணம் ராஜ் கௌதமனின்
- ராஜ் கௌதமனின் காலச்சுமை – சுரேஷ் பிரதீப் 14-Jul-2018
நவீன இலக்கியத்தின் முக்கியமான ஒரு பொதுக்கூறாக குறிப்பிடப்படுவது தனிமனிதனுக்கு அதில் கொடுக்கப்படும் முக்கியத்துவம். டால்ஸ்டாயின் எழுத்துக்களிலேயே அப்பண்பினை காண முடியும். அவருடைய புத்துயிர்ப்பு நாவலில் அரசமைப்பின் உச்சப் பதவிகளில் இருப்பவர்களின் மீது நெஹ்லூதவ் கொள்ளும் எரிச்சலை இப்பண்பிற்கு உதாரணமெனச் சுட்டலாம். அமைப்புகளால் கைவிடப்பட்ட அல்லது கண்டுகொள்ளப்படாதவர்களால் ஆனது அசோகமித்திரனின் படைப்புலகம். தற்கொலை செய்து கொள்ளுதல் எனும் உளவியல் சிக்கலில் சிக்கித் தவிப்பவள் அடுத்த வீடு கிடைக்குமா என நடைமுறைச் சிக்கலுக்குத் தள்ளப்படுவது (தண்ணீர்), தேசப்பிரிவினை நடைபெற்றுக் கொண்டிருக்கும்
- ராஜ் கௌதமன் படைப்புக்கள் 17-Jul-2018
ராஜ் கௌதமனின் நூல்களை நியூ செஞ்சுரி பதிப்பகம் மறுபதிப்புகளாக வெளியிட்டிருக்கிறது. மொத்தம் 12 நூல்கள். நாவல்கள், இலக்கியக் கோட்பாட்டு நூல்கள், வாழ்க்கை வரலாறுகள் என ஓர் எழுத்தாளரின் ஒட்டுமொத்தச் சித்திரத்தை அளிக்கும் நூல்கள் இவை ராஜ் கௌதமனின் சிலுவைராஜ் சரித்திரம் ====================================================================== சிலுவைராஜ் சரித்திரத்தை மதிப்பிடுதல் ராஜ்கௌதமனின் இரு நூல்கள் ராஜ் கௌதமன் -கடிதங்கள் விளக்கு விருதுகள் ராஜ் கௌதமன், சமயவேல்
- ராஜ்கௌதமன், திருப்பூர் சந்திப்பு, சிலுவைராஜ் சரித்திரம்… 21-Jul-2018
ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது அன்புக்குரிய ஜெ.மோ அவர்களுக்கு வணக்கம் ! நான் சந்தோஷ் குமார். திருப்பூரில் வசிக்கிறேன். மெடிக்கல் டிரான்ஸ்க்ரிப்ஷன் பணியில் உள்ளேன். தமிழ் இலக்கியங்களில் நாவல் ,சிறுகதைகள், கவிதைகள் வாசிப்பதையும் ஒரு பகுதி நேர பணியாகவே செய்கிறேன். சென்னையில் வாசகசாலை எனும் இலக்கிய அமைப்பு வாசிப்பு எனும் செயல்பாட்டை பொதுமக்களிடம் பரவலாக்க நண்பர்களால் நடத்தப்படும் அமைப்பு. கார்த்திகேயன், அருண், பார்த்திபன்,மாரி செல்வம் போன்ற நண்பர்களால் தொடங்கப்பட்ட வாசகசாலையின் முதலாம் ஆண்டு விழாவில் மூன்று நூல்களுக்கு
- ராஜ் கௌதமன் – விஷ்ணுபுரம் விருது-கடிதங்கள்-3 23-Jul-2018
ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது அன்புள்ள ஜெ இவ்வாண்டு விஷ்ணுபுரம் விருதுக்கு ராஜ் கௌதமன் தேர்வுசெய்யப்பட்டுள்ளது மிகவும் எதிர்பாராதது. பொதுவாக விஷ்ணுபுரம் விருதுகள் கதை எழுத்தாளர்கள், கவிஞர்களுக்கே அளிக்கப்பட்டுள்ளன. கட்டுரைநூல் எழுத்தாளர்களை விஷ்ணுபுரம் கருத்தில்கொள்வது மிகச்சிறந்த விஷயம். அவர்களுக்கு பொதுவாக எங்கேயுமே ஏற்பு கிடையாது. அவர்களின் ஏதேனும் ஒரு கருத்துடன் கடுமையாக முரண்பட்டு அவர்களை அப்படியே தவிர்த்துவிடுவார்கள். ஆனால் கதை கவிதை எழுதுபவர்களுடன் முரண்பட்டாலும் சில அம்சங்களில் அவர்களின் படைப்புக்களை ஏற்றுக்கொள்வார்கள். தமிழில் முக்கியமான பங்களிப்பாற்றிய
- ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் 5 25-Jul-2018
ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது அன்புள்ள ஜெ ராஜ் கௌதமனைப்பற்றிய குறிப்பில் ஒருவர் அயோத்திதாச பண்டிதரும் பகுத்தறிவுவாதிதான் என்று சொல்லியிருந்தார். முதல் விஷயம் அயோத்திதாசர் மரபான முறையில் தொடுவர்மம், மந்திரவாதக்கலை போன்றவற்றைச் செய்துவந்தவர். அவரிடம் மந்திரவாதச் சிகிச்சைக்குப்போனதைப்பற்றி திருவிக எழுதியிருக்கிறார். அதோடு அயோத்திதாசர் அவருடைய நூல்களில் சொல்லு புராணங்களை எல்லாம் உண்மையான நம்பிக்கையுடன் மட்டுமே சொல்லியிருக்கிறார். அவற்றை தொன்மங்களாக வாசிப்பது நம் வசதி. அயோத்திதாசர் நவீனத்துவம் உருவாக்கிய பகுத்தறிவு மரபைச் சேர்ந்தவர் அல்ல. அவர் அதற்கு
- சிலுவைப்பாடு – காளிப்பிரசாத் 02-Aug-2018
ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது அன்புள்ள ஜெ, ராஜ்கெளதமன் அவர்களைப் பற்றி இலக்கிய முன்னோடிகளிலும் நமது தளத்திலும் படித்திருந்தாலும் அவரை முழுவதுமாக படித்து அறிய ஒரு நல்வாய்ப்பு இந்த விருது நிகழ்வு. முதலில் சிலுவைராஜிடமிருந்துதான் துவங்கினேன். சிலுவையும் மற்ற குழந்தைகளைப்போல பிறந்தவுடன் குவா குவா என்றுதான் அழுதான் என்ற அறிமுகத்துடன் நாவல் துவங்குகிறது. இது ஆரம்பத்தில் சிரிப்பை வரவழைத்தாலும் நாவலை முடித்தவுடன் மீண்டும் இந்த வரியைப் படிக்கவேண்டும். அது அளிக்கும் உணர்வுகளே வேறு. ஆர்சி கிறிஸ்துவனாக பறையர்
- பாட்டும் தொகையும் ராஜ் கௌதமனும் – வளவ. துரையன் 24-Sep-2018
ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது சங்க இலக்கிய நூல்களில் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு ஆகியவை அகத்துறையைச் சார்ந்தவையாகும். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐந்திணைகளின் ஒழுக்கங்கள் அந்நூல்களில் பேசப்படுகின்றன. மேலும் அந்தந்த நிலப்பகுதிகளுக்குரிய கருப்பொருள் மற்றும் உரிப்பொருள்களும் அகத்துறை நூல்களில்,விரவி வருவதைக் காணலாம். கூடுதல், பிரிதல், இருத்தல், ஊடல், இரங்குதல் ஆகியன அந்நூல்களில் ஒழுக்கங்களாக பேணப்படுகின்றன. அகத்துறை நூல்களை ஆய்வு செய்த பெருமக்களெல்லாம் தலைவன், தலைவி, தாய், செவிலித்தாய், தோழி, பாங்கன்
