- இன்று ஏற்காட்டில்.. 28-Jun-2013
இன்றுமுதல் மூன்றுநாட்கள் ஏற்காட்டில் விஷ்ணுபுரம் இலக்கியவட்டத்தின் சார்பில் நிகழ்த்தப்படும் இலக்கிய ஆய்வரங்கம் ஆரம்பிக்கிறது. ஏறத்தாழ எழுபதுபேர் கலந்துகொள்கிறார்கள். இம்முறை ஊட்டியில் நடத்தமுடியவில்லை. ஊட்டி குருகுலத்தில் ஆளில்லை. கட்டிடங்களும் பராமரிப்பில்லாமல் உள்ளன. ஏற்காட்டில் ஒரே ஒரு பெரிய கட்டிடம்தான். அதில் ஐம்பதுபேர்தான் தங்கமுடியும். இருபதுபேர் தாக்குப்பிடிக்கவேண்டியதுதான். பெண்களுக்கும் முதியவர்களுக்கும் தனி இடம் பார்த்திருக்கிறோம். ஈரோடு நண்பர் விஜயராகவன் அமைப்பாளராகச் செயல்படுகிறார். எளியமுறையில் நிகழ்ச்சியைநடத்தவேண்டும், நிதியுதவி பெறக்கூடாது என்பது எங்கள் கொள்கை. ஆகவே இதை தனிப்பட்ட உழைப்பு மூலமும் பங்கேற்பாளர்கள்
- ஏற்காடு -விஷ்ணுபுரம் இலக்கிய முகாம் – 2013 01-Jul-2013
ஏற்காட்டில் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் நடத்திய மூன்றுநாள் இலக்கிய முகாம் குறித்த புகைப்படங்கள் , பதிவுகள். புகைப்படங்களின் தொகுப்பு எம் ஏ சுசீலா அவர்களின் பதிவு //ஒவ்வொரு நாளும் காலை அமர்வுகள் ஒன்பதரை மணிக்குத் தொடங்கி மதியம் ஒன்றரை அல்லது இரண்டு மணி வரை கூட நீள்வதுண்டு. அதே போல தினந்தோறும் பிற்பகலில் இரு அமர்வுகள். மதியம் இரண்டரை மணி அல்லது 3 மணி முதல் 5 அல்லது ஆறு வரை ஒரு அமர்வு; பிறகு ஒரு
- ஏற்காடு – வேழவனம் சுரேஷ் 06-Jul-2013
// முதல்நாள் கூட்டத்தின் ஆரம்பத்தில் மைக் வேலை செய்ய மறுத்தது. அதை சரிசெய்ய முயற்சியும் நடந்தது. ஆனால் அது சரியாகிவிடக்கூடாதே என்று நினைத்தபடி இருந்தேன். அதன் படியே கடைசிவரை அது ஒத்துழைத்தது. விவாதங்களையும் வாசிப்புகளையும் நேரடிக்குரலில் கேட்பது ஒரு privileged experience. உரையாடல்களுக்கு இன்னும் ஒரு நெருக்கமான உணர்வை அது தந்தது. மாலையில் நடந்த இசை நிகழ்ச்சிகளும் அப்படியே. நேரடியாகப் பாடும் குரலை மைக் இல்லாமல் நேரடியாகப் கேட்பது ஒரு வரம். இளையராஜாவே பாடினாலும், நமது அனுபவம்