- குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது 2018 29-May-2018
மறைந்த கவிஞர் குமரகுருபரன் நினைவாக விஷ்ணுபுரம் அமைப்பு சென்ற ஆண்டுமுதல் அளிக்கப்பட்டுவரும் குமரகுருபரன் நினைவு விஷ்ணுபுரம் விருது இவ்வாண்டு கவிஞர் கண்டராதித்தனுக்கு வழங்கப்படுகிறது. விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தைச் சேர்ந்தவர் கண்டராதித்தன். இதழியலாளர். இயற்பெயர் இளங்கோ. கண்டாச்சிபுரத்தை ஆண்ட சிற்றரசர் கண்டராதித்தர் நினைவாகக் கண்டராதித்தன் என்கிற பெயரில் கவிதைகள் எழுதி வருபவர் கண்டராதித்தன் கவிதைகள் (2002) சீதமண்டலம் (2009) திருச்சாழல் (2015) என மூன்று தொகுதிகள் வெளிவந்துள்ளன. இவற்றில் திருச்சாழல் சென்ற இரண்டு ஆண்டுகளில் பெரிதும்
- பெயர் சொல்லாதது சரசரக்கும் பாதை -கடலூர் சீனு 31-May-2018குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது 2018 கண்டராதித்தன் கவிதைகள் கவிஞர் கண்டராதித்தன் அவர்களுக்கு கவிஞர் குமரகுருபரன் -விஷ்ணுபுரம் விருது எனும் செய்தி மகிழ்வு அளித்தது . முந்தய விருது பெற்ற கவிஞர் சபரிநாதன் கவிதைகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக இணையத்தில் வாசித்திருந்தேன் . விருது அறிவிப்புக்குப் பிறகே அவரது தொகுதிகளை தேடிப் படித்தேன் . இம்முறையும் அவ்வாறே . புனைவுகள் என்று வருகையில், என் தேர்வில் கவிதைகள் இரண்டாம் நிலையில் நிற்கக் காரணம் கவிதை எனும் இயல் ரசனையின் உச்ச சிகரத்தில் திகழ்வது . ...
- கண்டராதித்தன் கவிதைகள் 01-Jun-2018
குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது பெறுமதியான கவிதைகளுக்கும் செயல்பாடுகளுக்கும்தான் சென்றுசேர்கிறது என்பதில் மிக்க மகிழ்ச்சி. இம்மின்னஞ்சலுடன் அவருடைய மூன்று தொகுப்புகளில் இருந்தும் சில கவிதைகளை தேர்ந்தெடுத்து இணைத்திருக்கிறேன். வி.என்.சூர்யா குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது 2018 பெயர் சொல்லாதது சரசரக்கும் பாதை -கடலூர் சீனு நித்யா நிறைந்த அறை இந்த அறையை நித்யா வியாபித்தது போல துயரம் வியாபிக்கிறது சமயத்தில் துயரம் வியாபித்திருந்தது போலவே நித்யாவும் வந்து வியாபிப்பாள் அல்லது நித்யா வந்து நிறைந்த துயரம் வியாபிக்கும்
- சாழற்மலர்ச்செண்டு 02-Jun-2018
- அந்தரப்பந்துகளின் உலகு- பிரபு மயிலாடுதுறை 03-Jun-2018
வாசிக்க நேரும் புதிய கவிதையும் அறிமுகமாகும் புதிய கவிஞனும் வாசகன் இதுவரை சஞ்சாரித்த உலகில் இருக்கும் இன்னும் கண்டடையப்படாத பிரதேசம் ஒன்றையோ அல்லது பிரதேசங்களையோ கோடி காட்டி விடுகின்றனர். ஆர்வம் தீராத வாசகன் புதுப் பிராந்தியத்துக்குச் செல்லும் போது அவனுக்குப் பழக்கமாயிருந்த உலகம் புதிய பிரதேசங்களாலும் புதிய பிரதேசங்கள் பழகியிருந்த உலகத்தாலும் சமன் செய்யப்பட்டு ஆசுவாசம் கொள்கிறான். தான் அறிந்த உலகிற்கு மிக அண்மையில் இருந்திருக்கும் இப்புதிய பிராந்தியத்தைத் தான் அறியாது போனது எங்கனம் என வாசகன்
