- புதியவாசகர் சந்திப்பு நாமக்கல் 27-Feb-2019நண்பர்களே, இந்த வருடம் தொடர்ச்சியான நான்காம் ஆண்டாக விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பாக ஒரு புதிய வாசகர் சந்திப்பு ஈரோட்டில் நடைபெற்றது. அதில் சிலருக்கு இடமளிக்க இயலவில்லை, ஆகவே இந்த இரண்டாவது சந்திப்பு. இந்த இரண்டு நாட்களிலும் எழுத்தாளர் ஜெயமோகனை சந்தித்து பேசலாம். அவர் சனி காலை வந்து ஞாயிறு இரவு தான் ஊர் புறப்படுகிறார். சனி இரவு நிகழ்விடத்திலேயே புதிய வாசகர்களுடன் தங்குகிறார். இலக்கியத்தையும் அறிவுத்துறையையும் தீவிரமாக எடுத்துக்கொள்பவர்களை இந்த சந்திப்பிற்கு வரவேற்கிறோம். சந்திப்பில் இலக்கியம், வரலாறு, தத்துவம் பற்றி பொதுவாக ...
- நாமக்கல் புதிய வாசகர் சந்திப்பு – கடிதங்கள் 26-Mar-2019காலை ஆறு மணிக்கு நமக்கலில் இறங்கியதில் இருந்து இந்த கட்டுரையை தொடங்குவது அடித்து துவைத்து காயவைக்கப்பட்ட தேய்வழக்காம். வேறு எங்கிருந்து தொடங்குவது? என்ன எழுதுவது? எப்படி எழுதுவது? யாருக்காக எழுதுவது? எதை எழுதக்கூடாது? எப்படி எழுதக்கூடாது? எதற்கு எழுதுவது? இப்படி ஓராயிரம் கேள்விகளுக்கு பதில்த் தேடி தான் நாமக்கல் புதிய வாசகர் சந்திப்பிற்கு சென்றிருந்தேன்! பொட்டிரெட்டிப்பட்டி பேருந்து நிலையத்தில் ஏற்கனவே சில நண்பர்கள் காத்திருந்தார்கள், இலக்கிய விவாதமும் தொடங்கிவிட்டிருந்தது. புதிய வாசகர்களின் படைப்புகள் முதல் விஷ்ணுபுரம் வரை அவரவர் ...