- சிறுகதை அரங்கு- ஈரோடு அறிவிப்பு 03-Aug-2019
ஈரோட்டில் நண்பர்கள் ஒருங்கமைக்கும் சிறுகதைப் பயிலரங்கத்தில் இதுவரை 70 பேர் பங்கெடுப்பதாக பதிவுசெய்திருக்கிறார்கள். 100 பேர் வரை பங்கெடுக்க இயலும். ஆகவே இதுவரை பதிவுசெய்யாதவர்கள் பதிவுசெய்துகொள்ளலாம் என்று கிருஷ்ணன் தெரிவிக்கிறார்.
நிகழ்ச்சியில் சிறுகதைகள் மீதான வாசிப்புக்கும், எழுத்துக்குமான பயிற்சி அளிக்கப்படும். அரங்கை நடத்தும் எழுத்தாளர்கள் கீழே
மாணவர்களுக்கு கழிவு உண்டு. நேரில் பணம் அளிக்க விரும்புபவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்
ஜெ
சு.வேணுகோபால் 1
க.மோகனரங்கன்
சுனில் கிருஷ்ணன
நண்பர்களே,
வருகிற ஆகஸ்டு 10, 11 சனி காலை 10 மணி முதல் ஞாயிறுமதியம் 1 மணிவரை விஷ்ணுபுரம் ...
- ஈரோடு சிறுகதைகள் முகாம் – நிகழ்ச்சி நிரல் 05-Aug-2019
நாள் 1 (10-8-2019 சனி ) :
1. 10 to 11 am:
புதுமைப்பித்தனில் துவங்கிய தமிழ் சிறுகதைகளின் வளர்ச்சிப்போக்குகள் -ஜெயமோகன்
காண்க: https://erodeshortstorymeet.blogspot.com/2019/07/blog-post_45.html
11 to 11.30 am தேநீர் இடைவேளை
2. 11.30 to 12.30 pm:
எதார்த்த வாழ்வில் இருந்து நவீன வாழ்வுக்குள் நுழைந்த தமிழ் சிறுகதைகளில் நவீனத்துவம் – தேவிபாரதி
காண்க: https://erodeshortstorymeet.blogspot.com/2019/08/blog-post_85.html
3. 12.30 to 1.30 pm:
2000க்கு பின் தமிழ் சிறுகதைகள் – சுனில் கிருஷ்ணன்
காண்க: https://erodeshortstorymeet.blogspot.com/2019/08/blog-post_5.html
1.30 to 3 pm மதிய உணவு இடைவேளை
4. 3 to ...
- சிறுகதை அரங்கும் சித்தேஸ்வரன் மலையும் 14-Aug-2019
நான் மாலை ரயிலுக்கு ஈரோடு செல்வதாகத்தான் திட்டமிட்டிருந்தேன். ஆனால் முன்பதிவு செய்த பயணச்சீட்டைப் பார்த்தால் அதிகாலை ஆறுமணி. மாலை ஆறு மணி அல்ல. ஆகவே முழு இரவும் அமர்ந்து வெண்முரசு எழுதினேன். காலையில் அப்படியே கிளம்பி ரயிலில் ஏறிப் படுத்து கரூர் கடந்தபின் விழித்துக்கொண்டேன். ஒரு முட்டைப்பிரியாணி சாப்பிட்டேன். பிரியாணி மட்டுமே இருந்தன. மற்ற இரு பிரியாணிகளைவிட முட்டை பாதுகாப்பானது.
ஆனால் என் வாழ்நாளில் இப்படி ஓர் உணவை உண்ண நேரிட்டதில்லை. உணவு மோசமாக ஆவது இயல்பு, பொதுவாக ...
- மகரந்த வெளி – தமிழ் சிறுகதை உலகு தமிழகத்திற்கு வெளியே- சுனில் கிருஷ்ணன் 16-Aug-2019
தமிழக வரலாற்றில் புலம்பெயர்வு தொல்நெடுங்காலமாக நிகழ்ந்து வருகிறது. வணிகத்தின் பொருட்டு தென்கிழக்கு ஆசியத் தீவுகளுக்கு பயணித்ததாக இருக்கலாம். அல்லது தேசாந்திரியாக நிலமெங்கும் அலைந்து திரிந்ததாகவும் இருக்கலாம் அல்லது போருக்காக மண் நீங்கியதாகவும் இருக்கலாம். செல்லும் இடங்களில் தங்கள் பூர்வீக வாழ்வின் எச்சங்களை எப்போதும் விட்டு வந்தார்கள். பண்டிகைகளாக, சிற்பங்களாக, ஏதோ ஒரு சடங்காக பண்பாட்டு நினைவு பேணப்பட்டு வந்தது.
மிகப்பெரிய அளவிலான புலம் பெயர்வு என்பது ...
