- புதியவாசகர்கள் சந்திப்பு- கொல்லிமலை 04-Mar-2016

அன்புள்ள நண்பர்களுக்கு,
பலநண்பர்கள் கோரியமைக்கேற்ப புதியவாசகர்களுக்கான 3 ஆவது சந்திப்பு நிகழ்ச்சிகளை முழுமைசெய்துவிட்டோம். இடம் கொல்லி மலை .நாள் 2016 மார்ச் 26, 27 .
கடந்த ஈரோடு மற்றும் ஊட்டி சந்திப்புகளில் பங்கேற்காதவர்களுக்காக இந்த 3 ஆவது புதியவர்கள் சந்திப்ப்பு கொல்லி மலையில் நண்பர் வாசுவின் குடும்ப ஓய்வில்லத்தில் வரும் இரண்டு நாட்கள் நடக்கும்
சனிக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கும். மறுநாள் ஞாயிறு மதியம் ஒருமணியுடன் முடிவடையும். விருப்பமுள்ளவர்கள் கீழே உள்ள படிவத்தை நிரப்பி அனுப்பவும். b.meenambigai@gmail.com என்னும் விலாசத்திற்கு வருகையை உறுதி செய்து அஞ்சலிடவும்.
ஏற்கனவே ...
- கொல்லிமலைச் சந்திப்பு -1 30-Mar-2016

கொல்லிமலைக்கு ஒருநாள் முன்னதாகவே செல்லலாம் என்று முடிவெடுத்தேன். கொல்லிமலைப்பகுதிக்கு நான் சென்று முப்பதாண்டுகளுக்கும் மேல் ஆகிறது. நாகர்கோயிலில் இருந்து 24 அன்று மாலை ரயிலில் கிளம்பி மறுநாள் மூன்று மணிக்கு நாமக்கல்லில் இறங்கினேன். ரயில்நிலையத்திற்கு நாமக்கல் நண்பர்கள் வரதராஜனும் வாசுவும் மகேஷ் வும் வந்திருந்தனர். அஜிதன் கடலூர் சென்றுவிட்டு அங்கிருந்து நேரடியாக வந்திருந்தான்.
அருகே விடுதியில் அறை. கீழே பனானா லீஃப் என்னும் ஓட்டல். நான் இரவில் கொஞ்சம் கலைந்த துயிலில் தான் வந்தேன். சீர்காழிகோவிந்தராஜன் பாடலை ...
- கொல்லிமலை சந்திப்பு 2 31-Mar-2016

கொல்லி மலையில் குளிரே இருக்காது என்பது வாசுவின் கூற்றாக இருந்தது. ஆனால் இரவில் நல்ல குளிர். காலையில் நன்றாகவே குளிர். ஆறுமணிக்கு எழுந்து ஒரு நீண்ட காலைநடை சென்றோம். அருகிருந்த படதுக்குளம் வரை சென்று அப்படியே திரும்பி சோழர்காலத்தைய இடிந்த சிவன்கோயில் ஒன்றைப்பார்த்தோம். கோயில் பாதிவரை மண்ணில் மூழ்கியிருந்தது. உள்ளே ஆவுடை மட்டும். அதன் மேல் ஒரு கல்லைத்தூக்கி சிவனாக வைத்திருந்தனர்
கொல்லிமலை பழங்காலத்தில் முக்கியமான ஊராக இருந்துள்ளது. தமிழ்ப்பண்பாட்டின் தொடக்ககாலத்தில் குன்றுகள்தான் முக்கியமான அரசுகளாக எழுந்தன. பாரியின் ...
- கொல்லிமலைச் சந்திப்பு -கடிதங்கள் 2 02-Apr-2016

அன்புடன் ஆசிரியருக்கு
இரண்டு நாட்கள் இவ்வளவு சிறியதாகத் தெரிந்தது இதுவே முதன்முறை. ஒரு சிறு இடையூறு கூட ஏற்படாவண்ணம் திட்டங்களை தெளிவாக வகுத்து சந்திப்பினை சாத்தியமாக்கிய ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரையும் வியப்புடன் வணங்குகிறேன்.
ஈரோடு ஊட்டி சந்திப்புகள் அளவு இச்சந்திப்பு செறிவுடையதாக இருக்கவில்லையோ என்று தொடக்கம் முதலே உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது. அது இரவில் உறுதியாகிவிட்டது. எப்படியாயினும் உங்களை சந்தித்து இரு நாட்கள் உடனிருந்து பேசிச் சிரித்து சென்றதன் நிறைவின் முன் இந்த உறுத்தல் சிறியதே. ஒரு பதிலினை எதிர்பார்க்கும் ...
- கொல்லிமலைச் சந்திப்பு கடிதங்கள் 3 04-Apr-2016

அன்புள்ள ஜெ அவர்களுக்கு ,
நான் உங்கள் படைப்புகளை படிக்க தொடங்கி ஒரு வருடம் கூட ஆகவில்லை. என்னைப்போன்ற இளம் வாசகர்களுக்கு அதுவும் இந்த குறுகிய காலத்தில் உங்களை போன்ற பெரிய எழுத்தாளர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததிற்கு ஊழ் தான் காரணம் என்று நான் நினைக்கிறேன்.
நான் கேட்ட சிறு பிள்ளைத்தனமான கேள்விக்களுக்கு கூட உவகையுடன் விடையளித்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.என் மனதை பலநாள் உறுத்திய சில முக்கியமான கேள்விகளுக்கு விடை கண்ட பொழுது பெரும் நிம்மதியை அடைந்தேன் மற்றும் வரலாற்றின் ...
- கொல்லிமலை சந்திப்பு -கடிதம் 4 06-Apr-2016

அன்பின் ஜெ,
மிக மிக சிறப்பான சந்திப்பாக அமைந்தது நம் கொல்லி மலையின் களம், அன்று நீங்கள் வாசகர்களின் முதல் இலக்கிய பரிட்சயம் (அ) கண்டடைதல் பற்றி வினவினீர்கள், நான் வெண்முரசே எனது முதல் இலக்கிய கண்டடைதல் என்று கூறியிருந்தேன், இன்னும் ஆழ்ந்து கூறுவதானால்,
அறியும்தோறும் அறியாமை கொள்கிறான் மனிதன். அறிவினாலேயே அறியமுடியாதவனாகிறான்” துர்விநீதர் சொன்னார்.
(மழைப்பாடல்,பகுதி பதிநான்கு : களிற்றுநிரை)
இவ்வரிகள் என் வெண்முரசை அணுகும் முறையயே மாற்றிஅமைத்து. மேலும் சந்திப்பின் நாட்களில் தாங்கள் வழங்கிய தகவல்கள், சிறுகதைகள் மற்றும் கவிதைகளை ...