- வெண்முரசு நாள் – குருபூர்ணிமா ஜூலை 5 நிகழ்வு 01-Jul-2020வெண்முரசு நாள் – குரு பூர்ணிமா – 05/07/2020 ஞாயிறு குரு பூர்ணிமா முழுநிலவு நாளை இவ்வருடம் முதல் நாம் வெண்முரசு நாளாக கொண்டாட இருக்கிறோம். தொன்று தொட்டு, இந்த நாளில் நமது வாழ்வில் ஞான ஒளி ஏற்றிய ஆசிரியர்களை வழிப்பட்டு வருகிறோம். பாரதம் இயற்றிய வியாசரின் பிறந்தநாளாகவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இவ்வருடம், மகாபாரதம், தமிழில், நாவல் வடிவில், ‘வெண்முரசு’ என்ற பெயரில் எழுத்தாளர் ஜெயமோகனால் எழுதி முடிக்கப்படுள்ளது. தமிழ் மொழியில் நிகழ்ந்த மகத்தான சாதனைகளில் ஒன்று இந்த ...
- குருபூர்ணிமா கடிதம் 04-Jul-202025,000 பக்கங்கள்… 7 வருடங்கள்… ஒருதினம்கூட தவிர்க்காமல் தன்னுடைய படைப்புக்காகத் துளியும் சலிப்பின்றி தொடர்ந்து தன்னையும் தனது நேரத்தையும் ஒப்புக்கொடுக்கிற மனநிலை என்பதே தாஸ்தாவ்ஸ்கி, டால்ஸ்டாய், காந்தி போன்று படைப்புலகில் வெகுசிலருக்கே அமைகிற பெருங்கொடுப்பினை. நாங்கள் மீண்டும் மீண்டும் எண்ணிப்பார்க்கிறோம், எப்படி ஒரு மனிதனால் தான் எடுத்துக்கொண்ட காரியத்தில் இவ்வளவு உறுதியாக தொடர்ந்து அதே துவக்கவிசையுடன் நீடிக்க முடிகிறது? இடர்ப்படும் தடைகளை படைப்பாலேயே கடந்துவிடுகிற ஒரு ஆற்றலை எவ்வாறு உங்கள் உள்மனம் நொடிக்குநொடி சிருஷ்டித்துக் கொள்கிறது? நாங்கள் தீர்க்கமாக ...
- இன்று குருபூர்ணிமா வெண்முரசு நாள் சந்திப்பு 05-Jul-2020
தமிழில் மகாபாரதம் ஜெயமோகன் அவர்களால் எழுதி முடிக்கப்பட்டது.
7 வருடங்கள் ,26 நாவல்கள், 25000 பக்கங்கள்
இந்த பெரும் முயற்சி முழுமையடைந்து, இந்நாவல் எழுதி நிறைவு செய்யப்பட்டதை, இவ்வருடம் தொடங்கி, ஆண்டு தோறும் குருபூர்ணிமா முழுநிலவு நாளில் வெண்முரசு வாசிப்பு, ஆசிரியருடனான உரையாடல் என கொண்டாடுவோம்.
- குருபூர்ணிமா – வெண்முரசு நாள் 05-Jul-2020லஷ்மிமணிவண்ணன், ஷாகுல் ஹமீது, சுஷீல் ஆகியோர் ஜெவை சந்தித்து நம் சார்பாக வாழ்த்து தெரிவித்தனர். விஷ்ணுபுரம் நண்பர்கள்
- வெண்முரசு நாள் – குருபூர்ணிமா – அமர்வுகள் காணொளிகள் 05-Jul-2020
- குருபூர்ணிமா 08-Sep-2020இலக்கிய வாசிப்பு எனத் தொடங்கும்போதே எனக்கு வழிகாட்டியாக இருந்தது ஜெயமோகன் எழுதிய ‘இலக்கிய முன்னோடிகள்’ வரிசை நூல்கள்தான். அப்படியான நூல்கள் உள்ளன என்று கூட எனக்கு அப்போது தெரியாது. என்னிடம் நெடுநேரம் பேசிக்கொண்டிருந்த தமிழினி வசந்தகுமார் அந்த ஏழு நூல்களையும் நான் அவசியம் வாசிக்க வேண்டுமெனப் பரிந்துரைந்தார். குருபூர்ணிமா -நவீன்