- சிலுவையின் கதை 31-Oct-2018
அன்புள்ள ஐயா சிலுவைராஜ் சரித்திரத்தின் மீது கவனம் ஈர்த்தமைக்கு நன்றி ஒரு ஒடுக்கப்பட்ட இளைஞனின் தன் வரலாறு. 1950 இல் பிறந்த சுதந்திர இந்தியாவின் குழந்தை சாதிக்கொடுமைகளால் மதத்தில் ஆறுதல் தேடி, மதத்துக்குள்ளும் புகுந்துவிட்ட சாதியால் ஓட்டப் படும் கதை உள்ளுறையாக வாழ்வு முழுவதும் ஒரு விளையாட்டுத் துடுக்குத் தனத்தால் தன்னைப் போர்த்துக் கொள்கிறான் சிலுவை. அவனது பாட்டி ராக்கம்மா பொறுமையுடன் தாங்கிக் கொள்வதன் மூலம் இழிவைக் கடந்து செல்கிறாள். பாறையைப் போன்ற பொறுமை (நமது சாதி
- ராஜ் கௌதமன் -ஆரம்பக் கட்ட முதலாளியமும் தமிழ்ச் சமூக மாற்றமும் – சுரேஷ் பிரதீப் 21-Nov-2018
.ராஜ் கௌதமன் ராஜ்கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது விஷ்ணுபுரம் விழா: பங்கேற்பாளர்கள் ராமச்சந்திர குஹா தனது “இந்தியா காந்திக்குப் பிறகு” என்ற புகழ்பெற்ற நூலுக்கு எழுதிய முன்னுரையில் சமகால வரலாற்றெழுத்து சந்திக்கும் பிரச்சினைகளை விளக்குவதற்கு என்று ஒரு பகுதியை ஒதுக்கியிருப்பார். அப்பகுதியில் வரலாற்றெழுத்து சமகாலத்தை நோக்கி முன்னேறும் போது சிக்கல்கள் நிறைந்ததாக கருத்து முரண்களை ஏற்படுத்துவதாக இருப்பதை சுட்டியிருப்பார். ஆனால் காலம் பின்னுக்குச் செல்லச் செல்ல வரலாற்றெழுத்து அவ்வளவு முரண்களை கிளர்த்துவதில்லை. ஏனெனில் முற்கால வரலாற்றினை நாம்
- ராஜ் கௌதமனை அறிய… 28-Nov-2018
ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது விஷ்ணுபுரம் விழா: பங்கேற்பாளர்கள் இனிய ஜெயம் மார்க்சிய உரையாடல்களில் இரண்டு வகைமைகளை காண்கிறேன் .ஒன்று கோசாம்பி போன்றோர் முன்வைக்கும் செவ்வியல் மார்க்சியம் .மற்றொன்று ரொமிலா தாப்பர் போன்றோர் முன்னெடுக்கும்
- விஷ்ணுபுரம் விழா விருந்தினர்- 3 லீனா மணிமேகலை 08-Dec-2018
தமிழ் பண்பாட்டுத்தளத்தில் திரைப்பட இயக்குநர், ஆவணப்பட இயக்குநர், கவிஞர் என்னும் தளங்களில் தொடர்ச்சியாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பவர் லீனா மணிமேகலை. ஒரு களச்செயல்பாட்டாளருக்குரிய அஞ்சாமையும், நகைச்சுவையுணர்வும் கொண்ட ஆளுமை. லீனா மணிமேகலையின் கவிதைகள் இருதளங்களைச் சேர்ந்தவை. தன்மேல் சூழலும் மரபும் சுமத்திய பெண்மை என்னும் அடையாளங்களை கிழித்து தான் எவர் என்று நோக்கும் படைப்புகள். முதன்மையாக தன் காமத்தை, அதன் உயிர்வல்லமையை அவை கண்டுகொள்கின்றன. கூடவே தன் வரலாறின்மையையும் அதன் விளைவான வெறுமையையும். இன்னொரு தளத்தில்
