- ஈரோடு சந்திப்பு பற்றி 21-Feb-2020

ஈரோடு சந்திப்பு பற்றி சில ஐயங்கள் வந்தன. இது தொடர்ந்து நிகழ்வதனால் எல்லாருக்கும் இது எப்படி நிகழும் என தெரியும் என்று நினைத்தேன். அது பிழை என தெரிகிறது
1. நான் இரண்டுநாட்களும் புதிய வாசகர்களுடன் இருப்பேன், அவர்களுடன் தங்குவேன், உரையாடுவேன்
2. பெண்களுக்கு தனியாக தங்க இடம் ஒதுக்கப்படும்
மார்ச் 7,8 இரண்டு நாட்கள் சந்திப்பு நிகழ்கிறது.
முன்னர் புதியவாசகர்களாக வந்தவர்கள் பலர் இன்று எழுத்தாளர்களாக நிலைபெற்றுவிட்டார்கள். இப்போது வாசிக்கவும் எழுதவும் வந்திருக்கும் புதியவர்களுக்கான நிகழ்ச்சி இது.
இதில் பங்கு ...
- ஈரோடு புதியவாசகர் சந்திப்பு,2020 10-Mar-2020

ஒரு செயலைத் தொடங்கும்போது அதை தொடர்ச்சியாக, ஓர் இயக்கமாக, நடத்தவேண்டும் என்ற திட்டம் எனக்கு எப்போதும் இருந்ததில்லை. இருபத்தைந்தண்டுகளுக்கும் மேலாக நடந்துவரும் குரு நித்யா இலக்கிய அரங்கு, பன்னிரண்டு ஆண்டுகளாக நடந்துவரும் இந்த இணைய தளம், பத்தாண்டுகளாக நடந்துவரும் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் எல்லாமே ஓர் உற்சாகத்தில் தொடங்கியவை. எதிர்காலத்தை நெடுந்தொலைவுக்கு எண்ணும்போது ஒரு மலைப்பும், பெருஞ்சுமையோ என்னும் தயக்கமும் உருவாகிவிடும். அப்போதைய ஊக்கத்தைக் கொண்டே தொடங்குவதும், மேலும் மேலும் ஊக்கத்தை உருவாக்கியபடி தொடர்வதும் என் வழக்கம். வெண்முரசும் ...
- ஈரோடு வாசகர் சந்திப்பு -கடிதம் 11-Mar-2020

ஈரோடு புதியவாசகர் சந்திப்பு,2020
அன்புள்ள ஜெ,
திங்கட்கிழமைகள் என்பது மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்கு ஒருவித கலக்கத்தை அளிக்கக்கூடியவை. ஆனால் இந்த திங்கட்கிழமை மிக உற்சாகமாக உணர்கிறேன் , அதற்கு முக்கிய காரணம் ஈரோடு வாசகர் சந்திப்பு 2020. கடந்த இரண்டு நாட்களாக நடந்த நிகழ்ச்சிகளை மனம் அசைப்போட்டபடி லயித்திருக்கிறது .உங்களுடனும் வாசகர் சந்திப்புக்கு வந்த நண்பர்களுடனும் கழித்த கடந்த 2 நாட்கள் என் வாழ்வில் மறக்கமுடியாதவை ஜெ.
அதிகாலை பேருந்து நிலையத்திற்கு வந்திறங்கியதிலிருந்து நேற்று மாலை பெங்களூருக்கு திரும்பும் வரை ...
- ஈரோடு புதியவாசகர் சந்திப்பு,கடிதம்-2 12-Mar-2020

