- விஷ்ணுபுரம்விருது,சுரேஷ்குமார இந்திரஜித்- கடிதங்கள் -9 25-Aug-2020
விஷ்ணுபுரம் விருது 2020 சுரேஷ்குமார இந்திரஜித்துக்கு 2020க்கான விஷ்ணுபுரம் விருதுக்கு சுரேஷ்குமார இந்திரஜித் தேர்வுசெய்யப்பட்டு இருக்கிறார். என் தனிப்பட்ட மகிழ்ச்சியும் நல் வாழ்த்துகளும் . என் விருப்பப் படைப்பாளிகளில், நண்பர்களில் அவர் ஒருவர். அவருடைய அலையும் சிறகுகள், மறைந்து திரியும் கிழவன் பருவத்திலிருந்து சமீபத்தில் உயிர்மை இணைய இதழில் எழுதிய 50 குறுங்கதைகள் வரை தொடர்ந்த வாசிப்பில் இருக்கும் எனக்கு வெவ்வேறு புதிர்களுக்களுக்கும் அபத்தங்களுக்கும் இடையில் அவர் வாழ்வையும் மனிதர்களையும் கலைத்துப் போடும் விதம் பிடித்திருக்கிறது. ஒன்று
- சுரேஷ்குமார இந்திரஜித் மின்நூல்கள் 02-Sep-2020
அன்புள்ள ஜெ எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித்தின் புத்தகங்கள் இப்போது கிண்டிலில் கிடைக்கின்றன. நான்கு சிறுகதை தொகுப்புகள். ஒரு குறுங்கதை தொகுப்பு. ஒரு நாவல். https://cutt.ly/qfoJbYi சுனில்
- எழுத்தின் புதிர் – கா.சிவா 03-Oct-2020
விஷ்ணுபுரம் விருது 2020 சுரேஷ்குமார இந்திரஜித்துக்கு சுரேஷ்குமார இந்திரஜித் மின்நூல்கள் பொதுவாக ஒரு சிறுகதைத் தொகுப்பை வாசித்து முடிக்கும்போது அந்த ஆசிரியர் கூற உத்தேசித்தது எது என்பது பற்றிய தெளிவான சித்திரம் நமக்கு கிடைத்துவிடும். ஆனால் சுரேஷ்குமார இந்திரஜித் அவர்களின் தேர்ந்தெடுத்த சிறுகதைகளின் தொகுப்பான “பின் நவீனத்துவவாதியின் மனைவி” தொகுப்பை வாசித்து முடித்தபோது அம்மாதிரியான ஒருமுடிவுக்கு வரமுடியவில்லை. சுரேஷ்குமார இந்திரஜித் தனது கதைக்கருவாக வாழ்வின் எதிர்பாராத தன்மையை, அதன் அபத்தத்தை எடுத்துக் கொள்கிறார் எனக் கூறலாம். முற்றுப்புள்ளி,
- சுரேஷ்குமார இந்திரஜித் குறுங்கதைகள் – கடலூர் சீனு 28-Nov-2020
விஷ்ணுபுரம் விருது 2020 சுரேஷ்குமார இந்திரஜித்துக்கு சுரேஷ்குமார இந்திரஜித் மின்நூல்கள் உலக அளவில் குட்டிக்கதைகளில் இருந்து முகிழ்த்து கதைகள் என வளர்ந்து கிடைத்தது சிறுகதை எனும் செவ்வியல் வடிவம். அந்த வடிவத்தின் மீது அழகியல் போக்குகள் உள்ளிட்ட இலக்கியத்தின்இன்னபிற விஷயங்கள் கூடி முயங்கி சிறுகதைகள் இன்றளவும் மொழியின் இணையற்ற கலைவெளிப்பாட்டு வடிவமாகி நிற்கிறது. மொழியில் படைப்புத் திறனின் கடைசி குழந்தை சிறுகதைதான் என்று சுந்தர ராமசாமி குறிப்பிடுவார். இந்தக் கடைசி குழந்தை எனும் இடத்தை எடுத்துக்
- விஷ்ணுபுரம் விருது, கடந்த ஆண்டு… 10-Dec-2021சுரேஷ்குமார இந்திரஜித் அவர்களுக்கு சென்ற 2020க்க்கான விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டது. விஷ்ணுபுரம் விருதுகளிலேயே கொண்டாட்டம் இல்லாமல் நிகழ்ந்தது இதுதான். கோவிட் கட்டுப்பாடுகள் முழுமையாகவே கடைப்பிடிக்கப்பட்டன. மதுரையில் ஒரு ஓட்டல் அறையிலேயே விருதுவிழா. ஆனால் அறைகொள்ளாமல் நண்பர்கள் வந்திருந்தனர். அவர்களை இன்னொரு அறையில் நிற்கவைத்தோம். சுரேஷ்குமார இந்திரஜித் சுவாசநோய் கொண்டவர். ஆகவே கோவிட் பற்றி மிக எச்சரிக்கையாக இருந்தோம். அறை அவர் வருவதற்கு முன்பு முற்றாக தூய்மை செயப்பட்டது விஷ்ணுபுரம் நண்பர் ராம்குமார் ஐ.ஏ.எஸ் விருதை வழங்கினார். ...