- அ.கா.பெருமாள் நூல்களை வாசிக்க 05-Oct-2020

அ.கா.பெருமாள் அறிமுகம்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம். தாங்கள் அடுத்த நிகழ்வு. நாட்டார் வழக்காற்றியல் துறையில் பல நூல்களை எழுதியுள்ள திரு அ.கா. பெருமாள் அவர்களுடன் நடத்தலாம் என்று சொன்னதுமே, அவர் நூல்களை வாங்க அமேசானிலும், தமிழ் இணையதளங்களிலும் குறிப்பாக ebooks, தேட ஆரம்பித்தேன். தளத்தில் , நீங்கள், வாசகர்கள் எழுதிய கட்டுரைகளின் மூலம், அவரின் முக்கியத்துவத்தையும், நூல்களையும் அறிந்திருந்தாலும், அவருடைய ஒரு நூலையாவது முழுமையாக வாசித்துவிட்டு அவரிடம் பேசலாமென, வாங்குவதற்காக தேடினேன்.
amazon.com-ல் மூன்றே மூன்று புத்தகங்கள் இருந்தன.
வயல்காட்டு இசக்கி
அகிலத்திரட்டு அம்மானை
சடங்கில் கரைந்த கலைகள்
பூதமடம் நம்பூதிரி
Tamildigitallibrary.in-ல் இரண்டு புத்தகங்கள் ...
- அ. கா. பெருமாள் – கலந்துரையாடல் நிகழ்வு 05-Oct-2020

நண்பர்களுக்கு வணக்கம்,
நாட்டாரியல் ஆய்வாளரும் தமிழறிஞருமான அ.கா.பெருமாள் அவர்களுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்வை அக்டோபர் 17, சனிக்கிழமை மாலை ஒருங்கிணைத்திருக்கிறோம். இந்நிகழ்வில் 100 நண்பர்கள் zoom வழியாக கலந்துக்கொள்ளலாம். Youtube நேரலையிலும் நண்பர்கள் கலந்துக்கொண்டு தங்கள் கருத்துக்களை, கேள்விகளை முன்வைக்கலாம்.
அ.கா.பெருமாள் – சந்திப்பு
அக்டோபர் 17, 2020, மாலை 6:00 மணி
யூட்யூப் லைவ்: http://www.youtube.com/c/JeyamohanWriter
ஜூம் மீட்டிங் : https://us02web.zoom.us/j/3827655072?pwd=cWRNTUlWb3R5clcxKytWNU1LYklNUT09
Meeting ID: 382 765 5072
Passcode: 8965317862 (முதலில் இணையும் 100 பேர் மட்டும்)
அனைவரும் யூட்யூப் லைவில் கலந்துகொள்ளலாம், வருக.
விஷ்ணுபுரம் நண்பர்கள்
தொடர்புக்கு: solputhithu@gmail.com
வாட்ஸப் : +91 ...
- அ.கா.பெருமாள் பற்றி அறிய 06-Oct-2020

அ.பெருமாள் நூல்களை வாசிக்க
நாட்டாரியல் ஆய்வாளரும் தமிழறிஞருமான அ.கா.பெருமாள் அவர்களைப் பற்றிய அறிதலுக்காக அவரைப்பற்றிய இணையக்குறிப்புகள், இணையத்தில் கிடைக்கும் அவருடைய பேட்டிகள்
அ.கா.பெருமாள் தொகுத்த கதைகள் வாசிக்க
“பதிவுசெய்யப்பட்டது முழுமையான வரலாறல்ல” – நாட்டார் வழக்காற்றியலாளர் அ.கா.பெருமாள் நேர்காணல்
பண்பாட்டு வரலாறு திரும்ப எழுதப்பட வேண்டும்: அ. கா. பெருமாள் நேர்காணல்
அ.கா.பெருமாள் நாட்டார்கதை ஆய்வாளர்
“சோறு, சாதம் எனும் சொல்லிலும் சாதி, இன அரசியல் இருக்கிறது!’’ – அ.கா. பெருமாள்
- அ.கா.பெருமாள்,ஒரு மாபெரும் அநீதி- கடிதங்கள் 08-Oct-2020

