- வெண்முரசு நூல்கள் வெளியீட்டு விழா – 2014 24-Oct-2014வெண்முரசு நூல்கள் மழைப்பாடல், வண்ணக்கடல், நீலம் வெளியீட்டு விழா வரும் நவம்பர் மாதம் 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னையில் நடைபெறுகிறது. இதுகுறித்த மேலதிக தகவல்களும், விரிவான நிகழ்ச்சி நிரலும் விரைவில் வெளியிடப்படும். தேதி : நவம்பர் 9, 2014, ஞாயிற்றுக்கிழமை. இடம் : சென்னை ம்யூசியம் தியேட்டர் அரங்கம் நேரம் : மாலை 5 மணி தொடர்புக்கு: பாலா: +91 9842608169 வெண்முரசு நாவல் தொடர்பான அனைத்து விவாதங்களும்
- வெண்முரசு நூல்கள் அறிமுக விழா 28-Oct-2014வெண்முரசு நூல்களான முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல், நீலம் அறிமுகம்- வெளியீட்டு விழா வரும் நவம்பர் மாதம் 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னையில் நடைபெறுகிறது. நமது காலப் பெரும் இலக்கிய ஆளுமைகள் அசோகமித்திரன்,பி.ஏ.கிருஷ்ணன்,பிரபஞ்சன், நாஞ்சில்நாடன் மற்றும் திரைத் துறைச் சாதனையாளர்கள் கமல்ஹாசன், இளையராஜா, வசந்தபாலன் முக்கிய விருந்தினர்களாகக் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள். இதுகுறித்த மேலதிக தகவல்களும், விரிவான நிகழ்ச்சி நிரலும் விரைவில் வெளியிடப்படும். விழாவில் இலக்கிய ஆர்வலர்கள் நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம். -விஷ்ணுபுரம் ...
- சென்னையில் வெண்முரசு விழா 31-Oct-2014வெண்முரசு நூல்களான முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல், நீலம் அறிமுகம்- வெளியீட்டு விழா வரும் நவம்பர் மாதம் 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னையில் நடைபெறுகிறது. நமது காலப் பெரும் இலக்கிய ஆளுமைகள் அசோகமித்திரன், பி.ஏ.கிருஷ்னன் பிரபஞ்சன், நாஞ்சில்நாடன் மற்றும் திரைத் துறைச் சாதனையாளர்கள் கமல்ஹாசன், இளையராஜா முக்கிய விருந்தினர்களாகக் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள். விழாவின் முதன்மையான சிறப்பம்சம் தொன்றுதொட்டு மகாபாரதக் கதையை நிகழ்த்துகலையாக நட்த்தி வரும் ஐந்து மூத்த மகாபாரதப் பிரசங்கியார்களை கௌரவித்தல். விழாவில் ...
- வெண்முரசு பற்றி முருகபூபதி 02-Nov-2014வெண்முரசு பற்றி ஆஸ்திரேலியாவில் வாழும்ஈழ எழுத்தாளர் முருகபூபதியின் காணொளிப்பேட்டி
- அசோகமித்திரன் வெண்முரசு பற்றி 02-Nov-2014வெண்முரசு நூல்வெளியீட்டு விழாவை ஒட்டி வெவ்வேறு எழுத்தாளர்கள் கலைஞர்களிடம் வாழ்த்துரைகள் வாங்கப்பட்டு வலையேற்றப்படுகின்றன. இது அசோகமித்திரனின் பேட்டி. அவர் ஏற்கனவே குங்குமம் இதழில் வெண்முரசு குறித்த அவரது மதிப்பையும் வாழ்த்துக்களையும் எழுதியிருந்தார். இந்த விழாவுக்கு அவரது வாழ்த்து தனியாகப்பதிவுசெய்யப்பட்டது அசோகமித்திரன் அவரது இல்லத்தின் பின்னணியில் பதிவுசெய்யப்படவில்லை. அவரது கனிந்த முதுமை, புன்னகை, உடல்மொழி ஆகியவை இயல்பாகப் பதிவாகியிருக்கின்றன இதில்
- நா.முத்துக்குமார் வெண்முரசு விழாவுக்கு வாழ்த்து 03-Nov-2014வெண்முரசுக்கு நா.முத்துக்குமார் பேட்டி
- வெண்முரசு பற்றி அ.முத்துலிங்கம் 03-Nov-2014வெண்முரசு விழாவுக்கு வாழ்த்து தெரிவித்து அ.முத்துலிங்கம் அவர்கள் அளித்த காணொளிப் பேட்டி.