- விஷ்ணுபுரம் ஆவணப்படங்கள் 21-Dec-2018
2018 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது பெறும் ராஜ் கௌதமனைப்பற்றி கே.பி,வினோத் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் பாட்டும் தொகையும் என்னும் ஆவணப்படம் கோவை ராஜஸ்தானின் சங் அரங்கில் 23-12-2018 அன்று விருதுவிழா தொடங்குவதற்கு முன்பு திரையிடப்படும் மாலை 530க்கு திரையிடல் தொடங்கும் விஷ்ணுபுரம் விருதுபெறும் ஆளுமைகளைப்பற்றி ஓர் ஆவணப்படம் வெளியிடவேண்டும் என்னும் எண்ணம் கே.பி.வினோத் முன்வைத்தது. அப்போதுதான் என் மகன் ஒரு காமிரா வாங்கியிருந்தான் என்பதே முதன்மையான காரணம். எங்களுக்கு எப்போதுமே நிதிக்கட்டுப்பாடு உண்டு. ஆகவே
- விஷ்ணுபுரம் விழா உரை – ஜெயமோகன் 26-Dec-2018
பேராசிரியர் ராஜ் கௌதமன் அவர்களுக்கு 2018 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது வழங்கும்பொருட்டு 23-12-2108 அன்று நிகழ்ந்த விழாவில் ஆற்றிய உரை
- விஷ்ணுபுரம் விழா: இலக்கியமெனும் களிப்பு 29-Dec-2018
விஷ்ணுபுரம் விருதுகளை முன்பெல்லாம் நவம்பர் வாக்கில்தான் முடிவெடுப்போம். சென்ற ஆண்டு சீ.முத்துசாமிக்கான விருதை ஆகஸ்டிலேயே அறிவித்தோம், மலேசியாவின் சுவாமி பிரம்மானந்தர் அவர்களின் ஆசிரமத்தில் நிகழ்ந்த இலக்கிய விழாவில். அது ஒரு நல்ல விளைவை உருவாக்கியது. கிட்டத்தட்ட நான்குமாதக்காலம் முத்துசாமி பேசப்பட்டார். அவருடைய படைப்புக்கள் வாசிக்கப்பட்டன. ஆகவே இவ்வாண்டு மேலும் முன்னரே ராஜ் கௌதமனுக்கான விருதை அறிவித்தோம். அவர் எழுதியவை ஆய்வுநூல்கள். அவற்றை வாசகர்கள் வாசித்துவிட்டு விழாவுக்கு வருவதற்கு அது உதவியாக இருந்தது. அரை ஆண்டுக்காலத்தை ஓர்
- விஷ்ணுபுரம் விழா:கடிதங்கள் 10 30-Dec-2018
அன்பின் திரு ஜெயமோகன் . மிகவும் சிறப்பான விழா . பங்குகொள்ள அழைத்தமைக்கு மனமார்ந்த நன்றி .. அனைவரும் பங்குகொள்ளும் படைப்பாளிகளை வாசித்துவிட்டு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது . எனது உரையாடல் பகுதி தாண்டியும் அடுத்த நாள் கிளம்பும் வரை நிறைய பேர் நேரில் சந்தித்து எனது படைப்புகளை குறித்து உரையாடல் நிகழ்த்தியது மனதிற்கு உற்காசமாகவும் , மகிழ்ச்சியாகவும் இருந்தது . அடுத்த ஆண்டும் நிச்சயம் கலந்துக்கொள்வேன் . நன்றி நரன்
- விஷ்ணுபுரம்விழா கடிதங்கள்-12 31-Dec-2018
