- புதியவாசகர் சந்திப்பு 2017, தஞ்சை 01-Mar-2017

நண்பர்களே,
இவ்வாண்டு ஈரோட்டில் நடத்திய புதிய வாசகர் சந்திப்பு தீவிரமும் உற்சாகமுமாக கழிந்தது. இலக்கியம், வரலாறு, தத்துவம், குறியீடுகள், சிந்தனை முறைகள் என பல தலைப்புகளில் விசை குன்றாமல் இயல்பாக உரையாடல் நடைபெற்றது. புதியவர்களின் சில சிறுகதைகளும் கட்டுரையும் விவாதிக்கப்பட்டது. ஈரோடு சந்திப்புக்கு விண்ணப்பித்த அனைவரையும் அழைத்துக்கொள்ள இயலவில்லை, எனவே அந்த சந்திப்பின் தொடர்ச்சியாக வரும் மார்ச் 18,19 ஆகிய தேதிகளில் தஞ்சை, வல்லத்தில் உள்ள சுவாமி விவேகானந்தா கலை & அறிவியல் கல்லூரியில் அடுத்த புதிய வாசகர் ...
- தஞ்சை சந்திப்பு- 2017 22-Mar-2017

அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,
தங்களுடனான தஞ்சை வாசகர் சந்திப்பு எனக்கு பெரிதும் பயனுடையதாக இருந்தது. மற்றவர்களுக்கும் அவ்வாறே என்று கருதுகிறேன். காலை தஞ்சை ஜங்ஷன் வந்திறங்கி வெளியே ஒரு டீ-க் கடையில் “வல்லம் போக எங்க பஸ் ஏறணும்?” என்று கேட்டபோதே “அதோ எதிர்ல அந்த பஸ் வல்லம் தான் போகுது போங்க” என்று ஓருவர் சொல்ல ஓடிச் சென்று வண்டியைப் பிடித்தேன்.
வண்டியில் அதிகம் கூட்டம் இல்லை. டிக்கெட் வாங்கிய பிறகு எதிர்வரிசையில் தாடியுடன் ஒரு இளைஞர் கண்டக்டரிடம் ...
- தஞ்சை சந்திப்பு கடிதம், பதில் 23-Mar-2017

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
தஞ்சை சந்திப்பில் இடம்பெற வாய்ப்பளித்ததிற்கு நன்றி.
இந்த சந்திப்பை ஒட்டி எனக்கு சற்று தயக்கம் இருந்தது. எந்தத் துறையிலுமே ஆதர்ஷ ஆளுமைகளைச் சந்திப்பது உற்சாகம் அளிக்கும் அதே சமயம், பதற்றத்தையும் ஏற்படுத்தும். அந்த ஆளுமைகளை குறித்து நம் மனபிம்பங்கள் குலைந்துவிடக் கூடாது என்ற கவலை. கனவுகள் கலைவதற்கு ஈடானது அது.
உங்களைத் தினமும் வாசிக்கும் காரணத்தால் ஒரு பக்கம் தெரிந்தவரைச் சந்திப்பது போல உணர்ந்தேன். சில இடங்களில் தாண்ட இயலாத பிளவு நடுவே கிடந்ததும் உண்மை. உங்கள் ...
- தஞ்சைச் சந்திப்பு -கடிதம் 24-Mar-2017

தஞ்சை சந்திப்பு மறக்க முடியாத நிகழ்வாக, முன்பே கூறியது போல ‘நல்ல திறப்பாக’ அமைந்தது. சில தீவிர வாசகர்களின் அறிமுகமும் அவர்களுடன் உரையாடும் வாய்ப்பும் கிடைத்தது.
அங்கு வருவதற்கு முந்தைய இரண்டு நாட்களாக தூங்காமல் இருந்தேன். போதாதற்கு இரவு ரயில் பயணம் வேறு. அந்த அளவிற்கு விழிப்புடன் நிகழ்வு முழுக்க இருந்தது பெரிய ஆச்சரியம்தான். புகைப்படத்தில் பார்த்தால் யாரோ போல இருக்கிறேன். .
சந்திப்பிற்கு வர ஒரே காரணம் தான் இருந்தது. தீவிரமாக இயங்குபவர்களை எனக்கு பிடிக்கும். அவர்களுடன் இருக்கவும், ...