விஷ்ணுபுரம் 2019 விருதுவிழாவில் கலந்துகொள்ளும் கே.ஜி,சங்கரப்பிள்ளை 1948ல் கொல்லம் அருகே சவறா என்னும் ஊரில் பிறந்தவர் கே.ஜி.சங்கரப்பிள்ளை. கொல்லம் எஸ்.என்.கல்லூரியிலும், கேரள பல்கலைகழகத்திலுமாக மலையாளம் முதுகலைப் படிப்பை முடித்தபின் 1971ல் மலையாள ஆசிரியராக பணியில் நுழைந்தார். எர்ணாகுளம் மகாராஜாஸ் கல்லூரில் முதல்வராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்

 

இடதுசாரி அரசியல்நம்பிக்கையாளராக திகழ்ந்த கே.ஜி.சங்கரப்பிள்ளை சமரசமற்ற களப்போராளி என்று அறியப்பட்டவர். எழுபதுகளில் இடதுதீவிர அமைப்புக்களின் முகமாக திகழ்ந்தார். அக்காலத்தில்தான் ‘பங்காள்’ போன்ற புரட்சிகரக் கவிதைகள் வழியாக கேரளமெங்கும் அறியப்பட்டார்.  மேடையில் உணர்ச்சிகரமாக நிகழ்த்துவதற்குரிய கவிதைகள் அவை. அதன்பொருட்டு எளிய கூரிய உரைநடையை கவிதையில் கையாண்டார். மலையாள நவீனக்கவிதை உரைநடைநோக்கி ஆற்றலுடன் வந்தணைந்தது கே.ஜி.சங்கரப்பிள்ளையின் கவிதைகளின் வழியாகவே. பிரசக்தி, சமகாலின கவித போன்ற இலக்கியச் சிற்றிதழ்களை நடத்தியிருக்கிறார். 1998ல் கேரளசாகித்ய அக்காதமி விருதும் 2002ல் கேந்திரிய சாகித்ய அக்காதமி விருதும் பெற்றார்

 

கே.ஜி.சங்கரப்பிள்ளை கேரளமனசாட்சியின் குரல் என அறியப்படுபவர். ஆகவே எல்லா தரப்புக்கும் எதிரி என்றும் திகழ்பவர். கவிதைகள் வழியாகவும் அரசியல் கட்டுரைகள் வழியாகவும் தொடர்ந்து மலையாளிகளிடம் பேசிக்கொண்டிருப்பவர்

 

 

=============================================================================================================

விஷ்ணுபுரம் விருந்தினர்-

 

1 கே.ஜி சங்கரப்பிள்ளை

 

2 அமிர்தம் சூரியா

3. யுவன் சந்திரசேகர்