அ.கா.பெருமாளின் ‘தமிழறிஞர்கள்’
ஓய்… என்ன கதவிட்டுட்டு இருக்கீரு…
அன்புள்ள ஜெ
அ.கா.பெருமாள் அவர்களின் தமிழறிஞர்கள் நூலில் வரும் ஒருவரி திகைப்பை உருவாக்கியது. நாகர்கோயில் பீமநேரிக்காரரான ஆண்டி சுப்ரபணியம் உருவாக்கிய A Theatre Encyclopedia என்ற நூலின் கைப்பிரதியை பிரசுரத்திற்கு ஏற்று பலகாலம் வைத்திருந்து அழியவிட்டது சென்னைப் பல்கலைக்கழகம். 6000 துணைத்தலைப்புக்கள் கொண்டது அந்நூல். அப்படியென்றால் அது எப்படியும் மூவாயிரம் பக்கங்கள் கொண்டது. அதை உருவாக்க முப்பதாண்டுகளாவது ஆகியிருக்கும். எப்படி அது அழியவிடப்பட்டது? ஒரு படுகொலை அது இல்லையா? ஒரு வாழ்க்கையையே அழிப்பது. ...
- அ.கா.பெருமாள்- கடிதங்கள் 10-Oct-2020

அ.கா பெருமாள்
அ.கா.பெருமாள் பற்றி அறிய
அ.கா.பெருமாள் நூல்களை வாசிக்க
அன்புள்ள ஜெ
என் அப்பாவின் சொந்த ஊர் சுசீந்திரம். ஆகவே எனக்கு சுசீந்திரம் மீது ஓர் ஈர்ப்பு உண்டு. நான் சுசீந்திரம் பற்றிய நூல்களை படிப்பேன். டாக்டர் கே.கே.பிள்ளை எழுதிய சுசீந்திரம் வரலாறு நூலை ஆறுமாதம் எடுத்துக்கொண்டு படித்து முடித்திருக்கிறேன். அ.கா.பெருமாள் பற்றி நீங்கள் எழுதிய ஒரு குறிப்பில் கே.கே.பிள்ளை நாட்டார் தரவுகளை கருத்தில்கொள்ளவில்லை, அ.கா.பெருமாள் அவற்றையும் கருத்தில்கொண்டு சுசீந்திரம் ஆலயத்தின் வரலாற்றை எழுதியிருக்கிறார் என்று சொன்னீர்கள்.
அது எனக்கு ஆர்வமூட்டியது. ஆனால் ...
- அ.கா.பெருமாள்- கடிதங்கள் 12-Oct-2020

அ.கா.பெருமாள் பற்றி அறிய
அ.கா.பெருமாள் நூல்களை வாசிக்க
அன்புள்ள ஜெ
அ.கா.பெருமாள் அவர்களின் ஆய்வின் முக்கியத்துவம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். நம்மிடையே வரலாறு உண்டு. மன்னர்களின் கல்வெட்டுகள், இலக்கியநூல்கள், கோயில்கள் போன்றவற்றை பற்றிய தகவல்களிலிருந்து உருவாக்கப்படும் வரலாறு அது. ஆனால் மக்கள்தொகையில் 10 சதவீதம்பேருக்குக் கூட அதனுடன் சம்பந்தமில்லை. எஞ்சியவர்களின் வரலாறு வாய்மொழி மரபாகவே உள்ளது. அதைத்தான் நாட்டார்கதைகள், தொன்மங்கள், வாழ்வியல்கூறுகள் என்கிறார்கள். அந்த மக்களைப்பற்றி எழுதவெனெடும் என்றால் அந்த மக்களின் வாய்மொழி மரபைத்தான் ஆராயவேண்டும். அதைச்செய்வதுதான் நாட்டாரியல் ஆய்வு என்று நான் ...
- அன்னை மாயம்மா, அ.கா.பெருமாள்- கடிதங்கள் 14-Oct-2020

