- புதியவர்களின் சந்திப்பு -2 14-Jan-2016
நண்பர்களுக்கு
ஊட்டி புதியவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியை அறிவித்த நாற்பது நிமிடங்களுக்குள்ளாகவே இருபத்தெட்டுபேர் பதிவுசெய்துவிட்டனர். அதற்குமேல் என்றால் பெரிய ஏற்பாடுகள் தேவையாகும். . சற்று விரிவாக்கம் செய்து முப்பதாக்கியிருக்கிறோம். அதற்குமேல் போனால் தனிப்பட்ட முறையில் பேசிக்கொண்டிருக்கவே அவகாசமிருக்காது.
அத்தனைபேரும் மிக இளையவர்கள். ஆகவே முந்தைய வாரம் அதாவது வரும் பெப்ருவரி 5,6 ஆம் தேதிகளில் இன்னொரு சந்திப்பை ஈரோட்டில் என் நண்பர் சென்னை செந்திலின் பண்ணைவீட்டில் வைத்துக்கொள்ளலாமா என நினைக்கிறேன். ஊட்டிக்கு வராதவர்களுக்காக.
இருபதுபேர் அங்கே தங்கலாம். விருப்பமிருப்பவர்கள் எழுதலாம் jeyamohan.writer@gmail.com
ஜெ
- புதியவர்களின் சந்திப்பு ஈரோடு 08-Feb-2016

ஈரோட்டில் என் நண்பர் வழக்கறிஞர் செந்தில் புதியதாக வாங்கியிருக்கும் பண்ணை வீட்டில் புதியவர்களின் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தோம். உண்மையில் ஊட்டியில் ஒரு சிறிய சந்திப்புதான் என் மனதிலிருந்தது. அதற்கு அறுபது பேருக்குமேல் வர விரும்பினர். அங்கே நாற்பத்தைந்துபேர் அதிகபட்சமாக தங்கலாம்.
ஆகவே ஈரோட்டில் முன்னதாகவே ஒரு நிகழ்ச்சி ஏற்பாடுசெய்தோம். இப்போது மேலும் முப்பது பேர் வர விரும்பியிருக்கிறார்கள். அவர்களுக்காக இன்னொரு புதியவர்களின் நிகழ்ச்சியை நடத்தவேண்டும், நேரமில்லை.
ஈரோட்டில் காலை ஐந்து மணிக்கு ரயிலிறங்கினேன். நண்பர்கள் கிருஷ்ணன், சந்திரசேகர், மணவாளன் வந்து ...
- ஈரோடு புதியவாசகர் சந்திப்பு – கடிதங்கள் – 1 10-Feb-2016

மதிப்புக்குரிய ஆசிரியர் அவர்களுக்கு
ஈரோடு புதியவர் சந்திப்புக்கு அனுமதித்தமைக்கு நன்றி. கலைத்துப் போடப்படுதலை அனுபவித்தேன். தயாரிப்புகளும் இலக்கிய வாசிப்பனுபவமும் இல்லாததால், ஒருவித சுய வெறுப்பு வளர்ந்தது.
உங்களுக்கு வாசகவிரிவின் புதிய ஊற்றுகளை நேரடியாகக் கண்டுகொள்ள சந்திப்பு உதவியிருக்கலாம்.
சிந்திக்க, வாசிக்க, கவனிக்க வேண்டிய முறைகளே தெரியாமல் ஒரு கல்விமுறையைக் கடந்து வந்திருக்கிறோம் என உணரும் போது, மூளை கசக்கிறது. இருப்பினும் எதுவும் வீணாவதில்லை; காலம் உட்பட என ஆழ்மனது சொல்கிறது
உண்மையில் உங்களின் தத்துவ, ஆன்மிக ஊற்றுகளில் இருந்து நீர் பருகவே விரும்பினேன். ...
- ஈரோடு புதியவாசகர் சந்திப்பு – கடிதங்கள் – 2 16-Feb-2016

ஜெவை சந்தித்ததால் இழந்தது ஒரு சோப்பு டப்பா, துண்டு மற்றும் அன்டர்வேர் (அதை அடக்கம் செய்தவர்களுக்கு நன்றி கூற கடைமைபட்டுள்ளேன்). பெற்றது சில திட்டுக்கள், வாழ்க்கையின் உன்னத நிமிடங்கள், நிறைய சந்தோசம், இலக்கியம், அரசியல், கேளிக்கை இன்னும் பல. ஒருவித பயம் காரணமாகவே இந்த இன்னும் பல என்ற வார்த்தையை பள்ளியிலிருந்து பயண்படுத்துகிறேன். நானும் எனது நன்பர்களும் அப்துல் கலாம் அவர்களை சந்திக்கலாம் என முடிவெடுத்து கடந்த வருடம் ஜுலை முப்பதாம் தேதி அவரது ஊருக்கு சென்றோம். ...
- ஈரோடு புதியவாசகர் சந்திப்பு – கடிதங்கள் – 3 18-Feb-2016

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்.
ஈரோடு சந்திப்பு எங்களுக்கு புதிய திறப்பை அளித்திருக்கிறது. பொதுவாக இம்மாதிரி எழுத்தாளருடனான சந்திப்புகளில் அவரின் படைப்புகளை முன்னிறுத்தி கொண்டு போவது நடக்கும். ஆனால் உண்மையில் இங்கு நடந்தது முற்றிலும் வேறு. உங்கள் படைப்புகளை பற்றி பேசியதை விட நாங்கள் படித்திருந்த மற்ற படைப்புகளை கேட்டு அறிந்து அதிலிருந்து குறிப்பிட்டே எங்களுக்கு சொன்னீர்கள். சனிக்கிழமை காலை இரண்டாம் வகுப்பு பெட்டியிலிருந்து நீங்கள் சாதாரணமாக இறங்கி வந்தததை இப்போதும் மறக்க இயலவில்லை. நானும் நண்பர் சச்சினும் நிகழ்வு ...