- மகரந்தவெளி – கடிதம் 18-Aug-2019
‘
மகரந்த வெளி – தமிழ் சிறுகதை உலகு தமிழகத்திற்கு வெளியே- சுனில் கிருஷ்ணன்
மகரந்த வெளி’ கட்டுரையை காலையில் வாசித்தவுடன் இதை எழுதுகிறேன். சுனில் கிருஷ்ணனின் உழைப்பின் மீது கொண்டுள்ள மரியாதை அவரது ஒவ்வொரு வெளிப்பாட்டிலும் அதிகரிக்கிறது. சிங்கை – மலேசியப் பயணத்தில் இன்னும் பல அனுபவங்களை இக்கட்டுரையில் அவர் தொகுத்து அளித்துள்ளார். அது மலேசிய – சிங்கை படைப்புகளை இன்னும் நெருக்கமாக அறிய வழியமைத்துள்ளது. ஒருவேளை குறிப்பிட்ட கால வரையறைக்குள் உருவான இலக்கிய வடிவங்களை ஒட்டிய பார்வையாக ...
- ஆயிரம் மணிநேர வாசிப்பு -சாந்தமூர்த்தி ஏற்புரை 19-Aug-2019
ஈரோடு சிறுகதை முகாமில் “1000 மணி நேர வாசிப்பு சவாலில் 766 மணி நேரத்தை கடந்ததன் பொருட்டு என்னைப் பாராட்டி பரிசு வழங்கிய போது நான் செய்த ஏற்புரையின் எழுத்துவடிவத்தை இணைத்துள்ளேன். நன்றி.
சாந்தமூர்த்தி.
வணக்கம்!
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு சரியாக 10-00 மணிக்கு தொடங்கிய கூட்டத்தைப் பார்க்கிறேன்.என்னுடைய கூட்டங்களை நான் 10-00 மணிக்கு தொடங்குவேன்.10-01 க்கு அல்ல.10-00 க்கு.ஒரு புதிய மாவட்டத்துக்கு செல்லும் போது அவர்களுக்கு என்னைத் தெரியாது.முதல் கூட்டத்தில் 400 பேர் இருக்க வேண்டிய இடத்தில் 50 பேர்தான் இருப்பார்கள்.மற்றவர்களுக்காக காத்திருக்காமல் 10-00 மணிக்கு தொடங்கி விடுவேன்.அடுத்தடுத்த ...
- ஈரோடு சிறுகதை முகாம் -கடிதம் 24-Aug-2019
அன்புள்ள ஜெ,
சுகம்தானே?
கடந்தவாரம் ஈரோட்டில் நடைபெற்ற சிறுகதை முகாமில் கலந்துகொண்டேன். தாங்கள் முன்னெடுக்கும் நிகழ்வில் கலந்துகொள்வது இதுவே முதல்முறை. ஆர்வத்தில் வெள்ளிக்கிழைமை மாலையே நிகழ்விடம் சேர நினைத்தேன். ஆனால் திங்கட்கிழமை பக்ரித் விடுமுறையை முன்னிட்டு, பொறுப்புமிக்க பேராசிரியர் ஒருவர் திங்கட்கிழமை வகுப்புகளை வெள்ளி மாலையிலேயே எடுக்க நேர்ந்ததால் பயணத்திட்டத்தை இறுதிநேரத்தில் மாற்றவேண்டியிருந்தது.
சனிக்கிழமை காலை 6மணி சுமாருக்கு ஈரோடு பேருந்துநிலையம் வந்தடைந்தேன். இராப்பயணம் எனக்கு எப்பவுமே தோதுபடாது. கால்கள் ரெண்டும் வீங்கிப்போயிருந்தன. என்னைப்போலவே ஒரு ஜீவன் பஸ் ட்ரைவரிடம் கவண்டச்சிபாளையம் வழிகேட்டுக்கொண்டிருந்தது. ...
- ஈரோடு சிறுகதை முகாம் ,இன்னோரு கடிதம் 27-Aug-2019
அன்பின் ஜெ,
சொல்புதிது குழுமத்தில் கிருஷ்ணன் அவர்களின் அறிவிப்பு வந்தவுடனேயே பதிவு செய்து விட்டேன். சிறுகதை முகாம் துளியளவும் ஏமாற்றவில்லை. பாரியின் பட்டியல் கூடிக் கொண்டே போனது; ஒரு கட்டத்தில் அவரே (வெள்ளி மாலையன்று!) ‘அநேகமாக இதற்கு மேல் பட்டியல் நீளாது’ என்று 45 கதைகளுடன் முடித்துக் கொண்டார். அனைத்துக் கதைகளையும் முகாம் துவங்குவதற்குள் வாசித்தாவது முடிக்க வேண்டும் என்று சங்கல்பித்துக் கொண்டு அவ்வப்போது வாசித்து சனியன்று காலைக்குள்ளாக 28-30 கதைகள் வாசித்து விட்டேன். ஆனாலும் இந்த அவசரகதி வாசிப்பென்பது ‘நாலுக்கு ரெண்டு ...