- வெண்முரசு விழா இணையத்தில் 03-Nov-2014வெண்முரசு வெளியீட்டு விழா இணையத்தில் நேரடி ஒளிபரப்பு நவம்பர் 9, ஞாயிறு இந்திய நேரம் மாலை 5 மணி முதல் 9 மணி வரைக்கும் நடக்கவிருக்கும் வெண்முரசு நாவல் வெளியீட்டு விழா இணையத்தில் நேரடியாய் ஒளிபரப்பப்படவிருக்கிறது. உலகமெங்கும் உள்ள நண்பர்கள் நிகழ்வை கண்டு மகிழ இது வகை செய்யும். உங்கள் இணைய இணைப்பும் கணினி அல்லது பிற இணைய தொழில் நுட்பசாதனங்கள் யூ டியூப் போன்ற அசைபட தளங்களில் படம் பார்க்கும் வகையில் இருந்தால் போதுமானது. தமிழின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ...
- எஸ்.கெ.பி.கருணா வெண்முரசு விழாவுக்கு வாழ்த்து 04-Nov-2014வெண்முரசு விழாவுக்கு எஸ்.கெ.பி கருணா வாழ்த்து
- வெண்முரசு விழா -கமல்ஹாசன் வாழ்த்து 04-Nov-2014வெண்முரசு விழாவுக்கு கமல்ஹாசனின் வாழ்த்துரை
- வெண்முரசு விழா ஏன்? 04-Nov-2014வெண்முரசு விழாவைப்பற்றி நான்கு கடிதங்களில் வசையும் ஏகத்தாளமுமாக ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இது ஒரு விற்பனை- சுயமுன்வைத்தல் ‘ஷோ’ என்பதுதான் அது. சாராம்சத்தில் அது சரிதான். இவ்விழாவின் நோக்கம் வெண்முரசு நாவல் வரிசையை மேலும் அதிகமாக விற்க வைப்பதே.அதன் பொருட்டு இம்முயற்சியையும் இதன் முக்கியத்துவத்தையும் பொதுவாசகர்களின் கவனத்துக்குக் கொண்டுவருவதே. ஆகவேதான் பொதுவாசகர்கள் கவனிக்கும் ஆளுமைகளுடன் பெரிய அளவில் இவ்விழா ஏற்பாடு செய்யப்படுகிறது. என்னுடைய பிறநூல்களுக்கு இது தேவைப்பட்டதில்லை. வெண்முரசு நூல்கள் அளவில் பெரியவை. தொடர்ச்சியாக வருடம் நாலைந்து நூல்கள் என ...
- விழா-பாவண்ணன் வாழ்த்து 04-Nov-2014அன்புள்ள ஜெயமோகன் வணக்கம். நலம்தானே? வெண்முரசு நூல்வரிசை வெளியீட்டு நிகழ்ச்சி பற்றிய செய்தி மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இதுவரை வெளிவந்துள்ள நான்கு தொகுதிகளுமே, ஏற்கனவே நீங்கள் சொல்லியிருந்தபடி தனித்தனியாகப் படிக்கத்தக்க விதத்தில் ஒரு சின்ன மையத்தைச் சுற்றி அமைந்திருப்பதும், பெருந்தொடரின் இணைப்புக்கண்ணிகளாகவும் கச்சிதமாக விளங்குகின்றன. வற்றாத உங்கள் ஊக்கம் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. தமிழுக்கு இது நிச்சயம் பெருங்கொடையாக விளங்கப்போகிறது. உலக அளவில் தமிழுக்கு இது ஓர் அரிய இடத்தைத் தேடித் தரும் என்பது உறுதி. கூர்மையும் அழுத்தமும் கூடிய உரையாடல்களும் ஆழமும் ...