- ஏகமென்றிருப்பது 04-Jun-2018
“குறைவான சொற்கள் கொண்டவர்கள் புதுக்கவிஞர்கள்” என்று என்னிடம் முப்பதாண்டுகளுக்கு முன் பிரமிள் சொன்னார். நான் அவருடன் உரையாட நேர்ந்த குறைவான தருணங்களில் ஒன்று அது. அவர் என்னை சுந்தர ராமசாமியை வசைபாடுவதற்கான முகாந்திரமாகவே பயன்படுத்திக்கொள்வார். ஆனால் வழக்கமான ‘பார்ப்பனவாதம்’ பற்றிய வசைகளை என்னிடம் சொல்லமாட்டார். நான் அதை பொருட்டாக நினைக்கமாட்டேன் என அவருக்குத்தெரியும். அவருக்கும் அது ஒரு பொருட்டு அல்ல. அவருக்கு அது ஒரு நல்ல தடி. அதைக்கொண்டு அவரால் சுந்தர ராமசாமியை எளிதில் ஓரம்கட்ட முடியும்
- குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது விழா அழைப்பிதழ் 04-Jun-2018
குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது 2018 மறைந்த கவிஞர் குமரகுருபரன் நினைவாக அளிக்கப்படும் குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது குமரகுருபரன் பிறந்தநாளான ஜூன் 10 அன்று சென்னையில் வழங்கப்படவுள்ளது. தமிழ் புதுக்கவிதைத்தளத்தில் செயல்படும் இத்தலைமுறைக் கவிஞர்களில் முக்கியமானவரான கண்டராதித்தன் அவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தைச் சேர்ந்த கண்டராதித்தனின் இயற்பெயர் இளங்கோ. இதழியலாளர். கண்டராதித்தன் கவிதைகள் (2002) சீதமண்டலம் (2009) திருச்சாழல் (2015 என மூன்று தொகுதிகள் வெளியாகியிருக்கின்றன. ஐம்பதாயிரம் ரூபாய் பரிசும் நினைவுச்சின்னமும்
- வான்சரட்டுக் கோவணம் – ஏ.வி.மணிகண்டன் 05-Jun-2018தனித்த மொழி கொண்ட ஒரு கவிஞனின் கவிதையுலகுக்குள் முதல் முறை நுழைவது, ஒரு பயணத்தில், புதிய இடத்தில் உறக்கத்திலிருந்து எழுவது போல. அத்தனை நிச்சயமாக வலது மூலையில் கதவும், நேர் எதிராக ஜன்னலும் இருக்குமென்ற அன்றாட வாழ்வின் பிரஞ்ஞை பதறி துடித்து விலகும் கணம் உருவாக்கும் பதற்றத்தோடு புதிய சூழலுக்குக் கண் விழிப்பது. சென்ற வருடம், சமீபத்தில் வெளி வந்த கவிதைத் தொகுதிகளை வாசிக்க முனைந்த போது முதல் முறை கண்டராதித்தனின் தொகுதியை வாசித்தேன். ஒரு விஷ்ணுபுரம் ...
- கண்டராதித்தன் கவிதைகள் :கடிதங்கள் 07-Jun-2018அன்புள்ள ஜெ விஷ்ணுபுரம் – குமரகுருபரன் விருது பெற்ற கண்டராதித்தன் பற்றிய கட்டுரைகளைத் தொடர்ச்சியாக வெளியிட்டுவருகிறீர்கள். விருதுகள் நிறையவே வழங்கப்படுகின்றன. இவ்வாறு அக்கவிஞரை அனைத்துவகையிலும் கவனப்படுத்தி முன்னிறுத்தும் கட்டுரைகளை வெளியிடுவதுதான் மேலும் முக்கியமானது என நினைக்கிறேன். ஏனென்றால் இங்கே கவிஞர்களின் எழுத்துக்களை மிகக்குறைவானவர்களே வாசிக்கிறார்கள். பெரும்பாலும் கவிதை எழுதுபவர்கள் மட்டுமே கவிஞர்களை வாசிக்கிறார்கள் என நினைக்கிறேன். இருநூறுபேர் கவிதைவாசகர்கள் இருந்தால் ஆச்சரியம். ஆகவே ஒரு கவிஞனைப்பற்றிய குறிப்பு பிரசுரமாவதே அரிதாக உள்ளது. இந்நிலையில் ஒரு கவிஞரைப்பற்றி தொடர்ச்சியாக வெளிவரும் ...
