- இன்று வெண்முரசு – இசை வெளியீட்டு விழா 09-Oct-2021

நண்பர்களுக்கு வணக்கம்,
வெண்முரசு நிறைவை கொண்டாடும் வகையில் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா) தயாரித்து வழங்கும் “வெண்முரசு கொண்டாட்டம்” என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு தங்களை அன்புடன் அழைப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். (ஆவணப்படத்தின் முன்னோட்டத்தை இங்கு காணலாம்). இசையமைப்பாளர் ராஜன் சோமசுந்தரம் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
வெண்முரசின் பிரம்மாண்டத்தின் குறியீடாக உருவாகியுள்ள பிரம்மாண்ட இசைக்கோர்வையில் ஜெர்மன் பிராஸ் இசைக்குழு (German Brass Band), வட கரோலினா சிம்பொனியின் தந்தியிசை கலைஞர்கள் (Strings by North Carolina based Symphony ...
- வெண்முரசு இசைக்கோலம் 10-Oct-2021

வெண்முரசு ஆவணப்படத்தில் ஒரு மைய இசைக்கோலமும் நீலம் நாவலில் இருந்து வரிகளை இசையமைத்து கமல் ஹாசன், சைந்தவி, ஸ்ரீராம் பார்த்தசாரதி ஆகியோர் பாடியிருந்த பாடலும் உள்ளன. ராஜன் சோமசுந்தரம் இசை. அந்த இசைக்கோவை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
- வெண்முரசு இசை வெளியீடு நிகழ்வு 10-Oct-2021

வெண்முரசு ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ள இசைத்தொகுதியை 09-10-2021 அன்று மணிரத்னம் வெளியிட்டார். அ.முத்துலிங்கம், நாஞ்சில்நாடன், ரவி சுப்ரமணியம், வேணு தயாநிதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஆவணப்படத்தில் பங்கெடுத்தவர்கள் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்கள்.
- வெண்முரசு இசைக்கொண்டாட்டம், செய்திகள் 26-Oct-2021

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம். அக்டோபர் 9, 2021 அன்று இயக்குநர் மணிரத்னம் முன்னிலையில் நடந்த வெண்முரசு இசைக்கொண்டாட்டம் நிகழ்வு பற்றி, வெவ்வேறு அமெரிக்கப் பத்திரிகைகளில், அக்டோபர் 19,2021, பிற்பகல் 1:30-க்கு செய்தி குறிப்பு வெளியாகியது.
நான் கவனித்தவரையில், அந்த செய்தி குறிப்பு சிகாகோ Daily Herald, பிட்ஸ்பர்க் post-gazette, நியூயார்க் Buffalow News என வெவ்வேறு நகரங்களில் முக்கிய பத்திரிகைகளில் வெளிவந்தன. இந்த விஷயம் எந்த அளவுக்கு முக்கியமானது, அதன் பின்னணி என்ன, விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமெரிக்காவில் உள்ளதா ...