- வெண்முரசு- சுவர்ணவேல் வாழ்த்து 05-Nov-2014வெண்முரசுக்கு பேராசிரியர் சுவர்ணவேல் வாழ்த்து
- விழா- வாழ்த்துக்கள் 06-Nov-2014மேலாண்மை ஆலோசகர் தேசிகாமணி அவர்களின் வாழ்த்து ராமராஜன் மாணிக்கவேல் வாழ்த்து
- வெண்முரசு- ஜெயஸ்ரீ வாழ்த்து 06-Nov-2014வெண்முரசு விழாவுக்கு மொழிபெயர்ப்பாளர் ஜெயஸ்ரீ வாழ்த்து
- வெண்முரசு பற்றி வசந்தபாலன் 06-Nov-2014வெண்முரசு பற்றி இயக்குநர் வசந்தபாலன் பேச்சு
- ஆர்வி, அருட்பேரரசன் வாழ்த்துக்கள் 06-Nov-2014வெண்முரசுக்கு நண்பர் ஆர்வி வாழ்த்து அவரது இணையதளத்தில் வெண்முரசுக்கு நண்பர் அருட்பேரரசன் வாழ்த்து. முழுமகாபாரதத்தையும் அரசன் அவர்கள் தொடர்ச்சியாக மொழியாக்கம் செய்து தன்னுடைய இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார்
- இந்திரா பார்த்தசாரதி: வெண்முரசு 06-Nov-2014எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி: வெண்முரசு குறித்து
- வெண்முரசு விழா பற்றி டி செ தமிழன் 06-Nov-2014நலம். நாடுவதும் அதுவே. உங்களின் ‘வெண்முரசு வெளியீடு’ இனிதாக அமைய என் வாழ்த்தும் அன்பும். ……. உங்களின் ‘வெண்முரசு விழா?’ ஏன் என்ற கட்டுரையை வாசித்தபின் என் முகநூலில் எழுதியது கீழே… ஜெயமோகனின் ‘வெண்முரசு’ விழா பற்றி பல்வேறுவகையான விமர்சனம் வந்திருக்கின்றன போலும். இப்போது அவர் எழுதிய ‘வெண்முரசு விழா ஏன்?’ என்பது குறித்து வெளிப்படையாக தன் கருத்துக்களை முன்வைத்திருப்பதை வாசித்தேன். ‘வெண்முரசு விழா’ பற்றி பிறரால் வைக்கப்பட்டிருக்கும் விமர்சனங்களைத் தவறவிட்டதைப் போலவே, அந்த விழாவை முன்னிட்டு வெளியிடப்படும் விடீயோக்களையும் பார்க்க விரும்பவில்லை. ...
- வெண்முரசு- ஜெயக்குமார் ஸ்ரீனிவாசன் வாழ்த்து 07-Nov-2014வெண்முரசுக்கு வாசகர் ஜெயக்குமார் ஸ்ரீனிவாசன் வாழ்த்து
- வெண்முரசு வாழ்த்து- சுகா 07-Nov-2014என் நண்பரும் இயக்குநரும் எழுத்தாளருமான சுகா அளித்த வாழ்த்து
- மகாலிங்கம் வெண்முரசிற்கு வாழ்த்து 07-Nov-2014எழுத்தாளர் மகாலிங்கம் வெண்முரசிற்கு வாழ்த்து
- வெண்முரசு- இளையராஜா வாழ்த்து 07-Nov-2014வெண்முரசு விழாவுக்கு வாழ்த்து. இளையராஜா அவர்கள்
- வெண்முரசு வாழ்த்து- உஷா 07-Nov-2014
- சீனு ராமசாமி- வாழ்த்து 08-Nov-2014
- வெண்முரசு வாசகர் வாழ்த்து 08-Nov-2014வெண்முரசு வாசகர்கள் வாழ்த்து வாசு ஸ்வாமி நிர்மலா
- வெண்முரசு விழா – மஹாபாரதக் கலைஞர்கள் 08-Nov-2014தொன்றுதொட்டு மகாபாரதக் கதையை நிகழ்த்துகலையாக நடத்தி வரும் ஐந்து மூத்த மகாபாரதப் பிரசங்கியர் வெண்முரசு புத்தக வெளியீட்டு விழா – 2014 -இல் கௌரவிக்கப்பட இருக்கிறார்கள். ஒரு இடையறாச் சங்கிலியின கண்ணிகளை கௌரவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். முனைவர் இரா. வ. கமலக்கண்ணன் காஞ்சிபுரத்தில் வசித்துவரும் இவர் பள்ளியில் தலைமையாசிரியராக இருந்து ஓய்வுபெற்றவர். ஆர்வத்தால் தாமே பாரதம், இராமாயணம் முதலிய இலக்கியங்களை ஆழமாகக் கற்றுத் தேறியவர். வைணவ ஈடுபாடு உடையவர். ஆழ்வார் பாடல்களில் உள்ள ஆழமான பயிற்சி காரணமாக நாலாயிர திவ்வியப் பிரபந்தத்திற்கு எளிய உரை எழுதியவர். பத்துக்கும் மேற்பட்ட ...