- தீவிரச் சிறுகதைகளும் பகடிச் சிறுகதைகளும் -சாம்ராஜ் 03-Sep-2019
தமிழ் இலக்கியத்தில் தீவிரச் சிறுகதைகள் எழுதபட்ட அளவுக்கு பகடிச் சிறுகதைகள் எழுதப்படவில்லை பொதுவாக தமிழர்களுக்கு தீவிரத்தில் இருக்கும் மோகம் இலக்கியத்திலும் பிரதிபலிக்கும். TMT முறுக்கு கம்பிகளை போல இலக்கியத்திலும் உணர்ச்சிகள் முறுக்கி கொண்டிருக்க வேண்டும் என கருதுவோர் உண்டு. இந்த தீவிர உணர்ச்சிகளிலும் பாவனைகள் நிறைய உண்டு. பாலியல் தொழிலாளி- விடுதியில் அவளை சந்திப்பது போன்ற வகையிலான கதைகள் நிறைய எழுதப்படுவதுண்டு. இவற்றில் பெரும்பாலும் பாவனையான மிகையான கதைகளே. “இல்லாத காட்டில் இல்லாத புலியை தேடும்” கதைகள். ...
- பகடி எழுத்து – காளிப்பிரசாத் 12-Sep-2019
தீவிரச் சிறுகதைகளும் பகடிச் சிறுகதைகளும் -சாம்ராஜ்
அன்புள்ள ஜெ,
சிறுகதை அரங்கில் சுனில் கட்டுரையைத் தொடர்ந்து அவர் விட்டு விட்ட பல எழுதாளர்களைப் பற்றிய விவாதம் எழுந்த்து. அந்த அரங்கில் சாம்ராஜும் தன் உரையில் ஒரு முக்கியமான பகடி எழுத்தாளரை விட்டுவிட்டார் என நான் கருதுகிறேன். தமிழின் முக்கியமான அந்த பகடி எழுத்தாளர் பற்றி நான் பேசிய உரையின் எழுத்து வடிவத்தை இணைத்திருக்கிறேன்
அன்றாடங்களின் அபத்தத்தை எழுதுதல்
அன்புடன்,
R.காளிப்ரஸாத்
***
- பகடியும் தமிழிலக்கியமும்- கடிதம் 17-Sep-2019
தீவிரச் சிறுகதைகளும் பகடிச் சிறுகதைகளும் -சாம்ராஜ்
அன்புள்ள ஜெ
சாம்ராஜ் அவர்கள் தமிழில் பகடி எழுத்து பற்றி எழுதியிருந்த கட்டுரையை வாசித்தேன். அவருடைய முதல்வரிகளிலேயே தமிழிலக்கியத்தைப்பற்றிய ஒரு பிழையான மதிப்பீடு இருப்பதுபோல எனக்குப்பட்டது. தமிழில் முழுக்கமுழுக்க பகடி எழுதிய, வேறொன்றையும் எழுதாத இலக்கியப்படைப்பாளிகள் இல்லை. ஆனால் தமிழில் எழுதிய எல்லா முக்கியமான படைப்பாளிகளும் ஆழமான பகடிக்கதைகளை எழுதியிருக்கிறார்கள். தமிழிலக்கியத்தின் வலிமையான ஒரு பகுதியாகவே பகடி எழுத்து இருந்துகொண்டிருக்கிறது
சாம்ராஜின் பிரச்சினை என்னவென்றால் அவர் அரசியல்பகடியை மட்டுமே பகடி என நினைக்கிறார். அரசியல்பகடி ...
- ஆங்கில இலக்கியம் இன்று, ஒரு துளிச்சித்திரம்- நரேன் 20-Sep-2019
எட்கார் ஆல்லன் போ
தற்கால ஆங்கில இலக்கியத்தில் குறிப்பாக 2010 க்குப் பிறகான நேரடி ஆங்கில எழுத்துக்களில் சிறுகதைகளின் இடம் மற்றும் அதன் போக்கை வாசகப் பார்வையாக அனுகுவதே இச்சிற்றுரையின் எண்ணம். நவீன இலக்கியத்தில் ஆங்கில எழுத்துலகின் மையமாக உருவெடுத்திருக்கும் அமெரிக்காவின் சிறுகதைகளை முன்வைத்தே ஆங்கில சிறுகதைகளின் இடத்தை அனுமானிக்க வேண்டியிருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் சிறந்த ஆங்கில சிறுகதைகளின் பட்டியலை நோக்குங்கால் பெருவாரியான சிறந்த கதைகள், விருது பெற்றவைகள் புலம் பெயர்ந்தவர்களின் கதைகளாகவே இருக்கிறது. அதற்கான காரணத்தை விளங்கிக் ...