ஈரோடு புதியவாசகர் சந்திப்பு,2020
அன்புள்ள ஜெ,
நான் எப்பொழுதும் என்னை குழப்பிக்கொள்வதில் தேர்ச்சிபெற்றவன். அந்த குழப்பங்களில் உழன்று அதனூடாக தன்னிரக்கம் அடைவதில் ஒருவித சுகம் பெற்றவன். அதனால்தான் ஒரு தெளிவை நோக்கியோ அல்லது என்னை கலைத்து போட செய்யும் ஓர் நிகழ்வை நோக்கியோ செல்வதில் பெரும் தயக்கத்தை கொண்டிருந்தேன். இச்சந்திப்பின் அறிவிப்பு வந்த நாள் முதல் அதில் கலந்துகொள்ளும் நாள் வரை என்னுள் தலைவிரித்தாடிய தயக்கத்தை உடைத்து, சந்திப்பில் கலந்துகொண்டதையே என்னுள் நிகழந்த பெரும் வெற்றியாக கருதுகிறேன்.
உங்களை சந்தித்த சில நிமிடத்தில் ...
- ஈரோடு புதியவாசகர் சந்திப்பு- கடிதங்கள்-3 14-Mar-2020

ஈரோடு புதியவாசகர் சந்திப்பு,2020
ஈரோடு வாசகர் சந்திப்பு -கடிதம்
அன்புள்ள ஆசிரியர்க்கு,
ஈரோடு புதிய வாசகர் சந்திப்பின் வெற்றி என்பது உங்களுடன் இரு நாட்கள் தங்கியிருந்தது தான். உங்களின் பதிவுகளை நூல்களை படிக்கும் போது பிறக்கும் உத்வேகத்தில் பலமுறை நான் நினைத்ததுண்டு நீங்கள் ஏதேனும் குருகுலம் ஆரம்பித்தால் முதல் ஆளாகப் போய்ச் சேரவேண்டும் என்று. அங்கேயே கிடந்து சேவை செய்து கற்றறிந்து புதிய ஆளாக வரவேண்டும் என்று. வாசகர் சந்திப்புக்கான இவ்விரு நாட்கள் அவ்வாசையை தீர்த்துக் கொள்ள ஒரு சிறு வாய்ப்பு. ...
- ஈரோடு சந்திப்பு கடிதங்கள்-4 15-Mar-2020

ஈரோடு புதியவாசகர் சந்திப்பு,2020
அன்புள்ள ஜெ,
ஈரோடு புதிய வாசகர் சந்திப்பு 2020, இலக்கியத்தின் முழு பரிமாணத்தையும் விளக்கக்கூடிய ஒன்றாக இருந்தது.
Plagiarism, தனிநபர் பத்திரிக்கைகள், இலக்கியத்திற்கும் அரசியல், சினிமா, ஓவியம் போன்ற துறைகளுக்கும் உள்ள தொடர்பு, படைப்புத் திறனை ஊக்குவிக்கும் கல்விமுறை போன்ற உரையாடல்கள், இலக்கியம் பற்றிய அறிவை விசாலமாக்கும் வகையில் இருந்தன.
சிறுகதைகளின் பொதுவான வடிவம், கனவை அடிப்படையாகக் கொண்ட கதைகள், பேய்க்கதைகள் மற்றும் நகைச்சுவைக் கதைகளில் இருக்க வேண்டிய நுட்பம், கவிதைகள் எழுதும் முறைகள், படைப்புகளை மதிப்பீடு செய்யும் ...
- ஈரோடு சந்திப்பு கடிதங்கள்-5 16-Mar-2020

ஈரோடு புதியவாசகர் சந்திப்பு,2020
பெருமதிப்பிற்குரிய ஜெ அவர்களுக்கு,
வணக்கம். புதிய வாசகர் சந்திப்பு குறித்த அறிவிப்பை நமது தளத்தில் கண்டவுடனே பெரும் விருப்பையும் அதற்கிணையாகவே தயக்கம் துணைக் கொண்ட பயத்தையும் அடைந்தேன். உங்களுடன் இரு நாட்கள் தங்கும் வாய்ப்பு என்பதே தயக்கத்தை உடைத்திடப் போதுமானதாக இருந்தது.
சனிக்கிழமை காலை ஏறத்தாழ 9 மணியளவில் காஞ்சிக்கோவிலில் இருக்கும் பண்ணை வீட்டை அடையும் போதே, உங்கள் குரல்தான் வரவேற்றது. மாடிப்படிக்கருகில் நின்று நீங்கள் பேசிக்கொண்டிருக்க, உடம்பே காதுகளாக சுற்றிலும் வாசகர்கள். வந்திருந்த பெரும்பாலான வாசகர்கள் ...