- நாவல் விவாத அரங்கு, சென்னை 05-Jun-2018ஊட்டி குருநித்யா நினைவுக் கருத்தரங்கில் விஷால்ராஜா நவீன நாவல் குறித்து ஓர் அரங்கை நடத்துவதாக இருந்தார். வேறு அரங்குகள் சற்று நீண்டு சென்றமையால் அவ்வரங்கு நடைபெறவில்லை. ஆகவே அதை சென்னையில் குமரகுருபரன் –விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழாவன்று அதே அரங்கில் மாலை மூன்று மணிமுதல் ஐந்தரை வரை நடத்தலாமென முடிவெடுத்தோம் விஷால்ராஜா முதலுரை வழங்குவார். சுனீல்கிருஷ்ணன், சிவமணியன் ஆகியோர் எதிர்வினையாற்றுவார்கள். சிறுவிவாதம் நிகழும். இலக்கிய ஆர்வலர் மூன்று மணிமுதல் இரு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளவேண்டும் என அழைக்கிறோம் சுனில் கிருஷ்ணன் சிவமணியன் தொடர்புக்கு சௌந்தர் 9952965505 ...
- விருதுவிழாவும் நாவல்விவாதமும் 13-Jun-2018அன்புள்ள ஜெ… விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது விழா மிகச் சிறப்பான அனுபவத்தை தந்தது.. விருதுக்கு முன் இன்னொரு நிகழ்ச்சி என்ற கான்செப்ட் புதுமையான ஒன்று… நாவல் குறித்தான விவாதம் பல திறப்புகளை அளித்தது… என்னதான் யூட்யூப் நேரலை என வந்து விட்டாலும் நேரடி அனுபவம் என்பது தனித்துவமானது. நண்பர்களை கண்ட மன நிறைவுடன் சான்றோர் சூழ் அவையில் அமர்ந்து நிகழ்ச்சியை காண்பதற்கு நிகர் வேறில்லை… தொடர் வண்டியில் பயணித்தபடி மழையை ரசித்த அனுபவத்தை எழுதியிருந்தீர்கள்… அதையே அதே உணர்வுடன் நண்பர்களுடான தனி ...
- நவீன நாவல் -எதிர்வினை, சுனீல் கிருஷ்ணன் 14-Jun-2018எழுத்தாளர் விஷால் ராஜா விரிவாக நாவல் உருவாகி உருமாறி வரும் பின்புலத்தை நவீனத்துவ பின் நவீனத்துவ புரிதல்களின் அடிப்படையில், ஏற்கனவே இங்கு நிலவிவரும் உரையாடலின் தொடர்ச்சியாக கருத்துக்களை தொகுத்து அளித்துள்ளார். அவருடைய கட்டுரையில் இருந்து சில மேலதிக புள்ளிகளையும், மாற்று பார்வைகளையும் முன்வைக்க முயல்கிறேன். 2013 ஆம் ஆண்டு ஜெயமோகன் திருவண்ணாமலை வந்திருந்த போது எல்லோரும் கிரிவலம் சென்றோம். அப்போது அவரிடம் ந. பிச்ச்சமூர்த்தி எழுத்து இதழுக்கு அளித்த நேர்காணலில் “சொல்லை மந்திரம் என்பார்கள் சொல்லைக் கொண்டே சொல்லற்ற ...
- நவீன நாவல் -விஷால்ராஜா 14-Jun-2018
“நவீன நாவல்” என்று சொல்லும்போது நாம் இரண்டு விஷயங்களை உத்தேசிக்க வாய்ப்புகள் உள்ளன. முதலாவது உத்தேசம் – நம் சமகாலத்து நாவல்கள். சமகால நாவல் எதையும் நவீன நாவல் என்றே அழைக்க முடியும். நவீனம் என்பது “Modern” என்பதன் பெயர்ப்புச் சொல். அதன் லேட்டின் வேர்ச்சொல்லுடைய அர்த்தமே “தற்போது” என்பதுதான். (Modo – Current). இந்த நேரடி அர்த்தத்தை தாண்டிய விரிவான பொருளிலும் “நவீன நாவல்” என்கிற சொற்றொடர் பொதுவாக உபயோகிக்கப்படுகிறது. தோராயமாக பதினாறாம் நூற்றாண்டு முதல்
- நவீன நாவல் -சிவமணியன் எதிர்வினை 15-Jun-2018நவீன நாவல் -விஷால்ராஜா நவீன நாவல் -எதிர்வினை, சுனீல் கிருஷ்ணன் விருதுவிழாவும் நாவல்விவாதமும் கொச்சின் துறைமுகப் பகுதி இயற்கையின் மாபெரும் கொடை. ஒரு புறம் இரண்டாகப் பிரிந்த பெரியாற்றின் கழிமுகமும்(estuary), மற்றொரு புறம் ஆலப்புழாவிலிருந்து , குமரகம் வரை நீண்டுள்ள, வேம்பநாடு ஏரி நீரும், நடுவில் backwater எனப்படும் உப்பங்கழிப் பகுதியும், கடலின் முதன்மை முகத்துவாரத்தில் அரபிக்கடலின் சீற்றமும், துறைமுக கட்டுமானப் பகுதிகள் என அந்த பகுதியில் படகு சவாரி செய்வது விழியை நிறைத்து மனதினை உள்நிரம்பி பொங்கி வழிய வைக்கும் ...
- நவீனநாவல்- கடலூர் சீனு எதிர்வினை 16-Jun-2018நவீன நாவல் -விஷால்ராஜா நவீன நாவல் -எதிர்வினை, சுனீல் கிருஷ்ணன் நவீன நாவல் -சிவமணியன் எதிர்வினை நவீன நாவல் எனும் கலைவடிவம் இங்கே தமிழில் நிலைபெறுவதற்கு பின்புலமாக செயல்பட்ட உலக வரலாற்று சூழல், அதில் திரண்டு வந்த தத்துவம், ஆகியவற்றை தொடர்த்து தமிழில் நிகழ்ந்த நவீத்துவ அடிப்படைககள் கொண்ட நாவல்கள் சிலவற்றை குறிப்பிட்டு எழுத்தாளர் விஷால்ராஜா அவர்கள் ஒரு வரையறையை தனது உரையின் முதல் பகுதியில் முன்வைத்தார். அது ஒரு பொதுவான வரையறை. அங்கிருந்து துவங்கி எனது தேடலை இவ்வாறு வகுத்துக் ...
- நவீன நாவல் -எதிர்வினைகள் 21-Jun-2018நவீன நாவல் -விஷால்ராஜா நவீன நாவல் -எதிர்வினை, சுனீல் கிருஷ்ணன் நவீன நாவல் -சிவமணியன் எதிர்வினை நவீனநாவல்- கடலூர் சீனு எதிர்வினை அன்பு ஜெ, எழுத ஆரம்பித்து முடிக்காத சிறுகதைகளும் கட்டுரைகளும் கடிதங்களும் கழற்றி நீக்க முடியாத குண்டலங்களைப்போல பலவடிவங்களில் என் உடலெங்கும் அசைந்தாடிக்கொண்டிருக்கின்றன. வரும் மாதங்களில் சிலவற்றையாவது முடித்து விடுவேன் என நினக்கிறேன். இப்போதைக்கு முக்கியமான ஒரு விஷயத்தை மட்டும் சுருக்கமாக எழுதலாம் என நினைக்கிறேன். கடலூர் சீனுவின் கடித்தில் உள்ள //வீழ்ச்சி ,கசாக்கின் இதிகாசம் ,பதினெட்டாம் அட்சக்கோடு , விஷ்ணுபுரம் , இத்தகு ...