- குருநித்யா காவியமுகாம் , ஊட்டி 2017 21-Mar-2017

குருநித்யா காவியமுகாம் , ஊட்டி 2017 க்கான விண்ணப்பங்கள் நிறைவடைந்தன. ஓரிருநாட்களில் விரிவான மின்னஞ்சல் அனுப்பப் படும். ஊட்டியில் சந்திப்போம்
ஜெ
- ஊட்டி காவிய முகாம் சந்திப்பு நினைவுகள் 27-Apr-2017

இன்னும் ஊட்டி முகாமிற்கு வெளியே..
ஊட்டி ஒரு பதிவு
ஊட்டி ஒரு பயணம்
ஊட்டி சந்திப்பு – 2014
உளி படு கல் – ராஜகோபாலன்
ஊட்டி சந்திப்பு – 2014
ஊட்டி முகாம் 2012 – பகுதி 3
ஊட்டி – சுழன்றும் கதைப் பின்னது அண்டம்
ஊட்டி முகாம்-எம்.ஏ.சுசீலா
ஸ்ரீனிவாசின் பதிவு
ஊட்டி ஒரு பதிவு
ஊட்டி நண்பர்கள் வருகை
ஊட்டி முகாமனுபவம்
ஊட்டி ,பதிவு
ஊட்டி சந்திப்பு – 2014
ஊட்டி இலக்கியச் சந்திப்பு நிபந்தனைகள்
ஊட்டி சந்திப்பு – 2014
ஊட்டி முகாம் 2012 – பகுதி 3
ஊட்டி முகாம் 2012 – ...
- ஊட்டி 2017, கடிதம் 02-May-2017

வணக்கம்
ஊட்டி காவிய முகாம் முடிந்து நேற்று இரவு ஒரு மணிக்கு வீடு வந்தோம். உண்மையிலேயே கனவுலகம் ஒன்றிலிருந்து திரும்பி வந்ததது போல் இருக்கிறது. வெண்முரசு வாசகர் வட்ட கூடுகைகளிலிருந்து இது மிக வேறு பட்டதாகவும் நிறைய நிறைய கற்றுக்கொள்ளும் படியாகவும் இருந்தது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பல நாடுகளில் இருந்தும் உங்களின் பிரியத்திற்குரிய வாசகர்கள் பலர் வந்திருந்ததும், மிக கட்டுக்கோப்புடன் முறையாக முகாம் நடந்ததும் ஆச்சர்யமாக இருந்தது.
நேரத்திற்கு நல்ல குளிருக்கேற்ற சூடான உணவும் சிற்றுண்டிகளும், தேநீருமாய் ...
- ஊட்டி 2017 –கவிதைபற்றி… 02-May-2017

அன்புள்ள ஜெ
சென்ற ஊட்டி கூட்டம் முடிந்ததும் எழுதிய கடிதங்களை மீண்டும் படித்துப்பார்த்தேன். இந்த கடிதத்தில் (http://www.jeyamohan.in/75476 ) எனது வாசிப்பு எத்தகையது என்பது பற்றிய ஒரு புரிதல் கிட்டியிருக்கிறது. இம்முறை கடலூர் சீனு வின் உரையாடல் பகுதி அந்த திசை நோக்கி மீண்டும் யோசிக்கவைத்திருகிறது. எப்படி உரைநடை /சிறுகதை/ நாவல் என நாஞ்சில் சார் வழிகட்டியிருக்கிறாரோ அவ்வாறே கவிதைகளை அணுகுதல் குறித்தும் அவரே ஒரு கைகாட்டியாக இருந்து என்னை வழிநடத்தியிருக்கிறார். இதற்கு முன் “ஒரு புத்தரே ...
- ஊட்டி சந்திப்பு -நன்றிகள் 02-May-2017

ஊட்டி குருநித்யா காவிய அரங்கு சென்ற ஏப்ரல் 28, 29 மற்றும் 30 ஆம் தேதி நடந்துமுடிந்தது. இம்முறை முக்கால்வாசிப்பேர் புதியவர்கள். சென்ற புதியவாசகர் சந்திப்புகளில் கலந்துகொண்டவர்கள். வழக்கமான நண்பர்கள் அனைவரும் உண்டு. இம்முறை 80 பேர் கலந்துகொண்டார்கள். ஊட்டி குருகுல நூலக அறையில் போதிய இடமிருக்குமா என நிர்மால்யா சந்தேகப்பட்டார். நூலக அடுக்குகளை இடம் மாற்றியபோது இடம் மீந்தது. நாளுக்கு 15000 ரூ வாடகையில் அருகே ஒரு பங்களாவை பார்த்தோம். அங்கே இருபத்தைந்துபேர் தங்கினார்கள். ஆகவே ...
- ஊட்டி 2017-அ.முத்துலிங்கம் 03-May-2017