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம். என்றும் நினைவில் இருக்கும் இரு நாட்களாக எனக்கே எனக்கானதாக ஒரு புதிய அனுபவமாக இருந்தது – நான் படித்து கொண்டிருக்கும் எழுத்தாளர்களை நேரில் காணும் ஏற்பட்ட ஒரு மெல்லிய தயக்கம் கலந்த மகிழ்ச்சி சொல்லில் விவரிக்க முடியாதது – தேவதேவன் அத்தனை அமளியில் வாசித்து கொண்டிருந்தார் . சற்று தயங்கியபடி உங்களிடம் பேசத் தொடங்கிய போது நீங்கள் அடையாளம் கண்டு கொண்டது மகிழ்ச்சியை அளித்தது. சரவணகார்த்திகேயன்
- விஷ்ணுபுரம்விழா கடிதங்கள்-13 31-Dec-2018
விஷ்ணுபுரம் விருதுவிழா:தேவிபாரதி உரை விஷ்ணுபுரம் விழா: அனிதா அக்னிஹோத்ரி உரை விஷ்ணுபுரம் விழா: மதுபால் உரை விஷ்ணுபுரம் விருது விழா : சுனீல் கிருஷ்ணன் உரை விஷ்ணுபுரம் விருதுவிழா:ராஜ் கௌதமன் உரை விஷ்ணுபுரம் விழா உரை – ஜெயமோகன் விஷ்ணுபுரம் விழா ஸ்டாலின் ராஜாங்கம் அன்புள்ள ஜெ. தங்களை பலமுறை மேடையில், சக வாசகர்கள் சூழ நின்று பேசிக் கொண்டிருக்க மௌனமாக நின்று கேட்டுவிட்டு அப்படியே கமுக்கமாக திரும்பிவிடுவேன். சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். விஷ்ணுபுரம்
- விஷ்ணுபுரம்விழா கடிதங்கள்-14 31-Dec-2018
விஷ்ணுபுரம் விருதுவிழா:தேவிபாரதி உரை விஷ்ணுபுரம் விழா: அனிதா அக்னிஹோத்ரி உரை விஷ்ணுபுரம் விழா: மதுபால் உரை விஷ்ணுபுரம் விருது விழா : சுனீல் கிருஷ்ணன் உரை விஷ்ணுபுரம் விருதுவிழா:ராஜ் கௌதமன் உரை விஷ்ணுபுரம் விழா உரை – ஜெயமோகன் விஷ்ணுபுரம் விழா ஸ்டாலின் ராஜாங்கம் அன்பின் ஜெ.. விஷ்ணுபுர விழா நன்றியுரைகளையே ஒரு தனிப்புத்தகமாகப் போடலாம். அவை ஒரு இயக்க வரலாற்றின் ஆவணங்களாக பிற்காலத்தில் அமையும். இம்முறை, அது, பிரதமன் சிறுகதையை நினைவு
- விஷ்ணுபுரம் விருதுவிழா உரைகள்- கடிதங்கள்-15 05-Jan-2019
விஷ்ணுபுரம் விருதுவிழா:தேவிபாரதி உரை விஷ்ணுபுரம் விழா: அனிதா அக்னிஹோத்ரி உரை விஷ்ணுபுரம் விழா: மதுபால் உரை விஷ்ணுபுரம் விருது விழா : சுனீல் கிருஷ்ணன் உரை விஷ்ணுபுரம் விருதுவிழா:ராஜ் கௌதமன் உரை விஷ்ணுபுரம் விழா உரை – ஜெயமோகன் விஷ்ணுபுரம் விழா ஸ்டாலின் ராஜாங்கம் அன்புள்ள ஜெ விஷ்ணுபுரம் விருதுவிழாவின் அனைத்து உரைகளுமே சிறப்பாக இருந்தன. ஒவ்வொரு உரையும் ஒவ்வொரு வண்ணம். நீங்களும் ஸ்டாலின் ராஜாங்கமும் ஆய்வாளரின் பாணியில் பேசினீர்கள். தேவிபாரதியும் சுனீல்கிருஷ்ணனும் எழுத்தாளர்களின்
- விஷ்ணுபுரம்விழா: கடிதங்கள்-16 09-Jan-2019