- வெண்முரசு நூல்கள் விழாவில் 08-Nov-2014நண்பர்களுக்கு, வெண்முரசு நூல் அறிமுக விழா வரும் 9- 11-2014 அன்று சென்னை எழும்பூர் மியூசியம் அரங்கில் நிகழவிருக்கிறது. நிகழ்ச்சியில் வெண்முரசு நூல்கள் அனைத்தும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல், நீலம் ஆகிய நாவல்கள் விற்பனைக்குக் கிடைக்கும். முதற்கனல் 290 ரூபாய் விலை மழைப்பாடல் ரூ 840 வண்ணக்கடல் ரூ 800 நீலம் ரூ 500 இவற்றில் முதற்கனல் தவிர்த்த பிற நூல்களில் செம்பதிப்புகள் குறைந்த பிரதிகள் உள்ளன. அவை நற்றிணை பதிப்பகம் யுகனிடம் கிடைக்கும். அவற்றின் விலை அதிகம். மழைபபடல் 1300 ரூபாய். வண்ணக்கடல் ...
- கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அதிபர்- வெண்முரசு வாழ்த்து 08-Nov-2014கோவை கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அதிபர் அவர்களின் வெண்முரசு வாசிப்பனுபவம்
- வெண்முரசு நாஞ்சில்நாடன் வாழ்த்து 08-Nov-2014
- மரபின் மைந்தன் முத்தையா வெண்முரசு வாழ்த்து 08-Nov-2014
- வெண்முரசு விழா- நேரடி ஒளிபரப்பு 09-Nov-2014வெண்முரசு விழாவின் நேரடி இணைய ஒளிபரப்பு பற்றி அறிவித்திருந்தோம். ஆனால் நிகழ்ச்சியை விஜய் டிவி ஒரு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகவிருப்பதனால் வேறுவகை ஒளிபரப்புகள் நடத்த முடியாத நிலை. விஜய்டிவியில் சிலநாட்களில் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்
- வெண்முரசு விழா 2014 – .புகைப்படங்கள்…அரங்கத்திலிருந்து 09-Nov-2014
- வெண்முரசு நூல் வெளியீடு – விழா புகைப்படங்கள் தொகுப்பு 10-Nov-2014மேலும் புகைப்படங்களுக்கு : வெண்முரசு விழா 2014 புகைப்படத்தொகுப்பு
- விழா- தினமணி 10-Nov-2014வெண்முரசு விழா தினமணி செய்தி
- விழா- நன்றிகள் 10-Nov-2014வெண்முரசு நூல் அறிமுக விழா நேற்று மாலை சிறப்பாக நிகழ்ந்து முடிந்தது. விஷ்ணுபுரம் இலக்கியவட்டத்தின் விழாக்கள் அனைத்துமே எப்போதும் பிரம்மாண்டமானவையாகவும் அதேசமயம் முழுமையான இலக்கிய அனுபவம் அளிக்கும் விழாக்களாகவும் அமைவது வழக்கம். இவ்விழாவும் அப்படியே. நண்பர்கள் குழுமத்தின் சிறந்த எதிர்விமர்சகரான கிருஷ்ணன் ‘இதுவரை நிகழ்ந்த விழாக்களில் கிட்டத்தட்ட பிழையற்றது’ என்று பாராட்டினார். அதுவே விழாக்குழுவினருக்கு கிடைக்கச்சாத்தியமான அதிகபட்சப் பாராட்டு. நிறைவளிக்கும் விழா. விழாவை நிகழ்த்தவேண்டும் என்ற எண்ணம் எழுந்தது நண்பர் பாலாவிடம். அவரே தலைமை ஒருங்கிணைப்பாளர். அவரும் அவர் ...
- விழா பதிவுகள் 1 -பத்ரி சேஷாத்ரி 11-Nov-2014நேற்று நடந்த வெண்முரசு நாவல்கள் வெளியீட்டு விழாவுக்குச் சென்றிருந்தேன். எழும்பூர் மியூசியம் தியேட்டர் வளாகத்துக்குச் செல்லும் வழியில் பாதைகள் அடைக்கப்பட்டிருந்தன. காவலர்கள் வண்டியை வழிமாற்றி அனுப்பிக்கொண்டிருந்தனர். ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடக்கும் நாள். அதற்கு அனுமதி தந்தும் தராமலுமான ஒரு குழப்பமான நிலை. பலர் கைது செய்யப்பட்டிருந்தனர் போலும். கூட்டம் நிரம்பி, கொஞ்சம் கொஞ்சமாக அனைத்து இருக்கைகளிலும் ஆட்கள். பலர் நின்றுகொண்டிருந்தனர். நான் பிரசன்னாவுக்கும் ஜடாயுவுக்கு இடையில் மிக வசதியான ஓரிடத்தில் சென்று உட்கார்ந்துகொண்டேன். 5.15-க்கு சிறப்பு விருந்தினர்கள் வரிசையாக ...
