- அ முத்துலிங்கம் – கலந்துரையாடல் நிகழ்வு 21-Jul-2020

நண்பர்களுக்கு வணக்கம்,
மூத்த இலக்கிய ஆளுமை, எழுத்தாளர் அ முத்துலிங்கம் அவர்களுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்வை வருகிற சனி மாலை (25 – 07 -2020) ஒருங்கிணைத்திருக்கிறோம். எழுத்தாளர் ஜெயமோகனும் கலந்துக்கொள்ளும் இந்நிகழ்வில் 100 நண்பர்கள் zoom வழியாக கலந்துக்கொள்ளலாம். Youtube நேரலையிலும் நண்பர்கள் கலந்துக்கொண்டு தங்கள் கருத்துக்களை, கேள்விகளை முன்வைக்கலாம்.
“எந்தப் பண்பாட்டுச் சூழலிலும் அரிதாகவே முதன்மைப் பெரும்படைப்பாளிகள் தோன்றுகிறார்கள். அரிதாகவே அவர்கள் சமகாலத்தில் உரிய மதிப்பைப் பெறவும் செய்கிறார்கள். ஐயமின்றி ஈழ இலக்கியச் சூழல் உருவாக்கிய முதன்மைப் ...
- அ.முத்துலிங்கம் காணொளி உரையாடல் 30-Jul-2020
அன்புள்ள ஜெ
அ.முத்துலிங்கம் அவர்களுடனான உரையாடல் ஒரு சிறப்பான அனுபவமாக அமைந்தது. அவருடைய பதில்களில் இருந்த ஓர் அம்சத்தைச் சுட்டிக்காட்டவேண்டும்.
பொதுவாக எழுத்தாளர்கள் வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்லும்போது இரண்டு வகைகளில் பதில்சொல்வார்கள். கேள்விக்கு அப்போது தனக்குத் தோன்றும் ஒரு நினைவையோ எண்ணத்தையோ பதிலாகச் சொல்வார்கள். அல்லது அவர்கள் சொல்லிவரும் ஒன்றை சொல்வார்கள். அ.முத்துலிங்கம் அவர்கள் பதில்சொல்லும்போது அப்படி அல்லாமல் அந்தபதிலால் வாசகனுக்கு மகிழ்ச்சியும் பயனும் இருக்கவேண்டும், அவன் எதையாவது கற்கவேண்டும் என நினைக்கிறார். ஆகவே பதில்களை கூர்மையாக அந்த ...
- அ.முத்துலிங்கம் உரையாடல்- வாசகரின் இடம் பற்றி… 03-Aug-2020
அ.முத்துலிங்கம் காணொளி உரையாடல்
அன்பின் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு ,
ஈழத்து மூத்த எழுத்து ஆளுமைகளில் ஒருவரான அ .முத்துலிங்கம் அவர்களுடனான காணொளி உரையாடல் சனிக்கிழமை ,ஜூலை 25,2020 அன்று தங்களின் விஷ்ணு புரம் வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற பொழுது கனடாவிலிருந்து கலந்து கொண்ட இலங்கை தமிழர் நான் தான் .
தமிழ் மொழி பேசுபவர்கள் எல்லாம் தமிழர்கள் தான்.அதில் இலங்கை, மலேசியா ,இந்தியா ,சிங்கப்பூர் எனும் பாகுபாடில்லை .நான் முத்துலிங்கம் ஐயாவின் இரண்டு ,மூன்று கதைகள் தான் படித்திருந்தேன் ...