விஷ்ணுபுரம் விழா: இலக்கியமெனும் களிப்பு விஷ்ணுபுரம் அமைப்பின் கருத்தியல் என்ன? விஷ்ணுபுரம் ஆவணப்படங்கள் வணக்கம். மிக தாமதமாக எழுதுகிறேன். நீங்கள் இரு நாட்கள் முழுவதும் நடத்திய விழாப் பதிவுகளையும், காணொளிகளையும், ஆவணப்படத்தையும் பார்த்து முடிக்க எனக்கு இத்தனை நாட்கள் ஆகி விட்டன. மிகச் சிறப்பாக நடந்திருப்பது புரிகிறது. ஒவ்வொரு மணித்துளியும் பயனுள்ளதாக இருந்திருக்கிறது மகிழ்ச்சி. ராஜ் கெளதமனின் உரை அவரது ஆய்வுக்கட்டுரைகளோடு சமன் வைத்துப் பார்க்க முடியாத எளிமையைக் கொண்டிருக்கிறது. ஆவணப்படம், அவரை முப்பரிமாணத்தில் காட்டியிருக்கிறது
- விஷ்ணுபுரம் விழா- கடிதம் – 17 18-Jan-2019
விஷ்ணுபுரம் விழா: இலக்கியமெனும் களிப்பு விஷ்ணுபுரம் அமைப்பின் கருத்தியல் என்ன? விஷ்ணுபுரம் ஆவணப்படங்கள் விஷ்ணுபுரம்விழா: கடிதங்கள்-16 அன்புள்ள எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு, நலம். நலம் அறிய ஆவல். அது ஒரு கனா அல்லது லட்சியம் என்று சொல்லலாம். ஜூன் 2016-ல்சோற்றுக்கணக்கு கதை படிக்கப்போய், உங்கள் எழுத்துக்களில் ஈடுபாடு ஏற்பட்டு, ஒவ்வொருநாளும் உங்கள் எழுத்துக்களை தேடி படித்து, பழைய விஷ்ணுபுரம் விருது விழாக்களின் காணொளிகளை ,உங்கள் உரைகளை, யூடுயூபில் கேட்டு, உங்களை நேரில் சந்திக்கவும், விஷ்ணுபுரம் விருது விழாவில்
- விஷ்ணுபுரம் விழா – இரு பதிவுகள் 21-Jan-2019
விஷ்ணுபுரம் விழா: இலக்கியமெனும் களிப்பு விஷ்ணுபுரம் அமைப்பின் கருத்தியல் என்ன? விஷ்ணுபுரம் ஆவணப்படங்கள் விஷ்ணுபுரம்விழா: கடிதங்கள்-16 ஆளுயர மாலையும் விருதும் வழங்கப்பட தள்ளாடியதைப்போல் பாவனை செய்து கொண்டு அதைப் பெற்றுக்கொண்டார். அந்த பிரமாண்ட மேடையை ஒட்டுமொத்த விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தைத் சேர்ந்வர்களும் நிரப்பி குழு புகைப்படம் எடுத்தபின் ஜெமோவிடம் விடைபெற்றுக் கொண்டு அறைக்குத் திரும்பி பெட்டியை எடுத்துக்கொண்டு வழியில் தென்பட்டவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு அரங்கத்தின் வாசலை அடைந்தபோது கோவை ஞானி அரங்கத்தின் வாயிலில் தனது
- விஷ்ணுபுரம் விழா – கடிதம் 19 28-Jan-2019
விஷ்ணுபுரம் விழா: இலக்கியமெனும் களிப்பு விஷ்ணுபுரம் அமைப்பின் கருத்தியல் என்ன? விஷ்ணுபுரம் ஆவணப்படங்கள் விஷ்ணுபுரம்விழா: கடிதங்கள்-16 அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, எங்க யாராலும் மறக்கவே முடியாத வருசமா இந்த வருஷம் அமைஞ்சு போச்சு,குறிப்பா விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா அதுல கிடைச்ச சந்தோசம் உங்களோட புத்தகங்களான தன்மீட்சி,உரையாடும் காந்தி இதை இரண்டையும் உங்க கையில சேர்த்தது பெரும் நிறைவு .வெள்ளிக்கிழமை மாலை தொடங்கியது பரபரப்பு , நிறைய தயக்கங்களோட உள்ள நுழைஞ்சோம். எல்லோருக்கும் எங்களை உங்கள் இணையத்துல வந்து இருந்த