அ.முத்துலிங்கம்
நண்பர்களுக்கு வணக்கம்,
சிறுகதை அமர்வில் நான் தேர்ந்தெடுத்திருந்த சிறுகதைக்கான குறிப்பும் மற்றும் அது சார்ந்த உரையாடல்களின் சிறுகுறிப்பும்..
புளிக்கவைத்த அப்பம் ( சிறுகதை ) – அ.முத்துலிங்கம்
http://amuttu.net/viewArticle/getArticle/233
இந்த சிறுகதையை உரையாடலுக்காக தேர்ந்தெடுத்ததற்கு முதல் காரணமாக அமைந்தது மூன்று காரணங்கள். 1) சிறுகதையின் உள்ளடக்கம் 2) எழுத்து நடை 3) கதைசொல்லியின் இடம்
ஆனால் இரண்டாம் முறை படிக்கையிலேயே அ.முத்துலிங்கம் அவர்களின் இந்த திறமையான கதை சொல்லும் முறை ஒரு ஈர்ப்பை அளித்தது. ஆகவே, காரணங்களை இவ்வாறு மேம்படுத்திக்கொண்டேன். அவை முறையே, 1) ...
- ஊட்டி காவிய முகாம் – 2017 நினைவுகள் 15-May-2017

அன்பின் ஜெ,
சென்ற(2016) ஃபிப்ரவரியில், குருகுலத்திற்கு வருகையில், எங்கிருந்தென்று தெரியாமல், பசுஞ்சாணத்தின் மணத்தினை, உணர்ந்தேன். இம்முறையும், ஊட்டி பேருந்து நிலையத்தில் இறங்கும்போதே, இயல்பாக அதைத் தேடியது நாசி.
இரு சக்கர வாகனத்தில் வருவதாகத் திட்டமிட்டிருந்தேன். முதலிருநாள், கடுமையான ஜுரத்தினால், உடல் ஒத்துழைக்காமல், பேருந்திலேயே செல்ல முடிவெடுத்து, வந்து சேர்ந்தேன்.
சென்ற முறை போல், முதல் நாளிரவு முழுக்க பயணித்து, மறு நாள் உடல் அலுப்புடன் அமரவேண்டிய தேவையில்லாமல், முகாமுக்கு முதல் நாள் மாலையே குருகுலம் வந்தடைந்தேன். அதற்கு மற்றொரு காரணமும் உண்டு. ...
- ஊட்டி சந்திப்பு ஒரு முழுப்பதிவு 19-May-2017

ஜெ, ஊட்டி முகாம் அமர்வுகளையும் அது சார்ந்து நிகழ்த்த விவாதங்களையும் சுருக்கமாக தொகுத்துள்ளேன். விவாதங்களை சுருக்கமாக எழுதுவதில் குறைகளும் பிழைகளும் இருக்கும் என்றே கருதுகிறேன். நாஞ்சிலின் கம்பராமாயண அமர்வு, சாமிநாதனின் இந்திய கலைகள் பற்றிய அமர்வு மற்றும் காளிபிரசாத்தின் அமர்வை தொகுக்கவில்லை.
தாமரைக்கண்ணன்
Apr 28 காலை 10 மணியளவில் முகாம் துவங்கியது. தற்போது குருகுலத்தில் இருக்கும் சுவாமி வியாச பிரசாத் முகாமை துவக்கி வைத்தார். முதல் அமர்வான அசோகமித்திரன் அமர்வை, க.மோகனரங்கன் மற்றும் ராம்குமார் நிகழ்த்தினார்கள். க.மோகனரங்கன் உரையின் ...
- ஊட்டி சந்திப்பு நிகழ்வுப்பதிவு 24-May-2017

சார் வணக்கம்,
ஒரு பதிவு எழுதியிருக்கிறேன்.
ஊட்டி காவிய முகாமில் பங்கேற்க வெகு நாட்களாக ஆசை இருந்தது. அதை போன்ற நிகழ்வுகளில் பங்கேற்றவர்களின் கடிதங்களும், எடுத்த புகைப்படங்களும் ஆர்வத்தை அதிகரிக்கும். ஆனால், விண்ணப்பம் திறக்கப்பட்ட சில மணி நேரங்களில் அதிகபட்ச எண்ணிக்கையை எட்டியிருக்கும். ஏனெனில் நள்ளிரவில் பதிவேற்றம் செய்தவுடன் வாசிக்கிற எத்தனையோ வாசகர்கள் இருக்கிறார்கள். எப்படியோ இந்த முறை பங்கேற்க அழைக்கப் பட்டிருந்தேன். ஏப்ரல் 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில், ஊட்டி நாராயண குருலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ...