- ஊட்டி குரு நித்யா இலக்கிய முகாம் பற்றி 20-Mar-2019

ஊட்டி குரு நித்யா இலக்கிய முகாம் குரு இருந்தபோதே ஆரம்பிக்கப்பட்டது. குரு மறைந்தபின் ஓரிரு ஆண்டுகள் தவிர தொடர்ச்சியாக ஊட்டியில் இதை ஒருங்கிணைத்து வருகிறேன். தொடக்கத்தில் இலக்கிய விவாத அரங்காகவும், பின்னர் தமிழ்- மலையாளக் கவிதைப் பரிமாற்ற அரங்காகவும் இது நிகழ்ந்தது. சென்ற சில ஆண்டுகளாக இலக்கிய விவாத அரங்காக ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது. தமிழின் முதன்மையான படைப்பாளிகள் இதில் பங்கெடுக்கிறார்கள்.
வரும் மே மாதம் 3, 4, 5 தேதிகளில் இதை ஒருங்கிணைக்க இப்போது ...
- ஊட்டி சந்திப்பு -சிவமணியன் 11-May-2019

சுசித்ரா வாழ்த்துப்பாடலுடன் துவங்க அவருடன் திருமூலநாதனும், புதுக்குரல் பழனி ஜோதியும் இணைய சைவ, வைணவ, கௌமார கடவுளார்களின் ஆசி பெற்று நிகழ்வுகள் துவங்கியது. காலைமுதல் நிகழ்வாக பாலாஜி பிருத்விராஜின் நாவல் விவாதம். ஒரு உதாரண நாவல், வாசகனுடன் உணர்வுத் தொடர்பினை (Emotional connect) ஏற்படுத்தி அதன் போக்கில் அந்த தொடர்பினை இறுதி வரை தக்க வைக்கும் தன்மை கொண்டிருக்க வேண்டும் எனவும். Metaphor என்னும் மையப்படிமம் நாவலுக்கு அவசியம் எனவும் . நாவலின் “பலகுரல்தன்மை” சிறுகதையிலிருந்து வேறுபடுத்தும் ...
- ஊட்டி சந்திப்பு – நவீன் 12-May-2019

இரவு ஒன்பது மணியளவில் அன்றைய நிகழ்ச்சி முடிவுற்றதும் உணவு வழங்கப்பட்டது. விஷ்ணுபுரம் நிகழ்ச்சியில் நான் கலந்துகொள்வது இது இரண்டாவது முறை. இருமுறையும் நான் கவனித்தது நேர்த்தி. அதற்கான காரணம் செந்தில்குமார் என்றே கணிக்கிறேன். ஒவ்வொன்றும் அவர் கண்காணிப்பில் நடக்கிறது. இலக்கிய விவாதத்திலும் தீவிரமாகப் பங்கெடுக்கிறார்.
கலையும் கடமாவும்: ஊட்டி முகாம் அனுபவம்
- ஊட்டி- கடிதம் 15-May-2019

ஊட்டி சந்திப்பு – நவீன்
ஜெ. அவர்களுக்கு
வணக்கம். ஊட்டி சந்திப்பு குறித்து நவீன் எழுதிய பதிவை வாசித்தேன். நவீனுடன் பயணித்து, அவருடனே முகாமில் கலந்து கொண்டதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தி விட்டார். அவருக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். உங்கள் பார்வையை பலியாட்டை தேடும் பூசாரியின் கண்கள் என்று சொன்னதை பொங்கி சிரித்தபடி வாசித்தேன். நவீன் பகிர்ந்த பல விஷயங்களுக்குள், அவர் இந்த அமர்விற்கான முன் தயாரிப்பு செய்தது எனக்கு மிகவும் ஆச்சரியம் அளித்தது. மலேசிய சிறுகதைகள் 86 ...
- குரு நித்யா ஆய்வரங்கு, ஊட்டி – கடலூர் சீனு 15-May-2019

இனிய ஜெயம்
மகிழ்சிகரமான மற்றொரு மூன்று நாட்கள். மூன்று நாட்கள் தீவிரமான விஷயங்களை மட்டுமே பேசியபடி இரவுகளில் பாடல்களும் சிரிப்புமாக என உண்மையில் இந்த மூன்று நாட்களும் ஓடிய வேகமே தெரியவில்லை. திரும்புகையில் நண்பர்கள் உரையாடலிலும் இதையே தெரிவித்தனர். செறிவான கலந்துரையாடல்கள் அமைந்த கச்சிதமான நேரக்கட்டுப்பாட்டின் மீது அமைந்த கூடுகை.
எப்போதும்போல நாஞ்சில் சாரின் கம்பராமாயண அமர்வு கனவுகளை எழுப்பும் ஒன்றாக அமைந்தது.குளிக்கையில் உடல் தேய்க்க மேரு மலையை பயன்படுத்துபவன் கும்பகர்ணன் எனும் கம்பனின் வர்ணனை வரும்போது, ரொம்ப ரொம்ப ...
- ஊட்டி சந்திப்பு- கடிதம் 16-May-2019

மலைகளை அணுகுவது
ஊட்டி சந்திப்பு – நவீன்
ஊட்டி சந்திப்பு -சிவமணியன்
அன்புள்ள ஜெயமோகன்,
ஊட்டி முகாமில் பேசாத சில வாசகர்களில் நானும் ஒருவன். பல வருடங்களாக கூட்டங்களில் பேசாமல்போனதால், சில வருடங்களாக பெரும்பாலும் தனிமையிலேயே இருப்பதால், ஒரு மெளனம் என்மேல் கவிந்திருக்கிறதென்று உணர்ந்தேன். அங்கே நண்பர்கள் பலருடன் பேசுகையில் இருந்த இயல்பு, கூட்டத்தில் விவாதம் நடக்கும்பொழுது மறைவது எனக்கே விந்தையாக இருந்தது. 2-3 அரங்குகளில் திட்டவட்டமான கருத்தும் கேள்வியும் இருந்தும் கையை தூக்கி பேசமுடியவில்லை. இதுவரையில் நான் ஒரு தனியன் என்று எனக்கே ...
- ஊட்டி குருநித்யா ஆய்வரங்கு- மீண்டும் ஒரு நினைவுத் தொகுப்பு 17-May-2019

ஊட்டி புகைப்படம் விஜய் ரங்கநாதன்
மலைகளை அணுகுவது
ஊட்டி சந்திப்பு – நவீன்
ஊட்டி சந்திப்பு -சிவமணியன்
ஊட்டி குருநித்யா இலக்கியக் கருத்தரங்குக்கு செல்வதில் உள்ள சிக்கல் பேருந்தில் பயணம் செய்யவேண்டும் என்பதுதான். முன்பெல்லாம் அது எனக்கு ஒரு பிரச்சினையே அல்ல. இப்போது கழுத்துவலி, இடுப்பு வலி. கோவை வரை ரயிலில் வந்து பேருந்தில் செல்லலாம். ஆனால் கோவை ரயில் காலை 7 மணிக்கே வரும். அதன்பின் கிளம்பினால் 11 மணிக்கே ஊட்டி செல்லமுடியும். ஒருநாள் முன்னரே வந்து தங்கலாம். அருண்மொழி, சைதன்யா ...
- மலேசியாவிலிருந்து ஊட்டி முகாமுக்கு… – பவித்தாரா 20-May-2019

இலக்கியத் துறையில் நான் எடுத்து வைக்கும் முதல் சில அடிகளை அழகான நினைவுகளாக பாதுகாக்கிறது, விமர்சனப் போட்டியில் வென்றதற்காக வல்லினம் திட்டமிட்டுத் தந்த ஊட்டி முகாம். விமானப் பயணம், இந்திய பூமி, இலக்கிய விவாதங்கள் இவை எல்லாமே எனக்கு இதுதான் முதல் முறை. வல்லினக் குழுவோடு இந்த முகாமிற்கு என்னையும் அனுமதித்த எழுத்தாளர் ஜெயமோகனுக்கு எனது நன்றிகள். பலர் இதற்கான வாய்ப்புக்கிடைக்காமல் இருப்பதையும் அறிவேன். எனவே இதன் முக்கியத்துவத்தை நான் முழுமையாகவே உணர்கிறேன்.
இலக்கியத்துக்கு நான் புதியவள். ...
- ஊட்டி காவிய முகாம் – சந்திப்பு ஒரு கடிதம் 23-May-2019

ஊட்டி குருநித்யா ஆய்வரங்கு- மீண்டும் ஒரு நினைவுத் தொகுப்பு
அன்பின் ஜெ,
வெள்ளியன்று காலை முதல் அமர்வு துவங்குவதற்கு முன் திருமூலநாதன் கோளறுபதிகத்தின் முதல் பாடலையும் நிறைவுப் பாடலையும் (அவருக்கேயுரிய கனமான, கணீர் குரலில்) பாடி முடித்தபின் (அரசாள்வார் ஆணை நமதே) ஒரு நமட்டுச் சிரிப்பு அவரிடமிருந்து வெளிப்பட்டது. நான் யூகித்த காரணம் சரியே – அவருக்கும் அன்று தளத்தில் வெளியான வாட்ஸப் வரலாறுநினைவிற்கு வந்திருக்கிறது. அப்புறம் அதைப் பற்றிய ஒரு சிறு உரையாடல். உண்மையில் உங்கள் வாசகர்களுக்கும், குரு நித்யா ...
- ஊட்டி 2019 – அறிவியல் புனைகதைகள் சார்ந்து நடந்த விவாதங்களின் தொகுப்பு. 23-May-2019

அறிவியல் புனைகதைகள் – வரலாறு, வடிவம், இன்றைய நகர்வுகள் -சுசித்ரா
இந்த வருட ஊட்டி அரங்கில் அறிவியல் புனைக்கதை சார்ந்த விவாதம் அரங்குக்குள்ளேயும் வெளியேயும் மூன்று நாட்களும் தொடர்ந்து ஒரு அடியோட்டமாக நடந்துகொண்டே இருந்ததை கவனிக்க முடிந்தது. தமிழுக்கு இவ்வகை எழுத்து எவ்வளவு புதியது என்ற புரிதல் இந்த சந்திப்பு வழியே தெளிவானது. ஒரு பக்கம் புதியதை பற்றிய பரவசமும் மற்றொரு பக்கம் புதிய வடிவங்களை நோக்கிய எச்சரிக்கையும் எரிச்சலும் வாசகர்களிடையே காணமுடிந்தது.
இம்முறை தற்செயலாகவே பல விவாத அரங்குகள் ...