- சிங்கப்பூர் விஷ்ணுபுரம் இலக்கியவட்டச் சந்திப்பு,2016 17-Sep-2016
வருடந்தோறும் ஊட்டி நித்யா குருகுலத்தில் நடத்தும் குருநித்யா ஆய்வரங்கம் இவ்வருடம் நடத்தப்படவில்லை. இரண்டு காரணங்கள். ஒன்று, இளம்வாசகர்களைச் சந்திப்பதன்பொருட்டு இவ்வருடம் மூன்று சந்திப்புநிகழ்ச்சிகள் நடந்தன. இரண்டு, நான் மே மாதம் முதல் தொடர்ச்சியாகப் பயணத்தில் இருக்கிறேன். சிங்கப்பூருக்கு உடனுறை எழுத்தாளர் திட்டப்படி வந்து இரண்டுமாதம் தங்கியிருக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டதுமே அரங்கசாமிதான் இந்த எண்ணத்தைச் சொன்னார். சிங்கப்பூரில் ஒரு வாசகர் சந்திப்பை நிகழ்த்தினால் என்ன? தமிழகத்திலிருந்து முப்பதுபேர் சிங்கப்பூரிலிருந்து முப்பதுபேர். வருகையாளர்களை அங்குள்ள நண்பர்கள் இல்லத்தில் தங்க வைக்கலாம்.
- சிங்கப்பூர் விஷ்ணுபுரம் இலக்கியவட்டச் சந்திப்பு,2016 – 2 18-Sep-2016
இன்றுகாலை சரியாக ஒன்பது மணிக்கு சிங்கப்பூர் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட இலக்கிய அரங்கு தொடங்கியது. இந்தியாவிலிருந்து 27 பேர் கலந்துகொண்டார்கள். சிங்கப்பூரிலிருந்து 30 பேர். தேசிய கலைக் கழகம் சார்பில் கவிதாவும் சிங்கப்பூர் தேசிய கல்வி நிலையம் சார்பில் முனைவர் சிவக்குமாரன் அவர்களும் சிறப்புவிருந்தினர்களாக வந்து கலந்துகொண்டார்கள். விஜயராகவன் சுருக்கமாக வரவேற்புரை அளிக்க நிகழ்ச்சி தொடங்கியது. முதல் அரங்கு கம்பராமாயணம். ஆனால் நேற்று வந்திறங்கியபோதே நாகர்கோயிலில் இருந்து நாஞ்சில்நாடனின் தாயார் இறந்துவிட்ட தகவல் வந்தது.
- சிங்கப்பூர் விஷ்ணுபுரம் இலக்கியவட்டச் சந்திப்பு,2016 – 3 19-Sep-2016
இன்று இரண்டாவது நாள் அமர்வு. நேற்று மாலை வளைகுடாப்பூந்தோட்டம் பார்த்துவிட்டு திரும்பியபோது கிருஷ்ணனும் சந்திரசேகரும் வந்தார்கள். சப்பாத்தி சுட்டு சாப்பிட்டுவிட்டு தூங்க இரவு பன்னிரண்டு மணி ஆகிவிட்டது. காலையில் ஏழுமணிக்கே ரெடியாகிவிடவேண்டும் என சரவணன் சொல்லியிருந்தார். இருந்தும் இரவு நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தோம். இத்தகைய நிகழ்ச்சிகளின் பிரச்சினையே இதுதான் நீண்ட அரங்குகள் நம்மை மேலும் பேசவைக்கின்றன. உள்ளம் கொப்பளிப்பதைப் பேசாமல் தூங்கமுடியாது ஏழரைக்கு அவர் வந்தார் . எட்டேகால் மணிக்கெல்லாம் நாங்கள் எம்டிஐஎஸ் வளாகத்திற்குச் சென்றுவிட்டோம். செந்தேசாவில் தங்கிய
- விஷ்ணுபுரம் காவிய முகாம் 2016 -ஒரு பதிவு 23-Sep-2016
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பில் செப்டம்பர் 17 மற்றும் 18 தேதிகளில் நடைபெற்ற காவிய முகாம் என்னுடைய வாசிப்பு உலகில் எண்ணற்ற திறப்புகளை அளித்தது. இதுவரையிலான என்னுடைய வாசிப்பின் வழிகளும் அதன்வழி நான் கண்டடைந்த அறிதல்களையும் மீட்டெடுத்துப் பார்த்துக் கொள்ளவும் அதன் சரி தவறுகளை மறுமதிப்பீடு செய்து கொள்ளவும் அந்தரங்கமாக இந்த முகாம் எனக்கு உதவியது. வருடாவருடம் ஊட்டியில் நடக்கும் முகாம், இந்த முறை சிங்கப்பூரில் நடைபெற்றது என் போன்ற தீவிர இலக்கிய வாசகர்களுக்கு