- விழா 2- அருட்செல்வ பேரரசன் பதிவு 11-Nov-2014நிகழ்ச்சித் தொகுப்பாளர் கிசாரி மோகன் கங்குலி என்ற வார்த்தைகளைச் சொல்ல ஆரம்பிக்கும்போதே எனக்குத் தொடைகள் நடுங்க ஆரம்பித்துவிட்டன. “கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை ஆங்கிலத்தில் பெயர்க்கப்பட்ட “The Mahabharata” புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பை அருட்செல்வப்பேரரசன் செய்து வருகிறார். பல்கலைக்கழகங்கள் செய்ய வேண்டியதைத் தனி ஒருவராக செய்துவருகிறார். மேலும் ஆடியோ கோப்புகளையும் பதிவிறக்கத்திற்குத் தந்து வருகிறார். அவரைக் கவுரவிக்கும் விதமாக பிரபஞ்சன் அவர்கள் அவருக்கு நினைவுப்பரிசை வழங்குவார்” என்று அறிவித்தார். அருட்செல்வப்பேரரசன் பதிவு வெண்முரசு அனைத்து விவாதங்களும்
- விழா 3 செய்திகள் 11-Nov-2014வெண்முரசு அறிமுக விழா குறித்த நாளிதழ் செய்திகள் தமிழ் இந்து நாளிதழ் மாலைமலர் நாளிதழ் வெண்முரசு அனைத்து விவாதங்களும்
- விழா பதிவு 4 இட்லிவடை 11-Nov-2014ஐநூறு பார்வையாளர் இருக்கைகளும், சிறப்புப் பார்வையாளர் இருக்கைகளும், படிக்கட்டுகளும் சேர்த்து எண்ணூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வந்திருப்பார்கள். வழக்கமான மேடைகள் போல் இல்லாமல் நவீனமாகவே மேடை அலங்கரிக்கப்பட்டிருந்தது, “காக்கைச் சிறகினிலே” என்ற வாழ்த்துப் பாடலுடன் தொடங்கியது விழா. இட்லிவடை பதிவு
- விழா பதிவு 5, இது தமிழ் 11-Nov-2014தினம் ஓர் அத்தியாயமென, தொடர்ந்து பத்தாண்டுகள் மகாபாரதம் எழுதும் கற்பனைக்கெட்டாத மகத்தான இலக்கை வகுத்துக் கொண்டு இந்தாண்டின் முதல் நாளிலிருந்து எழுதி வருகிறார் ஜெயமோகன். “வெண்முரசு” என பெயரிடப்பட்டிருக்கும் அத்தொகுப்பு, சுமார் 35000 பக்கங்களுடன் 40 நாவல்களாக வருமெனத் தோராயமாகக் கணக்கிடப்பட்டுள்ளது. தொடங்கிய 10 மாதங்களுக்குள், முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல், நீலம் என 4000 பக்கங்கள் கொண்ட 4 நாவல்களை எழுதிவிட்டார். கமல் பாணியில் சொல்வதெனில், மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித உழைப்பே அல்ல; அதையும் ...
- ராஜகோபாலன் – விழா அமைப்புரை 18-Nov-2014
நண்பர்களே ! அனைவருக்கும் இனிய மாலை வணக்கம். தமிழ் இலக்கியத்தின் ஆகப் பெரிய சாதனைகளில் ஒன்றான வெண்முரசு நாவல் வரிசை வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்துள்ள அனைவருக்கும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது . உலகில் 7 சிரஞ்சீவிகள் உண்டு என்கிறது இந்திய புராணங்கள். அதில் 6 பேர் தத்தம் குண இயல்புகளால் அழிவற்ற நிலை எய்தியவர்கள். அந்த குண இயல்புகள் இருக்கும் வரை அவர்களும் இப்புவியில் இருப்பார்கள். இந்த குண இயல்புகளையும்,