அ. கா. பெருமாள் – கலந்துரையாடல் நிகழ்வு
அ.கா.பெருமாள் பற்றி அறிய
அ.கா.பெருமாள் நூல்களை வாசிக்க
அன்புள்ள ஜெ
தங்கள் தளத்தில் வெளியான பேராசிரியர் அ.கா.பெருமாள் அவர்களின் நூல்களை வாங்கி படிப்பதற்கான பதிவில் ஆஸ்டின் சௌந்தர் அவர்கள் சுட்டி கொடுத்திருந்த கன்னியாகுமரி அன்னை மாயம்மா, தமிழிலக்கியங்களின் காலம் பற்றி எஸ்.வையாபுரிப்பிள்ளை ஆகிய இரு நூல்களை தமிழ் இணைய நூலகத்தில் இருந்து தரவிறக்கி படித்தேன். அவ்வாசிப்பை பகிர்ந்து கொள்ளவே இக்கடிதம்.
கன்னியாகுமரி அன்னை மாயம்மா நூலே என்னை முதலில் கவர்ந்தது.சிறுவயதிலிருந்தே சித்தர்கள், மாயங்கள் இவற்றின் மீது ...
- அ.கா.பெருமாள்- சந்திப்பு காணொளி 20-Oct-2020
அ.கா.பெருமாள் பற்றி அறிய
அ.கா.பெருமாள் நூல்களை வாசிக்க
17-10-2020 அன்று இணையத்தில் நிகழ்ந்த கூட்டுச்சந்திப்பின் காணொளிப்பதிவு.ஏறத்தாழ இரண்டரைமணி நேரம் நிகழ்ந்த உரையாடலில் இதுவரை எவரும் கேட்டிராத பண்பாட்டுச் செய்திகள், ஆர்வமூட்டும் சிறுநிகழ்வுகள், மென்நகைச்சுவை என உரையாடுகிறார்
அன்னை மாயம்மா, அ.கா.பெருமாள்- கடிதங்கள்
அ.கா.பெருமாள்- கடிதங்கள்
அ.கா.பெருமாள்- கடிதங்கள்
அ.கா.பெருமாள்,ஒரு மாபெரும் அநீதி- கடிதங்கள்
அ.கா.பெருமாள்:குமரி
அ.கா.பெருமாள், அசோகமித்திரன் -கடிதங்கள்
பண்டைய கழிப்பறைத் தொழில்நுட்பம், அ.கா.பெருமாள்
அ.கா.பெருமாள்
- அ.கா.பெருமாள் ‘வயக்காட்டு இசக்கி’ 23-Oct-2020

வயக்காட்டு இசக்கி
வயக்காட்டு இசக்கி
அன்புநிறை ஜெ,
அ.கா.பெருமாள் எழுதிய ஆறு நூல்களை 2016 புத்தக விழாவில் வாங்கியிருந்தேன். ‘சடங்கில் கரைந்த கலைகள்’, ‘தென்குமரியின் சரித்திரம்’ ஆகிய நூல்களை வாசித்துமிருந்தேன். ஆனால் சென்ற ஏப்ரல் மாதம் இந்தியா திரும்பிவிடும் எண்ணமிருந்ததால், சென்ற வருடப் பயணத்தில் அனேக புத்தகங்களை பெங்களூரில் வீட்டில் கொண்டுபோய் வைத்துவிட்டிருந்தேன்.
தளத்தில் இவரது சந்திப்பு குறித்த அறிவிப்பு வந்ததும் பெங்களூரில் இருக்கும் எனது தோழியை ஒவ்வொரு புத்தகமாக பக்கங்களைப் புகைப்படம் எடுக்கச் சொல்லி வாசித்து முடித்தேன். முதலில் அ.கா.பெருமாள் போன்ற ...
- அ.கா.பெருமாள் சந்திப்பு- கடிதம் 26-Oct-2020
ஜெமோ,
அறுவடை செய்யப்பட்ட நிலத்தில் அதன் வரப்பு வழியாக நடக்கும் அவசியமிருக்காது என்பதை குறிக்கும் ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற சொல்லாடலை எப்படியெல்லாம் நமது வசதிக்கேற்ப புனைந்து வைத்திருக்கிறோம் என்பது ஆச்சரியமளிக்கிறது. அ.கா. பெருமாள் அவர்கள் இதை சுட்டிக்காட்டியது நாட்டார் வழக்காற்றியல் எப்படியெல்லாம் சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களிடமும் ஊடுருவி உருமாறியிருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ள முடிந்தது.
இந்த அறிஞரிடமிருந்து எப்படியாவது அவர் கண்டடைந்தவைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற முனைப்பில் கேட்கப்பட்ட கேள்விகள், இக் கேள்விகளால் வியந்து ...
- அ.கா.பெருமாள்- மக்களைக் கலைப்படுத்துதல்- சுரேஷ் பிரதீப் 31-Oct-2020
அன்புடன் ஆசிரியருக்கு
சென்ற வருட விஷ்ணுபுர விழாவின் போது மாலை அறையில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது ‘எத்தனை பேர் நாடகங்களை நேரில் பார்த்து இருக்கிறீர்கள்?’ என்று கேட்டீர்கள். நாடகம் பார்த்த ஒரு சிலரில் நானும் ஒருவன். அன்று ஏனோ அப்படி சிலரில் ஒருவனாக இருந்தது ஒரு சிறுபிள்ளைத்தனமான மகிழ்ச்சியை எனக்குக் கொடுத்தது. என் தலைமுறையினர்(தொன்னூறுகளில் பிறந்தவர்கள்) ஒரு சிலரே கோவில் திருவிழாக்களில் நாடகங்கள் பார்த்தவர்களாகவும் அதுபற்றி ஏதும் நினைவுகள் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். அடுத்த தலைமுறையில் ஏறத்தாழ நாடகம் பார்த்திருக்கக்கூடியவர்கள் ...