- பகடையின் மாறிலி – அருணாச்சலம் மகராஜன் 08-Jun-2018
“சொல் இருமுனை கொண்டது. அதன் ஒலியெனும் முனையே புறவுலகை தொட்டுக்கொண்டிருக்கிறது. மறுமுனையில் குறிப்புஎனும் கூர் முடிவிலியை தொடுகிறது.” என்கிறது வெண்முரசு. சொற்களின் இணைவான படைப்பிலக்கியத்தில் சிறுகதை துவங்கி நாவல், காவியம், கவிதை என பல வடிவங்கள் உள்ளன. அனைத்து வடிவங்களும் புறவுலகு என்னும் முனையை தொட்டு விரிவாக்கி நம்முன் பரப்புபவையே, கவிதை தவிர்த்து. கவிதை என்னும் வடிவம் புறத்தைக் காட்டக் கூடாது என்றில்லை, ஆனால் அதோடு மட்டுமே நின்று விடுவது நல்ல கவிதை அல்ல. நனவுள்ளம்,
- கண்டராதித்தன் -ஒரு கடிதம் 10-Jun-2018
ஜெ, கண்டராதித்தனின் கவிதைகளை இப்போதுதான் கவனிக்கத்தொடங்கினேன். அவருடைய திருச்சாழல் விகடன் விருதுபெற்றதை அறிந்திருந்தேன். ஆனால் இங்கே கவிதைகளை எவரேனும் எங்கேனும் சுட்டிக்காட்டாமல் வாசிக்கத் தோன்றுவதில்லை. ஏனென்றால் கவிதைகள் பெரும்பாலும் குப்பையாகவே எழுதப்படுகின்றன. உழைப்பு இல்லாமல் எழுதமுடியும் என்பதனாலும், உடனடியான எதிர்வினையாக இருப்பதனாலும் எழுதுகிறார்கள். அதோடு ஏற்கனவே எழுதப்பட்டவற்றை கொஞ்சம் மாற்றி மீண்டும் எழுதமுடியும் என்பதனாலும் எழுதுகிறார்கள். ஆகவே கவிதை விஷயத்தில் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது என் வழக்கம். கவிதைகளை எவராவது சொன்னாலொழிய, சாம்பிள் வாசித்தாலொழிய வாங்குவதில்லை.ஏனென்றால் நூல்களை
- எளிமையில் தன்மாற்றம் அடைந்த கவிஞன் – லக்ஷ்மி மணிவண்ணன் 10-Jun-2018“நீண்ட காலமாக ஒருவித விறைப்புத் தன்மையுடனேயே இருப்பவர்களைக் காணும்போது அச்சம் தோன்றி நிற்கிறது “ கண்டராதித்தன் கவிதைகள் ,சீதமண்டலம் ஆகிய இரண்டு கவிதைத் தொகுப்புகளைக்கடந்து கண்டராதித்தனின் திருச்சாழல் கவிதைத் தொகுப்பு வெளிவந்த போது அதன்முன்னுரையில் அவர் எழுதியிருந்த ஒரு வாசகம் இது.அந்த தொகுப்பில் மிகுந்தஎளிமையுடன் வாசகனின் முன்பாக நின்று கொண்டிருந்தார்.எளிமையெனில் கவித்துவத்தின் மெருகு கூடிய எளிமை.முற்றிலும் அனுபவங்களின் முன்பாகநிர்வாண நிலையில் நிற்க தயாராக இருக்கிறேன் என அறைகூவல் விடுப்பது போன்றஎளிமை.தன்னையே உதறி அசையில் உலர வைத்திருப்பது போலும் எளிமை. ...
- காலம்-காதல்-சிதைவு -வே.நி.சூர்யா 10-Jun-2018தேடலும் செயலும் ஒன்றாக அலைந்துகொண்டிருந்த கொந்தளிப்பான காலங்கள் கடந்துவிட்டிருக்கின்றன. நகரம், அதிகாரம், கடவுள், உடல், வீடு என்பவைகளின் மீதிருந்த புனிதப் புகைமூட்டங்கள் மூர்கத்துடன் கலைக்கப்பட்ட காலங்கள் அவை. அக்காலங்கள் திரும்பப்போவதில்லை. எஞ்சியிருப்பதோ அக்காலத்தின் ஞாபகங்களும் ஏக்கங்களுமே. இப்போது 2010க்கு பின்பான ஒரு காலகட்டத்தில் நின்று கொண்டிருக்கிறோம். “எனக்கு எல்லாம் ஒன்றுதான்” எனும் குரலே இக்காலத்தின் குரல் (அப்படி சொல்லும்போதே ஒரு எள்ளல் வந்துவிடுகிறது). காலம் சுவீகரித்து வைத்திருந்த அத்தனை தத்துவார்த்தமான பின்புலங்களும் வரலாற்றின் நம்பகத்தன்மையும் ஆன்மீக தன்மைகளும ...
- குமரகுருபரன் விருதுவிழா 11-Jun-2018
அன்பு ஜெயமோகன் அவர்களுக்கு,இத்துடன் குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது – 2018 நிகழ்வின் காணொளிகள் உங்கள் பார்வைக்கு… விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது – 2018 எழுத்தாளர் ஜெயமோகன் உரை Jeyamohan speech https://www.youtube.com/watch?v=Qq1BsNMunn8 டி பி ராஜீவன் உரை T. P. Rajeevan speech https://www.youtube.com/watch?v=D02clr1R6kc கவிஞர் கலாப்ரியா உரை https://www.youtube.com/watch?v=XTBtNbuB-LY எழுத்தாளர் அஜயன் பாலா உரை https://www.youtube.com/watch?v=6EXqc3888BM காளி பிரசாத் உரை https://www.youtube.com/watch?v=5pVPCNTLYS4 கவிஞர் கண்டராதித்தன் ஏற்புரை https://www.youtube.com/watch?v=tV2Eb3d2r_I நன்றி கபிலன் – சுரேஷ்குமார்
- கண்டராதித்தன் பற்றி — சுயாந்தன் 13-Jun-2018
அன்புள்ள ஜெ, கண்டராதித்தனின் கவிதைகள் பற்றி ஒரு பதிவை எழுதியுள்ளேன். நேரமிருந்தால் ஒருமுறை பாருங்கள். அதன் லிங்கினைக் கீழே இணைத்துள்ளேன். சுயாந்தன். இந்த வெண்மையின் மரபு நவீன கவிதையிலும் தொடர்ந்து வரும் ஒன்றாக உள்ளது. பலர் செவ்வியலை அப்படியே உள்வாங்கி எழுதித் தள்ளுவர். ஒருசிலரே வெள்ளையின் நவீன சித்திரத்தைச் செவ்வியலுடன் சேர்த்தால் போன்ற படைப்பை வழங்குவர் கண்டராதித்தனின் கவிதைகள்: ஒரு பார்வை- சுயாந்தன் முந்தைய கட்டுரைகள் 1 எளிமையில் தன்மாற்றம் அடைந்த கவிஞன் – லக்ஷ்மி மணிவண்ணன் 2 காலம்-காதல்-சிதைவு
- குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருதுவிழா 13-Jun-2018
