இன்று பவா செல்லத்துரை இணையச் சந்திப்பு 19-Dec-2020
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம். நாடுவதும் அதுவே.
எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்கள் முன்னின்று நடத்தும், தமிழ் இலக்கியத் தோட்டம், எழுத்தாளர் பவா செல்லத்துரையை அழைத்து இணையவழிக் கலந்துரையாடலை நடத்த உள்ளது. நிகழ்வு, வருகின்ற சனிக்கிழமை மாலை ஏழு மணிக்கு (இந்திய நேரப்படி). அழைப்பிதழை இதனுடன் இணைத்துள்ளேன். அ. முத்துலிங்கம் அவர்கள், விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் நண்பர்களை பங்குகொள்ள அழைத்துள்ளார்.
அ. முத்துலிங்கம் அவர்கள், விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் நடத்தும் இணையவழி நிகழ்வில், விருந்தினர் பேச்சாளராக வந்தும் சிறப்பித்தார். தொடர்ந்தும் நமது நிகழ்வில் பங்குகொண்டு, ...