குமரகுருபரன் விருதுவிழா -காணொளிகள் அன்புள்ள ஜெ விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருதுவிழா மிகச்சிறப்பாக நிகழ்ந்தது. விருது எப்படி அளிக்கப்படவேண்டும் என்பதற்கான முன்னுதாரணம். கடந்த பத்துநாட்களாக கண்டராதித்தன் பற்றியே பேசியாகவேண்டும் என்று சொல்லுமளவுக்குக் கட்டுரைகள், குறிப்புகள், விவாதங்கள். ஆனால் வெற்றுப்புகழுரைகள் அல்ல அவை என்பதையும் உங்கள் பேச்சு காட்டியது. மிகத்தேர்ந்து வாசித்து மிகக்கறாராக மதிப்பிட்டுத்தான் கவிஞர்களை தெரிவுசெய்கிறீர்கள், அதன்பின் விருதை அவர்களுக்கு பெரிய கொண்டாட்டமாக அளிக்கிறீர்கள். உங்கள் நண்பர்களும் நீங்களும் எடுத்துக்கொள்ளும் முயற்சியும் அதிலிருக்கும் ஒழுங்கும் பிரமிக்கத்தக்கவை. கண்டராதித்தனைப்பற்றி எல்லா
- நாவல், கவிதை, விழா 14-Jun-2018
விழா புகைப்படங்கள் கணேஷ் பெரியசாமி விழா உரைகளின் காணொளிகள் -சுருதி டிவி கவிஞர் கண்டராதித்தனுக்கு குமரகுருபரன் –விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா சென்னையில் சென்ற 10-6-2018 அன்று நிகழ்ந்தது. ஜூன் பத்து குமரகுருபரன் மறைந்த நாள். எல்லார் நினைவிலும் ஏதோ ஒருவகையில் நிறைந்து வாழ்ந்தவர் அவர். விரைவிலேயே விடைபெற்றுச்செல்பவர்களின் வாழ்க்கையை முன்னரே நோக்கினால் மிகையான சலிப்பும் ஒதுங்குதலும் அல்லது மிகையான துடிப்பும் பாதிப்பூட்டும் தன்மையும் காணப்படும் என்பார்கள். எல்லா இடத்திலும் தடம்விட்டுச்செல்லும் நோக்குடன் அறைந்தும் அடித்தும் சென்ற
- குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருதுவிழா -கடிதங்கள் 15-Jun-2018
அன்பு ஜெயமோகன், வணக்கம். இந்த ஆண்டு குமரகுருபரன் கவிதை விருது கண்டராதித்தனுக்கு வழங்கப்பட்டதில் மிகவும் மகிழ்ச்சி. கவனம் ஈர்க்கும் பரபரப்புகளின்றி இயங்குபவர் கண்டராதித்தன். எழுத்துக்கு வெளியில் எங்கும் தன்னை முன்வைக்காதவர். அவருடைய கவிதைகளின் தகைமை அறிந்து இவ்விருதுக்குத் தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி. அவரோடும் அவரது கவிதைகளோடும் 20 ஆண்டுகளுக்கு மேற்பட்ட நட்பும் பரிச்சயமும் கொண்டவன் என்ற வகையில் நானும் மகிழ்கிறேன். விருது விழாவில் உங்களை நேரில் சந்தித்து இதைச் சொல்ல விரும்பியிருந்தேன். தவிர்க்கவியலாத ஓர் உள்ளூர் நிகழ்வினால்
- கண்டராதித்தன் விருது விழா -முத்து 19-Jun-2018
அதற்குப்பின் நன்றி கூற வந்த கண்டராதித்தன் தான் கொண்டு வந்திருந்த பேச்சுக்கான குறிப்பு காணாமல் தேடி, மேடையிலிருந்தவாரே தன் நண்பனை அழைத்து அக்குறிப்பைக் கொண்டு வரச்சொன்னது ஒரு கவிதை. அதற்குப்பின் இந்த ஒட்டுமொத்த நிகழ்வையும் தாங்கிப் பிடித்திருந்த குருஜி சௌந்தர் தனக்கும் சேர்த்தே தன் நன்றியுரையில் நன்றி கூறிக்கொண்டு விழா நிகழ்வுகளை முடித்து வைத்தார். மணி ஒன்பதைத் தொட்டிருந்நது. முத்து எழுதிய குறிப்பு – குமரகுருபரன் விருதுவிழா பற்றி